Cover story: புத்தளம் சவூதி ஸ்டோர் : “வாப்பாவின் கனவை நிறைவேற்றினார் மகன் பஸால்..!! நூர் வீதியின் Food city யாக மாறிய சவூதி ஸ்டோர் – ஒரு விசிட்

· · 9812 Views

தலைமுறைகள் மாறும்போது  நடைமுறைகளில் மாற்றம் ஏற்படுவது இயற்கைதான்.  ஆனால்  இந்த தலைமுறை மாற்றத்தின் பிரதிபலனாக  புத்தளம் நகரின் நூர் மஸ்ஜித் பிராந்தியம்  கணிசமான அளவு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

s-1

அந்தத் துரித மாற்றங்களை ஏற்படுத்திவரும்  மாறுதல் காற்று இந்தப் பகுதியிலும் சரி, நகரத்தின இதர பகுதியிலும் சரி பொதுவாகப் பேசப்படுகின்ற ”சவுதி ஸ்டோர்“  இலும்  மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.  ஒரு தலைமுறை என்பது முப்பது ஆண்டுகள்.  சரியாக ஒரு தலை முறை முடிவுற்றபோது  ”சவுதி  ஸ்டோர்ஸ் ” பிரமிக்கத் தக்க மாற்றத்தை  பிரதேச மக்களுக்குக் காட்டி நிற்கிறது.

s-2

நிருமாணப் பணிகளுக்காக  மறைப்புக்களின் பின்னால் மறைந்து நின்ற “சவுதி ஸ்டோர்” இன்று காலை 7.00 மணியளவில்  கார் மேங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு அழகு முகம் காட்டும் பூரணச் சந்திரன்போல முகங்காட்டத் தொங்கியபோது  ”கெனல் ” வீதி உடாக அப்பாலும். இப்பாலும் செல்வோரை திரும்பிப் பாரக்க வைக்கிறது.

சரியாக ஒரு தலை முறைக் காலம்தான்.   அந்த சிறு பலசரக்குக் கடையின் தாபகர் மர்ஹும் அனஸ் 1985 இல் தனது சிறிய வீட்டுக்கு அருகில் தொடங்கி  முந்திய ரமழான் 27 ஆம் நாள் இறையடி  எய்தும் வரையில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.  அது அந்த குடுமபதுத் வாழ்வாதாரம்.  மகன் பfஸால் தந்தையோட இருந்து வியாபாரத்தை நடாத்திச் செல்ல திருமதி அனஸ்  கூட இடைக்கிடையே  அந்த வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதை  நூர் மஸ்ஜித் பிரதேசம் கண்டு வந்துள்ளது.

புழுதி படிந்த  ”கெனல்”  வீதியோரம்  அனஸ் வாழ்ந்த வீட்டை ஒட்டினாற்போல அமைந்திருந்த அந்த சின்ன பலசரக்குக் கடையில் கால மாற்றம் எற்படுத்திய பாரிய மாற்றம்தான்  இந்த புத்தம் புதிய  05 படிகள் ஏறிச் செல்லும்  , நவீன காலத்தின் ‌ தேவைக்கு ஏற்ப அமைக்கப்பட்ட ”மினி சுப்பர் மார்கட்”  பணியிலான  விற்பனை நிலையம்.   இந்தப் பகுதிக்கு அது மெருகூட்டுகிறது  என்பது எனது அபிப்பிராயம்.

நேற்று இரவு நான் படுக்கைக்குச் செல்லும் வரையில்  நவ சவுதி  ஸ்டோரின் திறப்பு விழா பற்றி அறிந்திருக்கவில்லை.   காலை பஜ்ர் தொழுகைக்காக வெளியே செல்ல தயாரானபோது  எனது கைபேசி மேல் ஒட்டப்பட்டிருந்த சின்ன ஒட்டத் தாளில் எனது மகளில் சிறு குறிப்பு இருந்தது ” You have been invited to the opening ceremony of Saudi Stores” . கட்டாயமாகக் கலந்து கொள்ள  வேண்டும் என தீர்மானித்துவிட்டு பள்ளிவாயிலுக்குப் போகும் வழியில் புத்தம் புதிய ஸவுதி ஸ்டோரின் உரிமையாளர் பfஸால் தனது தற்காலிகக் கடையில் இருந்து அந்த நேரத்திலும் பொருட்களை தனது புதிய வியாபார நிலையத்திற்கு மாற்றிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

காலை 7.00 மணிக்குத்தான் திறப்பு விழா.  ஆனால் 10 நிமிடங்களுக்கு முன்னமே சென்றேன்.  ஆனால் திறப்பு விழாவுக்காக அதன் உரிமையாளர் பfஸால் தனது இளம் மனைவி  ரோஜியாவுடன் அங்கு வந்து சேர அரை மணி நேரம்  தாமதமாகிவிட்டிருந்தது.

வாசலில் வைத்து  பெருமைக்குரிய அந்த நவ விற்பனை நிலையத்தின் உரிமையாளர் தம்பதிகளை ஒரு படம் எடுத்துக் கொண்டு உள்‌ளே நுழைந்தபோது ஆச்சரியமாக இருந்தது. உட்புறம் எப்போதும் இருளாக இருக்கும் தனது தந்தையின் சின்ன பலசரக்குக் கடையில்  தந்தைக்கு உதவியாக சதாவும் அந்தக் கடைக்குள்ளேயே சிறைபட்டுக் கிடந்த  பfஸாலுக்கு இப்படி ஒரு கற்பனையை  யாராவது விசயம் தெரிந்த ஒருவர்தான் கொடுத்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அது பற்றி அவரிடம் கேட்டேன்.

ஒரு மினி சுப்பர் மாரகட் போல இவ்வளவு நேர்தியாக செய்ய யாராவது வழி காட்டினார்களா?”

“இல்லை…… இல்லை……. இந்தக் கடையை இப்படிச் செய்ய வேண்டும் என்பது எனது வாப்பாவின் கனவு. அவர்கள் காலமாகுமுன்னர் இதற்கான  திட்டத்தை வகுத்திருந்தார்கள்.  சிறு தொகை பணமும் அற்காக ஒதுக்கி இருந்தார்கள். 

அதிலிருந்தும், ஒரு சிறு காணித் துண்டை விற்பனை செய்ததன் மூலமும்  இதை செய்யத் தொடங்கினேன். எல்லோருடைய ‌ஆலோசனைகளும் கிடைத்தன. அதற்கு மேல் இறுதி முடிவு என்னுடையதாக இருந்தது.   எவ்வளவு  செலவாகியது என்று கணக்குப் பார்கவில்லை. கணக்குப் பார்க வேண்டாம் என்றுதானே  நமக்கெல்லாம் பெரியவர்கள் சொல்லித் தந்துள்ளார்கள். எனவே அல்லாஹ்வின் உதவியால் இந்த அளவுக்கு செய்து முடித்துள்ளேன் என அமைதியாகச் சொல்கிறார்.  எமக்கு ஆச்சரியமாகக் கூட இருந்தது.

s-3

உள்ளக அமைப்பு மிக நேர்த்தியாக, அழகாக இருக்கிறது. அவதானிப்பு மேசையில் நவீன Cash Register இயந்திரம் இருக்கிறது.  நேர்த்தியான  Cash Counter,  சுற்று நாற்காலி.  உண்மையிலேயே இந்த பிரதேசத்துக்கு இந்த மினி சுப்பர் மார்கட் “ஸவுதி ஸ்டோர்”  ஒரு தனித்துவம்.

வாழ்த்துச் சொல்லி விட்டு முதல் வியாபாரமாக ஒரு பேனாவையும் வாங்கிக் கொண்டு விடைபெற்றுக் கொண்டேன்.

  • அப்பாஸ் ஷரீப்

 

  • படங்கள் : முகுந்தன் 

5 comments

  1. கம்பி கூண்டிட்க்குள் இருந்த அனஸ் காக்கவும் , பசாலும் இல்லை கூடும் இல்லை மாறியது உமது கே கே வீதி மட்டுமா எமது மேலேரியா ….. நோ நோ Canal street உம் தான்……

  2. Masha allah.. I am really happy to hear this; One of my class mates achieving such status and creatively offering different things to our society which can change mindset our society..
    May allah swt accept him and bless him in his business.

    Rinas Mohamed

  3. Masha allah..great example and achievement for contemporary and next generation…alhamdhu lillah…well done fazal…

Leave a Reply

Your email address will not be published.