Cover story : நாட்டை துவம்சம் செய்த பிரபாகரனுக்கு சிலை வைத்தாலும் குற்றமில்லை,ஆனால்  நாட்டுக்கு ஒருஅச்சுருத்தலையும் ஏற்படுத்தாத முஸ்லிம்களை அரபு நாட்டுக்குஅனுப்பவேண்டுமென்று கூறிய ஞானசார தேரரை நம்பலாமா..?

· · 636 Views

எம்.எச்.எம்.இப்றாஹிம்

 

பொதுபல சேனாவுடன் பேசுங்கள் என்று ஒரு அமைச்சர் என்னிடம்வேண்டிக்கொண்டதன் காரணமாகவேநாங்கள் உலமா சபையின்உதவியுடன் பொதுபலசேனாவுடன்  பேச முயன்றோம் என்று கூறும்அசாத்சாலிஅவர்கள்,

 

 

அந்த அமைச்சர் யார் என கூறவில்லை.

 

 

 

கடந்த காலங்களில் பொதுபலசேனாவை பின்னாலிருந்துஇயக்குவது கோதாபாய ராஜபக்ஸ என்று ஒன்றுக்கு நூறுதடவைகூக்குரல் இட்டவர்தான் இந்த அசாத்சாலி அவர்கள், இன்று அதேஅசாத்சாலி அவர்கள் இந்த பொதுபலசேனாவை பின்னாலிருந்துஇயக்கும் கோதாபாயாவுடன் பேசுவதற்கு பதிலாக கூலிப்படையானபொதுபலசேனாவுடன் பேச முற்பட்டிருப்பது நகைப்புக்குரியவிடயமாகவே தெரிகின்றது.

 

 

 

 

இந்த பொதுபலசேனா தங்களுடைய முஸ்லிம் விரோதசெயல்பாடுகளை நிறுத்துவதற்கு ஒத்துக்கொள்கின்றது என்றுவைத்துக்கொள்வோம், அப்படியென்றால் கோதாபாயவோ, மஹிந்தவோ வேறொரு தீய சக்தியை உருவாக்க மாட்டார்கள் என்றுஎன்ன உத்தரவாதம் உள்ளது என்று அசாத்சாலி அவர்களினால்உறுதிப்படுத்த முடியுமா என்று கேட்க வேண்டியுள்ளது.

 

 

 

 

அதேநேரம் மஹிந்த அரசாங்கம்தான் இந்த பொதுபலசேனாவைபின்னாலிருந்து இயக்குகிறதென்ற வாதம் இவர்களுடையதற்போதைய நடவடிக்கைகள் மூலம் பொய்யாகி வருகின்றதுஎன்பதே உண்மையாகும்.

 

 

 

 

இந்த பொதுபலசேனா என்ற இயக்கம் முஸ்லிம்களை சீண்டியதுமுஸ்லிம்களுடைய கொள்கைகளையோ,நடவடிக்கைகளிலோசந்தேகப்பட்டு அல்ல என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்,அவர்களுக்கு முஸ்லிம்களைப்பற்றியோ, அவர்களின் மார்க்கத்தைப்பற்றியோ பூரண அறிவு இல்லாதன்காரணத்தினால்தான் அவர்கள் முஸ்லிம்களை சீண்டினார்கள்என்று யாராவது கூறுவாராகயிருந்தால் அவர்களை போன்றமுட்டாள்கள்  எவர்ய்ம் இருக்கமுடியாது.

 

 

 

 

பொதுபலசேனாவின் கடந்தகால நடவடிக்கைகள் தமிழ்சமூகத்தையோ,அல்லது சுயாட்சி கேட்டுப் போராடும் தமிழ்தலைவர்களையோ இலக்கு வைப்பதற்கு பதிலாக,  இந்த நாட்டுக்குஎந்தவித அச்சுருத்தலையிம் மேற்கொள்ளாத முஸ்லிம்களின் மீதுசென்றதன் காரணம் என்ன என்ற கேள்விக்கு ஆழமாக சிந்தித்தால்விடை கிடைத்துவிடும்.

 

 

 

 

நாட்டை துவம்சம் செய்த பிரபாகரனுக்கு சிலைவைத்தாலும்குற்றமில்லை என்று கூறும் ஞானசாரா அவர்கள்,நாட்டுக்கு ஒருஅச்சுருத்தலையும் ஏற்படுத்தாத முஸ்லிம்களை அரபு நாட்டுக்குஅனுப்பவேண்டுமென்று ஏன்? கூறுகின்றார் என்றாவது நாம்புரிந்துகொள்ள மறந்து விடுகின்றோம்.

 

 

 

 

 

இந்த பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பு மஹிந்தவின்அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒருகுழுவேயாகும்,இவர்கள் மூலம் முஸ்லிம்களை சீண்டி அதன் மூலம்மஹிந்த அரசாங்கத்தை வீழ்த்தப்போட்ட திட்டத்திற்குமுஸ்லிம்களும் பழியாக்கப்பட்டார்கள் என்பதே உண்மையாகும். அதே நேரம் மஹிந்தவும் அந்த சதிகளுக்கு பழியானார் என்பதும்தற்போது நடப்பவைகளை பார்க்கும் போது தெளிவாகி வருகின்றது.

 

 

 

 

 

அதேபோல இந்த இனவாத குழுவுக்கு பூரணபாதுகாப்புக்களைவழங்குவதே இந்த நல்லரசாங்கம்தான் என்ற விடயமும் இப்போதுஅவர்களின் நடவடிக்கை மூலம் வெளியாகி வருகின்றது.

 

 

 

 

 

இப்போது விடயத்துக்கு வருவோம்,

இன்று ஞானசாரா அவர்கள் முஸ்லிம்களுடன் ஆரஅமர இருந்துபேசுவதற்கு முன்வருவதன் காரணம் என்ன?

 

 

 

 

 

அதற்கு இந்த நல்லராங்கமே களம் அமைத்துக்கொடுப்பதன் மர்மம்என்ன?

 

 

 

 

 

அதற்கு அசாத்சாலி அவர்களின் உதவியை நாடியதன் காரணம்என்ன?

 

 

 

 

 

என்ற கேள்விகளுக்கு விடைதேடினால் பல ரகசியங்களுக்கு விடைகிடைத்துவிடும்.

 

 

 

 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் வசமாக மாட்டிக்கொண்டஞானசாரா அவர்களை காப்பாற்றும் நோக்கத்துக்காகவே, இந்தஅரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் அசாத்சாலி அவர்களிடம்உதவிகோரிய விடயத்தையும், இந்த விடயத்தில் நாம்  நோக்கவேண்டியுள்ளது.

 

 

 

 

 

இதனை தனது விருப்பமான அரசாங்கமான நல்லாட்சிஅரசாங்கத்தை காப்பாற்றும் ஒரு பாக்கியமாகவும், நல்லசந்தர்ப்பமாகவும் அசாத்சாலி அவர்கள் பயன்படுத்திவருகின்றார்.

 

 

 

 

 

இதே கோரிக்கையை மஹிந்த அரசாங்கத்தில்விடுக்கப்பட்டிருந்தால் நிச்சயாமாக அசாத்சாலி அவர்கள் அந்தசந்தர்ப்பத்தை மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராகவேபயன்படுத்தியிருப்பார் என்பதே உண்மையாகும்.

 

 

 

 

 

இருந்தாலும் ஞானசாராவை காப்பாற்றும்விடயத்தில்,அசாத்சாலியவர்கள் புத்திசாலித்தனமாக,இதற்காகஉலமா சபையினரையும், இன்னும்பல புத்திஜீவிகள் என தங்களைகூறிக்கொள்பவர்களையும் துணைக்கு சேர்த்துக்கொண்டுபொதுபலசேனாவுடன் பலகட்ட ரகசிய பேச்சுவார்த்தைகளைநடத்திவருகின்றார் என்பதையும் ஊடகங்கள் வாயிலாக நாம்அறிந்து வருகின்றோம்.

 

 

 

 

அந்த பேச்சுவார்த்தையின் பயனாக ஞானசாரா அவர்கள்இஸ்லாத்தை பற்றியும், இன்னும் பல பிரச்சினைகளையும்புரிந்துகொண்டுள்ளார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகிவருவதையும் நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

 

 

 

 

 

அதன்  ஒரு அங்கமாக பொதுபலசேனா என்ற இயக்கம் வடக்குவாழ்முஸ்லிம் மக்களுக்கு 100 வீடுகளை கட்டித்தறுகின்றோம் என்றும்அறிக்கைவேறு விட்டுள்ளார்கள்.

 

 

 

 

 

இதனை எந்தளவு முஸ்லிம் சமூகம் நம்பும் என்ற கேள்விக்கப்பால், இவர்கள் இந்தளவு இறங்கி வருவதன் நோக்கமென்ன என்றகேள்விக்கு திருப்தியான பதில் இதுவரை கிடைக்கவில்லை.

 

 

 

 

 

இந்த இனவாத குழுவினால் கடந்தகாலங்களில் முஸ்லிம்களுக்குஏற்பட்ட பொருளாதாரஇழப்புக்கள்,அவமானங்கள்,பொய்க்குற்றச்சாட்டுக்கள்அனைத்துக்கும் ஞானசாராவும் அதன் இயக்கமும் பகிரங்கமன்னிப்பும் கேட்கவைப்பதற்கு அசாத்சாலிஅவர்களினாலும்,அவருடை அனுசரணையாளர்களாலும் முடியுமா?

என்ற கேள்வியும் கேட்கப்பட வேண்டியுள்ளது.

 

 

 

 

 

 

ஆகவே, ஞானசாரா அவர்களும், அவருடைய இயக்கமும் இன்றுமுஸ்லிம்களிடம் பணிந்து நிற்பதற்கு காரணம்,தன்னுடைய சுயநலனுக்காகத்தான் என்பதுடன்,அதற்காக அசாத்சாலி அவர்களும்அவரது புத்திஜீவிகள் கூட்டமும் நன்றாகவே திட்டமிட்டுஞானசாராவை காப்பாற்ற முயற்ச்சிக்கின்றார்கள் என்பதுதெளிவாகின்றது.

 

 

 

 

 

இதற்கு நல்லாட்சி அரசாங்கமும் பின்னாலிருந்து செயல்படுகின்றதுஎன்பதும் உண்மையாகி வருகின்றது.

இதற்காகத்தான் நாங்கள் சொல்லுகின்றோம்,

 

 

 

 

 

முஸ்லிம் சமூகம் யதார்த்தத்தை புரிந்து கொண்டு நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? சுயநலவாதிகள் யார்? தங்களுடைய ஆசாபாசங்களுக்காக முஸ்லிம்சமூகத்தை பழிகடாவாக்கியது யார்?

 

 

 

 

என்பதை இனம் கண்டு அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைக்காமல் ,முட்டாள்களாக இருக்க்கும் முஸ்லிம் சமூகத்தை அந்தஇறைவன காப்பாற்ற முடியாது என்பதே யதார்த்தமாகும்.

 

 

எம்.எச்.எம்.இப்றாஹிம்

கல்முனை.

Leave a Reply

Your email address will not be published.