One women Army : கத்தியின்றி..ரத்தமின்றி சமூகத்திற்காக போராடும் “மஷ்கூரா நிசாம்தீன்” – யார் இவர் ..? என்ன செய்கிறார்..?

· · 4305 Views

“Equality” ,  ” Equity”  இவ்விரு ஆங்கிலப் பதங்களுக்கும் இடையில் மருட்சியான  பாரிய வித்தியாசம் இருந்தாலும் அவற்றின் தமிழ் சொற் பிரயோகத்திலும் அந்த  மருட்சி உள்ளது.  இதற்கு இதுதான் கருத்து அல்லது பொருள் என்று புரிந்து கொள்ளக்  கூடியதாக இருந்தாலும்  இதற்கு இதுதான் சரியான  தமிழ் சொற் பிரயோகம் என்பதை துறை சார்ந்தவர்களால் மட்டும்தான்  சொல்ல முடியும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

mashkoora-2

நேற்று பின்னந்திப் பொழுதில் சகோதரி நிஸாம்தீன் மஷகூரா முழப்ஃபரை ”புத்தளம்டுடே” சார்பாக சந்தித்தபோது இங்கிருந்துதான் அவர் தான் முன்னெடுக்கும்  ”பெண்கள் குரல் அல்லது பெண்கள் கருத்து செவிமடுக்கப்பட வேண்டும்” என்ற  போராட்ட மூல மந்திரமாகக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.   பெண்களில் அரசியல் பிரவேசம்  பற்றி வாதிக்கப்படும் இந் நாட்களில் அவரது தர்க்க நியாயங்கள் பற்றியும் கேட்டறிய வேண்டும் என்பதே எமது சந்திப்பின் பின்னணி.

நகரத்தில் இயங்கும் மகளீர் அமைப்புகளில்  முன்னணி அமைப்பாக திகழும்  ”அன்வா” அமைப்பின் ”சமூக செயற்பாட்டு ஒருங்கிணைப்பாளராக,  ” CHANGE”  அமைப்பின்  Pressure Group” இன் அங்கமாக,  மகளிர் விவகாரம் தொடர்பாக தனது சொந்த  நிகழ்வுப் பத்திரத்தின் கீழ் செயற்படுபவராக நகரம் இவரை வெகுவாக இனங் கண்டு வந்துள்ளது என்று அவரின் மேதா விலாசத்தைக் குறிப்பிடலாம். மந்த மாருதம் போல  சாந்தமே உருவான  நிஸாம்தீன்  ஆரியரின்  மகள்   மஷ்கூரா   ஒரு  சண்டமாருதம். ஒரு அன்பு மனைவி, பாசமுள்ள தாய் என்ற பாத்திரங்களுக்கு அப்பால்  அநியாயம் கண்டு பொங்கி எழுந்து உணர்வுகளைக் கொட்டிக் கொப்பளிக்கும்  ஒரு வித்தியாசமான  பாத்திரம் இவர் வகிப்பது.

எந்தவொரு நாட்டிலும்  ஆட்சி அமைப்புகளின் தொடக்கப் பள்ளி  உள்ளூராட்சி அமைப்புக்கள்தான்.  இந்த நாட்டின்  பேர் போன அரசியல் தலைமைத்துவங்கள்  இந்தப் பள்ளியில் படித்தபின் மேலோங்கிச் சென்ற வரலாறு உள்ளது.  எனவே குறைந்த பட்சம்  புத்தளம் நகர சபையில்  பெண்கள் குரல் கேட்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்கிறார்.

masku

நகர நிருவாகம் என்பது அரசியல் அல்ல. அது நகரத்தின் அபிவிருத்தி மற்றும் அதனோடு இணைந்த செயற்பாடுகள் சம்பந்தப்பட்டது.   எனவே  அங்கு பெண்கள் குரல் ஒலிக்கப்பட வேண்டும் அல்லது அங்கிருந்து அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என்பதுதான்  மஷ்கூராவின் ஒட்டு மொத்த போராட்டம் .

“Irony” என்ற ஆங்கிலப் பதத்துக்கு  பொருத்தமான  தமிழ் பதத்தை  எந்த அகராதியும் எனக்குத் தரத் தவறிவிட்டது. இதன் கருத்து அல்லது பொருள்  நிலவும் நிலைமைக்கும், அதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதற்கும் இடையில் ஒன்றுக் கொண்டு தொடர்பில்லாமல் இருந்கும் நிலை.  இதைப் புரிந்து கொள்ள முடியமானால்  மஷ்கூராவின் நிலைப்பாடும் அதுதான்.

masu

பெண்களிக் குரல்  ஆட்சி மன்றங்களில் ஒலிக்க வேண்டும், பெண்கள் நகராட்சி மன்றங்களில் சாதாரண  மக்கள் பிரதிநிதிகளாக அன்றி  தலைவர்களாக, பிரதி தலைவர்களாகக் கூட இருக்க வேண்டும் என்பது அவர் போராட்டம்; ஆனாலும்  நேரடியான அரசியலில் தனது பங்களிப்பைச் செய்யும் எண்ணம் அவரிடம் இல்லவே இல்லை என்பதை வலியுறுத்தி, வலயுறுத்திச் சொல்கிறார். டாக்டர் இல்யாஸ் அவர்களின் அன்பு மகள்  யமீனா,  ஊரறிந்த சித்தி ஸலீமா போன்றோர்  மக்கள் பிரதிநிதித்துவத்துக்கு சாலப் பொருத்தமானவர்கள் என்று அறிமுகம் செய்கிறார்.

சமுகத்திலே  பலர்  வைத்தியர்களாக, பொறியிலாளர்களாக படித்து உயர்வு பெற வேண்டும் என்ற ஆவல் சமுத்தில் பலருக்கு இருக்கலாம்.  ஆனால் அவ்வாறு நினைப்பவர்கள்  வைத்தியர்களாக முடியாது.   அதற்கு உரியவர்கள்தான் அந்த நிலைக்கு வரவேண்டும்.  எனவே   பெண்கள் அரசியல் பங்களிப்பு ‌வேண்டும் எனக் குரல் கொடுப்பவர்கள்  அரசியல் வாதிகளாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருக்கவும் முடியாது என்று வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறார்.

maskur

எது எவ்வாறாக இருந்தாலும் தீர்மானம் எடுக்கும் இடங்களில் தான் அங்கம் வகிக்க வேண்டும் என்பது இவர் கனவு.  ஒரு அரசியல் கட்சியின்  உயர்  பீடத்து  High Command  இல்  ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்ற  அபிலாசை தனக்கு இருப்பதை தெட்டத் தெழிவாகத் தெரிவிக்கிறார்.

மஷ்கூராவின்  ” பெண்கள் அரசியல் பங்களிப்பு ”  கொள்கை எங்கிருந்து வந்தது எனக் கேட்கப்பட்டபோது   சிறிது காலத்துக்கு முன்னர் முன்னாள் நகர பிரா கே.ஏ. பாயிஸ் அறிமுகம் செய்த   ”புத்தளம் பாராளுமன்றம்”  அமைப்பின் பெண்கள் பிரதிநிதியாகப் பங்கெடுத்த நாள் முதல் அவ்வெண்ணம் தன் மனத்தில் உருவானது என்று கூறுகிறார்.

ஆயினும் ”புத்தளம் பாராளுமன்றத்தில்” தான் வகிப் பங்கு, மற்றும் அங்கு தான் வெளிக் கொணர்ந்த கருத்துகளால்  சில போது தனது வாழ்வு அடித்தளத்தோடு ஆடிய நிலை ஏற்பட்டதென  தனது வாழ் நாளில் அனுபவிக்க நேரந்த மிகக் கசப்பான நிழக்வுகளை  நம்முடன் பகிர்ந்து கொண்டார்.   அந்த நாட்களில் மாத்திரமல்ல இந்த நாட்களிலும் அவைகள் மறக்க முடியாவிட்டாலும்   நி‌னைத்துப் பார்கவே மனம் இடம் தராதவையாக அவரின் மனத்தின் ஆழத்தில் பதிந்து கிடக்கிறன்ன.

இன்றும் கூட  பிரபல அரசியல் பிரபல்யங்களிடமிருந்தும் அவர்களின் ஆதரவாளர்களாலும் தொடர்ந்தும் தான் மான்சீகமாகவும், கடும் வார்த்தைப் பிரயோகங்களாலும்  துன்புறுத்தப்படுவதாக முறைப்படுகிறார்.சில விடயங்களைக் கேட்கும் போது “இந்த அரசியல்வாதிகளும் ” மற்றும் அவரின் சில ஆதரவாளர்கள்  இன்னும் மாறவில்லை என்பது போல் தெரிகிறது. இப்படியான துன்புத்தல்கள் தொடருமானால் புத்தளம் டுடே கண்டிப்பாக அதனை சமூகத்திற்கு சொல்ல வேண்டிய தேவை ஏற்படும்.

மோதல்கள் என்பது கௌரமிக்க கருத்து ரீதியாகவே இருக்க வேண்டுமே  தவிர, உணர்வுகளுடன், வாழ்க்கையுடன் விளையாடுவதாக இருக்கக் கூடாது.

புத்தளத்தின்  ”அந்நூர்” வானொலிச் சேவை மூலம்  தனது கொள்கைப் பரப்பலை ஆரம்ப காலத்தில் முன்னெடுத்து வந்ததையும்   அந்த வானொலிச் ‌சேவையின்  பெயரை அடிப்படையாக வைத்து அதில் பங்களிப்புச் செய்து நகர மகளிரால் அமைக்கப்பட்ட அமைப்புத்தான்  ”அன்வா” மகளிர் அமைப்பு என சிறு விளக்கம் ஒன்றைத் தருகிறார்.

நிறைவே அவரிடம் இருந்து கேட்டுக் கேட்டு எழுதலாம் ஆனாலும்  Time and Space பிரச்சினை எமக்குள்ளது.  எனவே மஷ்கூராவிடமும் ‌அவரின் அன்புக் கணவர்  முழப்ஃபர் அவர்களிடமும்  விடைபெற்றுக் கொண்டோம்.

அப்பாஸ் ஷரீப்

 

One comment

  1. அவரின் முயற்சிகள் வெற்றியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
    இவரைப் போன்ற பெண்கள் நமதூருக்கு அவாசியம் தேவை.
    மஸ்கூரா தங்கைக்கு எனது வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.