” நாம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்ல..!! ஞானசாரர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு – முஸ்லிம் எம்.பி. க்கள் குழம்பிப் போய் இருக்­கி­றார்கள் என்கிறார்

· · 664 Views

நாட்டில் சக­வாழ்வும் நல்­லி­ணக்­கமும் தேசிய ஒரு­மைப்­பாடும் உரு­வா­கு­வ­தற்கு என்னைக் கைது செய்ய வேண்­டு­மென்றால் கைது செய்­யுங்கள். நாட்டின் நன்­மைக்­காக, இன நல்­லி­ணக்­கத்­துக்­காக நான் சிறைக்குச் செல்லத் தயா­ராக இருக்­கிறேன் என பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­பொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார். முஸ்லிம் அமைச்­சர்­களும். எம்.பி. க்களும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சந்­தித்து ஞான­சார தேரரை கைது செய்­யு­மாறு வலி­யு­றுத்­தி­யுள்­ளமை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்; நான் முஸ்­லிம்­க­ளுக்கு … Continue Reading →

Read More

Special news :”பெளத்த லேபல்களை ஒட்டிக்கொண்டு பெளத்த விரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்..!!எதிர்ப்பாராவிதமாக பிரதமர் காட்டம் – Full story

· · 1338 Views

– ஏ.எல்.எம்.சத்தார், எம்.ஏ.எம்.ஹஸனார் – பெளத்த லேபல்களை ஒட்டிக்கொண்டு பெளத்த விரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்கிறார் பிரதமர் இந்த நாட்டில் சட்­டத்­தையும் சமா­தா­னத்­தையும் நிலை நாட்ட பிரச்­சி­னை­களை பேச்­சு­வார்த்­தைகள் மூலம் தீர்த்துக் கொள்­வ­தற்கு எல்லா வழி­க­ளிலும் நாம் நட­வ­டிக்கை எடுத்துக் கொண்­டி­ருக்­கிறோம். சிறு கூட்­டத்­தினர் வேண்­டத்­த­காத செயற்­பா­டு­களால் சட்­டத்தை சிதைக்க முய­லு­வதை நாம் அனு­ம­திக்­க­மாட்டோம். நாட்டின் நல்­லி­ணக்­கத்­தையும் மத ஒரு­மைப்­பாட்­டையும் உரு­வாக்­கு­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவின் தலை­மை யில் சமய செயற்­பா­டு­க­ளுக்­காக வெவ்­வேறு அமைச்­சுகள் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளன … Continue Reading →

Read More

மதத்­த­லை­வர்கள் – ஜனா­தி­பதி சந்­திப்பு : ” ஞான­சார தேரர் ஏன் அழைக்­கப்­பட்டார்?..ஞான­சா­ர ­தேரர் என்ன கூறினார்?..ஏன் இந்த மத­வாதம்?

· · 827 Views

A.R.A.Fareel நாட்டின் தெருக்­க­ளிலும் ஊடக மாநா­டு­க­ளிலும் மற்றும் மேற்­கொள்­ளப்­பட்ட ஆர்ப்­பாட்­டங்­க­ளிலும் இந்­நாட்டை தாய்­நா­டாகக் கொண்­டுள்ள முஸ்­லிம்­களின் புனித குர்ஆன் அவ­ம­திப்­புக்­குள்­ளா­னது. பௌத்த கடும்­போக்­கு­வா­திகள் குறிப்­பாக பொது­ப­ல­சேனா இந்த செயற்­பா­டு­களைத் திட்­ட­மிட்டு முன்­னெ­டுத்­தது. முஸ்­லிம்கள் உயி­ரிலும் மேலாகக் கருதும் புனித குர்­ஆனை மாத்­தி­ர­மல்ல அதையும் கடந்து அல்­லாஹ்வின் மீதும் அவர்கள் விமர்­ச­னங்­களை நிறைத்­தார்கள். நிந்­தித்­தார்கள். இந்­நி­லையில் நாட்டில் மீண்டும் ஓர் இன முறு­கலை ஏற்­ப­டுத்தி அசா­தா­ரண நிலையை உரு­வாக்க முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. இதில் அர­சியல் பின்­பு­லமும் இருக்­கி­றது என உளவுப் … Continue Reading →

Read More

Special news : ‘ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்..!! ஜனாதிபதி, இன்றைய முஸ்லிம் எம்.பி.க்களுக்கிடையிலான சந்திப்பின் போது உறுதி வழங்கினார் –

· · 7194 Views

ஞானசாரரைக் கைது செய்யும் எந்த நடவடிக்கைகளுக்கும்  நான் ஒரு போதும் தடையாக இருந்ததில்லை என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன இலங்கை முஸ்லிம் எம்.பி.க்களிடம்   தெரிவித்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற ஜனாதிபதி – முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது, ” ஜனாதிபதியின் உத்தரவுக்கமையவே ஞானசார தேரோ இன்னும் கைது செய்யப்படவில்லை “என முஸ்லிம் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் நேரடிக் கேள்வி எழுப்பியதற்கே ஜனாதிபதி இந்த மறுப்பை வெளியிட்டார் … Continue Reading →

Read More

Breaking news : “இன்றைய பிரதமருடனான முஸ்லிம் எம்.பி.க்கள் சந்திப்பில் ஞானசாரர் தொடர்பில் அமைச்சர் றிஷாத்,நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியல்ல ஆகியோருகிடையில் கடும் வாய்த்தர்க்கம் ” !! அரண்டு போன பிரதமர்

· · 4455 Views

ஞானசார தேரர் மீது பல முறைப்பாடுகள் செய்யப்பட்டும் அவற்றுக்கு அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தொடர்பில் நேற்று அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தேர்தல் முறை மாற்றம், அதிகாரப் பகிர்வு தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதான அமைச்சர்கள் கலந்து கொண்ட உயர் மட்டக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. ஞானசார தேரரின் நடவடிக்கையால் முஸ்லிம்கள் மன வேதனையுடனும், ஆத்திரத்துடனும் இருப்பதாகவும் அவரைக் கட்டுப்படுத்துமாறு நாங்கள் எத்தனையோ தடைவ கூறிய போதும் அவர் எல்லை கடந்தே செல்கின்றனர்.நான் … Continue Reading →

Read More

ஞானசாரரை, தேரர் என்பதா..சேர் என்பதா..? அவரை எவ்வாறு அழைப்பது..?அவருக்கு எதிராக அனை திரள சிங்கள மக்களுக்கு அழைப்பு

· · 641 Views

ஞானசார தேரர் சிறுபான்மை இன மக்களின் சமயங்களை இழிவுபடுத்துவதன் மூலம் புத்தரின் போதனைகளை அவமதித்து செயற்படுகின்றார். அவரை தேரர் என்று அழைக்க முடியுமா என தெரியவில்லை என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், கடந்த காலத்தில் நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு செயற்பட்டு … Continue Reading →

Read More

Breaking news : ஜெயலலிதா காலமானாரா..? 1,650 துணை ராணுவப்படை வீரர்கள், 2000 பொலீசார் அப்பலோவைச் சுற்றிக் காவல்

· · 904 Views

தமிழகத்தில் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய 1,650 துணை ராணுவப்படை வீரர்கள் சென்னைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடமாக உள்ளதால் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருக்கட்டமாக, பெங்களூருவில் இருந்து துப்பாக்கி ஏந்திய 1,500 துணை ராணுவப்படை வீரர்கள் சென்னைக்கு பயணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை அப்பல்லோவை சுற்றி ஏற்கனவே 2,000 பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு … Continue Reading →

Read More

Cover story : மட்டகளப்பில் ஞானசார, ரத்ன தேரர் குழப்படி செய்த போது தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தனர்..!! வெளிவரும் உண்மைகள்

· · 2418 Views

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமங்கல ரத்ன தேரர் மற்றும் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நீதிமன்ற உத்தரவையும் மீறி செயற்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. நீதிமன்ற உத்தரவை மீறி அம்பிட்டிய சுமங்கல தேரர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் மட்டக்களப்புக்கு செல்ல முயன்ற கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பொதுபலசேனா குழுவினரை வெலிக்கந்தையில் பொலிஸார் மறித்ததையடுத்து தேரர் நீதிமன்ற தடை உத்தரவை கிழித்து எறிந்தமையும் … Continue Reading →

Read More

ஞானசாரரின் “மட்டக்களப்புப் படம்” தோல்வியில் !! புறமுதுகிட்டார் – Police in action-வெறும் கையுடன் புதுனம் பார்த்த S.T.F.

· · 1648 Views

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அவசர வேண்டுகோளுக்கு இணங்கவே ஞானசார தேரர் தலைமையிலான பொதுபலசேனா அமைப்புக்களின் குழுவினரை கொழும்புக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வரவிருந்த ஞானசார தேரர் தலைமையிலான பொதுபலசேனா அமைப்புக்களின் குழுவினரை இடை மறித்து இன்று காலை (04) திரும்பி அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மங்களராமய தேரின் அடாவடித்தனத்தால் நேற்று (03) மட்டக்களப்பு நகரம் பதற்ற நிலையில் இருந்தது. இந்த … Continue Reading →

Read More

நான் கைது செய்யப்படுவேன்..!! ஞானசாரர் அறிவிப்பு – பௌத்தர்களை தயாராகச் சொல்லுகிறார்

· · 6401 Views

நான் இன்று (04) கைது செய்யப்பட்டாலும் எமது புனிதமான பௌத்த மதத்தின் பெருமையையும் புனிதத்தையும் காக்க நீங்கள் தயாராக இருங்கள். எனக்கு தற்பொழுது தொலைபேசியின் ஊடாக பல அழைப்புகள் வந்தன. மகாநாயக்கர்கள் கூட. தற்போதும் பாதுகாப்புத் தரப்பினர் உங்கள் முன் இப்பயணத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுக்கின்றனர். பெண்மைத்தனமான தமிழர்களுக்காகவும், முஸ்லிம்களுக்காகவும் எமது வீரம் கொண்ட படைவீரர்களை பெண்களாக்கி வைத்துள்ளது இந்த நல்லிணக்க அரசு. இது எமக்கு கதிர்காம யாத்திரை போன்று புனிதமானது. வீதியில் யாருக்கும் கேலி செய்து … Continue Reading →

Read More

ஞானசாரருக்கு அடி மேல் அடி..!! கல்குடா பொலீசும் மூக்கணாங் கயிறு போட்டது

· · 27945 Views

வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவொன்றை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாலை (02.12.2016) பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவையும் மீறி வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடல் நிகழுமாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பிலுள்ள மங்களராம விஹாரைக்கு விஜயம் செய்யும் பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் ஏறாவூர் நகரம், புன்னைக்குடா மற்றும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசத்தை அண்டிய பதுளை வீதியில் அரச மரம் … Continue Reading →

Read More

கக்கா டுடே : கண்டிக்கு “க” என்று எழுதாமல் “கு” போட்டு எழுதி ஓடும் பஸ்கள் –

· · 1065 Views

தமிழிலும் எழுதவேண்டும் என்பதற்காக சில இடங்களில் எழுதுகின்றனர். சிங்களத்தில் பெரிதாக எழுதுகின்றனர். எழுதவேண்டும் என்பதற்காக தமிழ் மொழியில் சின்னதாக எழுதுகின்றனர். தற்போது நாடாளுமன்ற ஆசனத்தில் அமர்ந்திருக்கும் எனது கட்சியைச் சேர்ந்தவர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர். எனினும், ‘க’ என்ற எழுத்துக்கு பதிலாக ‘கு’ போட்டு எழுதுகின்றனர். அதன் அர்த்தத்தை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு … Continue Reading →

Read More

தூஷண தேரரை திருத்த மட்டகளப்பு செல்கிறார் நல்ல மனுஷன் ஞானசார தேரர் – நல்ல ஜோடி

· · 339 Views

மங்களராம விகாராதிபதியை நேரில் சந்தித்து அவரின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க பொதுபசேனா அமைப்பு உட்பட பிக்குகள் குழுவொன்று மட்டக்களப்பிற்கு செல்லவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கயைில், அண்மைய நாட்களில் மட்டக்கள்பு மங்களராம விகாராதிபதி அம்பிடியே சுமனரத்ன தேரர் மட்டகளப்பிலுள்ள தமிழ் மக்களுடன் முறன்படுகின்றமையினையும் அரச அதிகாரிகளுடன் முறன்படுவதையும் அவதானிக்க முடிந்தது எனவே அவரை சந்திப்பதற்கே நாங்கள் மட்டு.  நகருக்கு செல்லவுள்ளோம் என்றார்.

Read More

Deported : ஞானசாரரை திருப்பி அனுப்பிய இந்திய இமிக்ரேசன் அதிகாரிகள்..!! மூட்டை முடிச்சுகளுடன் திரும்பினார் தேரர்

· · 7886 Views

இலங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்த பொதுபால சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். பௌத்த நிகழ்வொன்றில் கலந்துக் கொள்வதற்காக நேற்று சென்றிருந்த தேரரை, இந்தியாவுக்குள் நுழைய குடிவரவு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய அவர் நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார். விசா பிரச்சினையே அதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. இலங்கை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் வழங்கப்பட்டிருந்த இரட்டை நுழைவு விசா காலம் நிறைவடைந்திருந்தமையே இந்த சிக்கல் ஏற்பட காரணமாகியுள்ளது. அண்மையில் … Continue Reading →

Read More

முதல் முஸ்லிம் L.T.T.E .மாவீரர் ஓட்டமாவடி ஜுனைதீனின் நினைவு நாளும் நவம்பரிலேயே..!! கிட்டுவுடன் இணைந்து யாழ்ப்பான பொலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியவர்

· · 594 Views

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் காத்திரமானது. தென் தமிழீழத்தில் உருவாகிய இயக்கங்களுள் “தமிழீழ விடுதலை நாகங்கள் ” (நாகபடை) சிலகாலம் பரபரப்பை உருவாக்கியது . இதற்கு தலைமை தாங்கியவர் ஒட்டமாவடியைச் சேர்ந்த ஜுனைதீன். அரசுக்குத் துணைபோன ஐ .தே. க . பிரமுகர் மாலா இராமச்சந்திரனை சுட்டுக் கொன்றமை, நாகேந்திரம், டொட்டி பிரான்சிஸ் , ஆகிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டமை என நாகபடை மேற்கொண்ட சகல நடவடிக்கைகளிலும் பங்கு பற்றியவர் … Continue Reading →

Read More