Breaking news : “இன்றைய பிரதமருடனான முஸ்லிம் எம்.பி.க்கள் சந்திப்பில் ஞானசாரர் தொடர்பில் அமைச்சர் றிஷாத்,நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியல்ல ஆகியோருகிடையில் கடும் வாய்த்தர்க்கம் ” !! அரண்டு போன பிரதமர்

· · 4527 Views

ஞானசார தேரர் மீது பல முறைப்பாடுகள் செய்யப்பட்டும் அவற்றுக்கு அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தொடர்பில் நேற்று அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தேர்தல் முறை மாற்றம், அதிகாரப் பகிர்வு தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதான அமைச்சர்கள் கலந்து கொண்ட உயர் மட்டக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. ஞானசார தேரரின் நடவடிக்கையால் முஸ்லிம்கள் மன வேதனையுடனும், ஆத்திரத்துடனும் இருப்பதாகவும் அவரைக் கட்டுப்படுத்துமாறு நாங்கள் எத்தனையோ தடைவ கூறிய போதும் அவர் எல்லை கடந்தே செல்கின்றனர்.நான் … Continue Reading →

Read More

ஞானசாரரை, தேரர் என்பதா..சேர் என்பதா..? அவரை எவ்வாறு அழைப்பது..?அவருக்கு எதிராக அனை திரள சிங்கள மக்களுக்கு அழைப்பு

· · 743 Views

ஞானசார தேரர் சிறுபான்மை இன மக்களின் சமயங்களை இழிவுபடுத்துவதன் மூலம் புத்தரின் போதனைகளை அவமதித்து செயற்படுகின்றார். அவரை தேரர் என்று அழைக்க முடியுமா என தெரியவில்லை என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், கடந்த காலத்தில் நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு செயற்பட்டு … Continue Reading →

Read More

Cover story : மட்டகளப்பில் ஞானசார, ரத்ன தேரர் குழப்படி செய்த போது தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தனர்..!! வெளிவரும் உண்மைகள்

· · 2483 Views

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமங்கல ரத்ன தேரர் மற்றும் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நீதிமன்ற உத்தரவையும் மீறி செயற்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. நீதிமன்ற உத்தரவை மீறி அம்பிட்டிய சுமங்கல தேரர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் மட்டக்களப்புக்கு செல்ல முயன்ற கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பொதுபலசேனா குழுவினரை வெலிக்கந்தையில் பொலிஸார் மறித்ததையடுத்து தேரர் நீதிமன்ற தடை உத்தரவை கிழித்து எறிந்தமையும் … Continue Reading →

Read More

ஞானசாரரின் “மட்டக்களப்புப் படம்” தோல்வியில் !! புறமுதுகிட்டார் – Police in action-வெறும் கையுடன் புதுனம் பார்த்த S.T.F.

· · 1751 Views

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அவசர வேண்டுகோளுக்கு இணங்கவே ஞானசார தேரர் தலைமையிலான பொதுபலசேனா அமைப்புக்களின் குழுவினரை கொழும்புக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வரவிருந்த ஞானசார தேரர் தலைமையிலான பொதுபலசேனா அமைப்புக்களின் குழுவினரை இடை மறித்து இன்று காலை (04) திரும்பி அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மங்களராமய தேரின் அடாவடித்தனத்தால் நேற்று (03) மட்டக்களப்பு நகரம் பதற்ற நிலையில் இருந்தது. இந்த … Continue Reading →

Read More

நான் கைது செய்யப்படுவேன்..!! ஞானசாரர் அறிவிப்பு – பௌத்தர்களை தயாராகச் சொல்லுகிறார்

· · 6523 Views

நான் இன்று (04) கைது செய்யப்பட்டாலும் எமது புனிதமான பௌத்த மதத்தின் பெருமையையும் புனிதத்தையும் காக்க நீங்கள் தயாராக இருங்கள். எனக்கு தற்பொழுது தொலைபேசியின் ஊடாக பல அழைப்புகள் வந்தன. மகாநாயக்கர்கள் கூட. தற்போதும் பாதுகாப்புத் தரப்பினர் உங்கள் முன் இப்பயணத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுக்கின்றனர். பெண்மைத்தனமான தமிழர்களுக்காகவும், முஸ்லிம்களுக்காகவும் எமது வீரம் கொண்ட படைவீரர்களை பெண்களாக்கி வைத்துள்ளது இந்த நல்லிணக்க அரசு. இது எமக்கு கதிர்காம யாத்திரை போன்று புனிதமானது. வீதியில் யாருக்கும் கேலி செய்து … Continue Reading →

Read More

ஞானசாரருக்கு அடி மேல் அடி..!! கல்குடா பொலீசும் மூக்கணாங் கயிறு போட்டது

· · 28099 Views

வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவொன்றை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாலை (02.12.2016) பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவையும் மீறி வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடல் நிகழுமாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பிலுள்ள மங்களராம விஹாரைக்கு விஜயம் செய்யும் பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் ஏறாவூர் நகரம், புன்னைக்குடா மற்றும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசத்தை அண்டிய பதுளை வீதியில் அரச மரம் … Continue Reading →

Read More

Deported : ஞானசாரரை திருப்பி அனுப்பிய இந்திய இமிக்ரேசன் அதிகாரிகள்..!! மூட்டை முடிச்சுகளுடன் திரும்பினார் தேரர்

· · 7950 Views

இலங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்த பொதுபால சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். பௌத்த நிகழ்வொன்றில் கலந்துக் கொள்வதற்காக நேற்று சென்றிருந்த தேரரை, இந்தியாவுக்குள் நுழைய குடிவரவு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய அவர் நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார். விசா பிரச்சினையே அதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. இலங்கை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் வழங்கப்பட்டிருந்த இரட்டை நுழைவு விசா காலம் நிறைவடைந்திருந்தமையே இந்த சிக்கல் ஏற்பட காரணமாகியுள்ளது. அண்மையில் … Continue Reading →

Read More

Cover story : ஆவணம் : 2015 தொடக்கம் முஸ்லீம்களுக்கு எதிராக 141 வன்முறைச் சம்பவங்களும், கத்தோலிக்கர்களுக்கு எதிராக 132 வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன!! ஒரு நல்லாட்சியின் கதை

· · 472 Views

குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தமானது மே 2009ல் நிறைவுக்கு வந்தது. இந்த யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில்  மக்களுக்கு எதிராக சில பௌத்த பிக்குகளால் இனவாதம் கலந்த வசைமொழிகள் பேசப்பட்டதானது நாட்டில் எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளது. தமிழ் கிராம சேவகர் ஒருவரை  பௌத்த பிக்கு ஒருவர் இனத்துவேசம் நிறைந்த கெட்ட வார்த்தைகளால் திட்டி அவரை எச்சரிக்கின்ற அந்தக் காட்சியை, காவற்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காது,வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதை உள்ளடக்கிய காணொலி ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. … Continue Reading →

Read More