MaggieBBS1_600px_15_06_24

Latest : கிறிஸ்தவ சமூகத்துடன் மோதத் தயாராகிறார் ஞானசாரர்..!! பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறுகிறார்

· · 514 Views

அர்ஜூன் அலோசியஸ் திறைசேரி பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல்களில் சம்பாதித்த பணத்தை கொண்டு சிங்கள வர்த்தகர்களுக்கு சொந்தமான நிறுவனங்களை கொள்வனவு செய்து சிங்கள விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. அர்ஜூன் அலோசியஸ் தமிழ் கத்தோலிக்கர் என்பதை அடிப்படையாக கொண்டு பொதுபல சேனா அமைப்பு சிங்கள இனவாதத்தை துண்டி, தம்மிடம் இருந்து பறிப்போன இனவாத தலைமைத்துவத்தை மீண்டும் கைப்பற்ற இப்படியான கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையானது பொதுபல … Continue Reading →

Read More
kanasara

Breaking news : “பொதுபல சேனா அழிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது..!! மனம் வருந்துகிறார் ஞானசார தேரர்

· · 968 Views

பலர் எம்மை கைவிட்டு சென்று விட்டார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நுகேகொடை பிரதேசத்தில் நேற்று மாலை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… எமது போராட்டத் தோழர்கள் பலர் எம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார்கள். அவர்கள் மேலும் சின்னஞ் சிறிய கடைகள் பலவற்றை போட்டுக் கொண்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களுக்கு பொதுபல சேனாவை அழிக்கும் தேவை … Continue Reading →

Read More
bbs-gnana

மகிந்தவின் செயற்பாடு காரணமாக மனமுடைந்தே ஞானசாரர் பென்ஷனில் போகிறார் !!!

· · 1323 Views

பொதுபல சேனா அமைப்பின் பொது செயளாலர் கலபொட அத்தே ஞானசார தேரர் அவ்வமைப்பின் செயற்பாடுகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அவ்வமைப்பு வட்டார செய்திகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில். இது தொடர்பில்  பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகேவை தொடர்புகொண்டு கேட்ட போது.. மடவளை நியுஸுக்கு கருத்து வெளியிட்ட அவர் .. ஞானசார தேரர் பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகளில் இருந்து ஓய்வு பெறப்போவது தொடர்பில் தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை … Continue Reading →

Read More
ganapen

BBS செயலாளர் ஞானசார தேரர் அப்பதவியில் இருந்து ஓய்வுப் பெறுகிறார்..!! இந்தியாவில் காலம் கழிப்பார்

· · 507 Views

பொதுபல சேனா அமைப்பின் பொது செயளாலர் கலபொட அத்தே ஞானசார தேரர் அவ்வமைப்பின் செயற்பாடுகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அவ்வமைப்பு வட்டார செய்திகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசியலமைப்புக்கு எதிராக எதிர்வரும் திகதி நுகேகொடயில் இடம்பெறவுள்ள சாசன பாதுகாப்பு சபையின் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் அவர் இதனை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது ஜப்பானில் இருக்கும் ஞானசார தேரர் நாளை நாடு திரும்பவுள்ளதாகவும் அவரது ஓய்வை அறிவித்த பின்னர் அவர் … Continue Reading →

Read More
14

புத்தளத்தில் நத்தார் சிறப்பாக கொண்டாடப்பட்டது..!! ஆமென்

· · 334 Views

( நளின் ) புத்தளம் சென். மேரிஸ் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையை புத்தளம் பிரதேச மறை ஆயர் வின்சன் ஜெராஷாவின் ஆலோசனைப்படி  புத்தளம் சென். மேரிஸ் தேவாலயத்தின் உதவி பாதிரியார் ப்ரஷான் கோமஸ் நேற்று நள்ளிரவு நடாத்தி வைத்தார். புத்தளம் நகரில் கிறிஸ்மஸ் அலங்காரங்கள்  30 அடி உயரத்தில்  கிறிஸ்மஸ் மரம் சிலாபம் சென். பெர்னதெத் கிறிஸ்தவ தேவாலய பரிபாலன பாதிரியார் டேமியன் பீரிஸ் அவர்களின் ஆலோசனைப்படி சிலாபம் சென். பெர்னதெத் கிறிஸ்தவ தேவாலய இளைஞ்சர்கள் 8000 … Continue Reading →

Read More
bb99

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, ஞானசார, சுமண ரத்ன சந்திப்பு – சைத்தான்களுடன் என்ன பேசினார்.?

· · 302 Views

மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு சென்ற புத்தசாசன மற்றும் நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ அங்கு பொதுபலசேனா மற்றும் மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ண தேரர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். மங்களராமய விகாரைக்கு இன்று காலை சென்ற புத்த சாசன மற்றும் நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர் பொதுபலசேனாவின் தலைவர் ஞானசார தேரர் மற்றும் மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ண தேரர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தின் போது ஊடகவியலாளர்கள் … Continue Reading →

Read More
kumbi

” நாம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்ல..!! ஞானசாரர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு – முஸ்லிம் எம்.பி. க்கள் குழம்பிப் போய் இருக்­கி­றார்கள் என்கிறார்

· · 497 Views

நாட்டில் சக­வாழ்வும் நல்­லி­ணக்­கமும் தேசிய ஒரு­மைப்­பாடும் உரு­வா­கு­வ­தற்கு என்னைக் கைது செய்ய வேண்­டு­மென்றால் கைது செய்­யுங்கள். நாட்டின் நன்­மைக்­காக, இன நல்­லி­ணக்­கத்­துக்­காக நான் சிறைக்குச் செல்லத் தயா­ராக இருக்­கிறேன் என பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­பொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார். முஸ்லிம் அமைச்­சர்­களும். எம்.பி. க்களும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சந்­தித்து ஞான­சார தேரரை கைது செய்­யு­மாறு வலி­யு­றுத்­தி­யுள்­ளமை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்; நான் முஸ்­லிம்­க­ளுக்கு … Continue Reading →

Read More
railllll1

Special news :”பெளத்த லேபல்களை ஒட்டிக்கொண்டு பெளத்த விரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்..!!எதிர்ப்பாராவிதமாக பிரதமர் காட்டம் – Full story

· · 1180 Views

– ஏ.எல்.எம்.சத்தார், எம்.ஏ.எம்.ஹஸனார் – பெளத்த லேபல்களை ஒட்டிக்கொண்டு பெளத்த விரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்கிறார் பிரதமர் இந்த நாட்டில் சட்­டத்­தையும் சமா­தா­னத்­தையும் நிலை நாட்ட பிரச்­சி­னை­களை பேச்­சு­வார்த்­தைகள் மூலம் தீர்த்துக் கொள்­வ­தற்கு எல்லா வழி­க­ளிலும் நாம் நட­வ­டிக்கை எடுத்துக் கொண்­டி­ருக்­கிறோம். சிறு கூட்­டத்­தினர் வேண்­டத்­த­காத செயற்­பா­டு­களால் சட்­டத்தை சிதைக்க முய­லு­வதை நாம் அனு­ம­திக்­க­மாட்டோம். நாட்டின் நல்­லி­ணக்­கத்­தையும் மத ஒரு­மைப்­பாட்­டையும் உரு­வாக்­கு­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவின் தலை­மை யில் சமய செயற்­பா­டு­க­ளுக்­காக வெவ்­வேறு அமைச்­சுகள் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளன … Continue Reading →

Read More
meetingggggggggg1

மதத்­த­லை­வர்கள் – ஜனா­தி­பதி சந்­திப்பு : ” ஞான­சார தேரர் ஏன் அழைக்­கப்­பட்டார்?..ஞான­சா­ர ­தேரர் என்ன கூறினார்?..ஏன் இந்த மத­வாதம்?

· · 675 Views

A.R.A.Fareel நாட்டின் தெருக்­க­ளிலும் ஊடக மாநா­டு­க­ளிலும் மற்றும் மேற்­கொள்­ளப்­பட்ட ஆர்ப்­பாட்­டங்­க­ளிலும் இந்­நாட்டை தாய்­நா­டாகக் கொண்­டுள்ள முஸ்­லிம்­களின் புனித குர்ஆன் அவ­ம­திப்­புக்­குள்­ளா­னது. பௌத்த கடும்­போக்­கு­வா­திகள் குறிப்­பாக பொது­ப­ல­சேனா இந்த செயற்­பா­டு­களைத் திட்­ட­மிட்டு முன்­னெ­டுத்­தது. முஸ்­லிம்கள் உயி­ரிலும் மேலாகக் கருதும் புனித குர்­ஆனை மாத்­தி­ர­மல்ல அதையும் கடந்து அல்­லாஹ்வின் மீதும் அவர்கள் விமர்­ச­னங்­களை நிறைத்­தார்கள். நிந்­தித்­தார்கள். இந்­நி­லையில் நாட்டில் மீண்டும் ஓர் இன முறு­கலை ஏற்­ப­டுத்தி அசா­தா­ரண நிலையை உரு­வாக்க முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. இதில் அர­சியல் பின்­பு­லமும் இருக்­கி­றது என உளவுப் … Continue Reading →

Read More
%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf

Special news : ‘ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்..!! ஜனாதிபதி, இன்றைய முஸ்லிம் எம்.பி.க்களுக்கிடையிலான சந்திப்பின் போது உறுதி வழங்கினார் –

· · 6948 Views

ஞானசாரரைக் கைது செய்யும் எந்த நடவடிக்கைகளுக்கும்  நான் ஒரு போதும் தடையாக இருந்ததில்லை என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன இலங்கை முஸ்லிம் எம்.பி.க்களிடம்   தெரிவித்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற ஜனாதிபதி – முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது, ” ஜனாதிபதியின் உத்தரவுக்கமையவே ஞானசார தேரோ இன்னும் கைது செய்யப்படவில்லை “என முஸ்லிம் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் நேரடிக் கேள்வி எழுப்பியதற்கே ஜனாதிபதி இந்த மறுப்பை வெளியிட்டார் … Continue Reading →

Read More
rissad

Breaking news : “இன்றைய பிரதமருடனான முஸ்லிம் எம்.பி.க்கள் சந்திப்பில் ஞானசாரர் தொடர்பில் அமைச்சர் றிஷாத்,நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியல்ல ஆகியோருகிடையில் கடும் வாய்த்தர்க்கம் ” !! அரண்டு போன பிரதமர்

· · 4248 Views

ஞானசார தேரர் மீது பல முறைப்பாடுகள் செய்யப்பட்டும் அவற்றுக்கு அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தொடர்பில் நேற்று அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தேர்தல் முறை மாற்றம், அதிகாரப் பகிர்வு தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதான அமைச்சர்கள் கலந்து கொண்ட உயர் மட்டக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. ஞானசார தேரரின் நடவடிக்கையால் முஸ்லிம்கள் மன வேதனையுடனும், ஆத்திரத்துடனும் இருப்பதாகவும் அவரைக் கட்டுப்படுத்துமாறு நாங்கள் எத்தனையோ தடைவ கூறிய போதும் அவர் எல்லை கடந்தே செல்கின்றனர்.நான் … Continue Reading →

Read More
%e0%ae%95

ஞானசாரரை, தேரர் என்பதா..சேர் என்பதா..? அவரை எவ்வாறு அழைப்பது..?அவருக்கு எதிராக அனை திரள சிங்கள மக்களுக்கு அழைப்பு

· · 479 Views

ஞானசார தேரர் சிறுபான்மை இன மக்களின் சமயங்களை இழிவுபடுத்துவதன் மூலம் புத்தரின் போதனைகளை அவமதித்து செயற்படுகின்றார். அவரை தேரர் என்று அழைக்க முடியுமா என தெரியவில்லை என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், கடந்த காலத்தில் நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு செயற்பட்டு … Continue Reading →

Read More
ganaeshan

Cover story : மட்டகளப்பில் ஞானசார, ரத்ன தேரர் குழப்படி செய்த போது தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தனர்..!! வெளிவரும் உண்மைகள்

· · 2286 Views

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமங்கல ரத்ன தேரர் மற்றும் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நீதிமன்ற உத்தரவையும் மீறி செயற்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. நீதிமன்ற உத்தரவை மீறி அம்பிட்டிய சுமங்கல தேரர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் மட்டக்களப்புக்கு செல்ல முயன்ற கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பொதுபலசேனா குழுவினரை வெலிக்கந்தையில் பொலிஸார் மறித்ததையடுத்து தேரர் நீதிமன்ற தடை உத்தரவை கிழித்து எறிந்தமையும் … Continue Reading →

Read More
%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d

ஞானசாரரின் “மட்டக்களப்புப் படம்” தோல்வியில் !! புறமுதுகிட்டார் – Police in action-வெறும் கையுடன் புதுனம் பார்த்த S.T.F.

· · 1523 Views

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அவசர வேண்டுகோளுக்கு இணங்கவே ஞானசார தேரர் தலைமையிலான பொதுபலசேனா அமைப்புக்களின் குழுவினரை கொழும்புக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வரவிருந்த ஞானசார தேரர் தலைமையிலான பொதுபலசேனா அமைப்புக்களின் குழுவினரை இடை மறித்து இன்று காலை (04) திரும்பி அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மங்களராமய தேரின் அடாவடித்தனத்தால் நேற்று (03) மட்டக்களப்பு நகரம் பதற்ற நிலையில் இருந்தது. இந்த … Continue Reading →

Read More
%e0%ae%95

நான் கைது செய்யப்படுவேன்..!! ஞானசாரர் அறிவிப்பு – பௌத்தர்களை தயாராகச் சொல்லுகிறார்

· · 6139 Views

நான் இன்று (04) கைது செய்யப்பட்டாலும் எமது புனிதமான பௌத்த மதத்தின் பெருமையையும் புனிதத்தையும் காக்க நீங்கள் தயாராக இருங்கள். எனக்கு தற்பொழுது தொலைபேசியின் ஊடாக பல அழைப்புகள் வந்தன. மகாநாயக்கர்கள் கூட. தற்போதும் பாதுகாப்புத் தரப்பினர் உங்கள் முன் இப்பயணத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுக்கின்றனர். பெண்மைத்தனமான தமிழர்களுக்காகவும், முஸ்லிம்களுக்காகவும் எமது வீரம் கொண்ட படைவீரர்களை பெண்களாக்கி வைத்துள்ளது இந்த நல்லிணக்க அரசு. இது எமக்கு கதிர்காம யாத்திரை போன்று புனிதமானது. வீதியில் யாருக்கும் கேலி செய்து … Continue Reading →

Read More