Special news : கல்பிட்டியில் காணிகளை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்..!! காணிச் சொந்தக்காரர்கள் கவனம்

· · 195 Views

சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக காணித்துண்டுகளை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள 56.35 ஹெக்டேயர் காணியை, 5 பாகங்களாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிப்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. கற்பிட்டிப் பிரதேசமானது பல்வேறுபட்ட சுற்றுலா கவர்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது என்ற வகையில், சுற்றுலா அபிவிருத்திக்கு மிகப் பொருத்தமான இடமாகக் கருதப்படுகின்றது. எனினும், அப்பிரதேசத்தில் தற்போது காணப்படும் ஹொட்டல் மற்றும் பிற சுற்றுலா வசதிகளானது, உயர் தரத்திலான சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி … Continue Reading →

Uncategorized
Read More

முந்தலில் ஒரு கோடி ரூபாய் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது..!! என்ன நடக்கிறது இங்கே..?

· · 518 Views

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய ஹெரோயினுடன் முந்தல் – சின்னப்பாடு பகுதியில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முந்தல் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, சின்னப்பாடு பகுதியிலுள்ள வீடொன்றை சோதனையிட்ட போது அங்கிருந்து ஒரு கிலோ 50 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனுடன் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் 39 வயதுடைய ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவரை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Uncategorized
Read More

சிலாபம் 200 கோடி ஹெரோயின் விவகாரத்தில் பாயிஸ் பாயை தேடும் புத்தளம் D.I.G.!! தெஹிவளை வாகன வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார்

· · 2016 Views

பாகிஸ்­தானிலிருந்து கடல்­மார்க்­க­மாக கொண்­டு­வ­ரப்­பட்ட சுமார் 200 கோடி ரூபா பெறு­ம­தி­யான ஹெரோயின் போதைப்பொரு­ளை கடந்த வியா­ழ­னன்று புத்­தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­ல­கத்தின் கீழ் இயங்கும் விசேட உளவுப் பிரி­வினர் கைப்­பற்­றிய நிலையில், அதன் பின்­ன­ணியில் உள்­ள­தாக நம்­பப்­படும் பாயிஸ் பாய் குறித்து பல தக­வல்­களை பொலிஸார் வெளிப்­ப­டுத்­தியுள்­ளனர். பாகிஸ்­தானி­ய­ரான குறித்த நபர் டுபாயில் தங்­கி­யி­ருந்து இந் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­துடன் நாட்­டுக்குள் அவ­ரது போதைப்பொரு­ளை விற்­பனை செய்யும் முன்­னணி வர்த்­த­கர்கள் பலர் … Continue Reading →

Uncategorized
Read More

புத்தளத்தவர்களுக்கு அரசியல் அறிவு கிடையாது !! சொல்லாமல் சொல்கிறார் அமைச்சர் ரிஷாத் – கல்பிட்டியில் பல்வேறு திட்டங்களை ஆரம்பித்தார்

· · 885 Views

புத்தளம் மாவட்டத்தில் பலவந்தமாக வெளியாரினால் திணிக்கப்பட்டிருக்கும் சூழலியல் ரீதியான செயற்கைப் பாதிப்புகளுக்கு புத்தளத்தின் அதிகாரமிக்க  அரசியல் தலைமையின் நீண்ட இடைவெளியே பிரதான காரணமென்று என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரசின் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை கற்பிட்டியில் அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார். அமைச்சர் மேலும் கூறியதாவது, கடந்த கால சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளினாலேயே புத்தளம் மாவட்ட பாராளுமன்றக் கனவு சிதைந்து சின்னாபின்னமாகியது. தேர்தல் … Continue Reading →

Uncategorized
Read More

Absolute Ruler : முன்னாள் நிதியமைச்சர் நெய்னாமரிக்காரின் நூற்றாண்டு தினம் இன்று..!! டி.பி. ஜாயாவின் மாணவரான நெய்னா மரைக்கார், 1960, 1965, 1972, 1977, 1978 களில் புத்தளம் எம்.பி.யாக இருந்தார்

· · 1142 Views

நூறாவது பிறந்ததினத்தை அனுஷ்டிக்கும் முன்னாள் நிதியமைச்சர் நெய்னாமரிக்கார்                               முன்னாள் நிதியமைச்சர் நெய்னாமரிக்காரின் நூற்றாண்டு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அதனையொட்டி முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வரைப் பேட்டி கண்டு இக்கட்டுரை தொகுக்கப்பட்டது. (தொகுப்பு – எம்.எஸ்.எம்.ஸாகிர்) எமது நாட்டின் இரண்டாவது முஸ்லிம் நிதியமைச்சராகப்பதவியேற்ற எம்.எச்.எம். நெய்னா மரிக்கார். சி. அ. மு. முஹம்மது ஹனிபா தம்பதியினருக்கு நெய்னாமரிக்கார் மகனாக (1917. மே. 09) இல் பிறந்தார்.  அந்தவகையில் நூற்றாண்டு தினம் இன்றாகும். நெய்னாமரிக்கார் இந்நாட்டு அரசியலிலும், அரச … Continue Reading →

Uncategorized
Read More

சாலாவை இராணுவ களஞ்சியம் கல்பிட்டி,கண்டல்குளியில்..!! ஆரம்பக்கட்ட முயற்சிகளில் அரசாங்கம்

· · 1847 Views

சுல்தான் ஜஸீல் சில மாதங்களுக்கு முன்னர் சாலாவைப் பிரதேசத்தில் இராணுவத்தின் ஆயுதக் களஞ்சிய சாலையில்  பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்று அப்பிரதேசம் முழுமையாக அழிவுற்றதை நாம் அறியவும், பார்க்கவும் கிடைத்தது. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டன. அதில் ஒன்றுதான் அதிக வெப்பத்தினால் இவ்வனர்த்தம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. அப்படியாயின் கற்பிட்டிக்கு இக்களஞ்சியசாலை ஏன் மாற்றப்பட வேண்டும்?… அவ்வனர்த்தத்துக்குள்ளான பாரிய ஆயுத களஞ்சிய சாலையை அப்பிரதேசத்தில் இருந்து அகற்றி கண்டல்குளி விமானப்படைப் பயிற்சிப் பிரதேசம் அமைந்துள்ள பகுதியில் அமைப்பதற்கான ஆரம்பகட்ட … Continue Reading →

Uncategorized
Read More

அரசாங்கம் உறுதியாக சொல்லுகிறது குப்பைகளை அருவக்காட்டில் தான் கொட்டுவோம் என்று !!!

· · 517 Views

புத்தளம் அருவக்காடு கழிவகற்றும் வேலைத்திட்டத்திற்காக இலங்கையில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மூலம் வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. மேல் மாகாணத்தில் வியாபித்துள்ள கழிவு பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வினை பெற்றுக் கொடுக்கும் பணியானது, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள கழிவகற்றல் வேலைத்திட்டங்கள் மற்றும் திட்டங்களை செயற்படுத்துவது தொடர்பில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை … Continue Reading →

Uncategorized
Read More

கொழும்பு-புத்தளம் குப்பை செயற்திட்ட எதிர்ப்பணி, சொல்லுகிறது குப்பை கதை முடிந்தது என்று !!!

· · 257 Views

*வெற்றி வெற்றி வெற்றி புத்தளம் இளைஞர் படை சாதித்தது * கொழும்பு மீதொடமுல்லை பிரதேசத்திலுள்ள குப்பைகளை புத்தளம் அறுவைக்காட்டிலுள்ள பாரிய குழிகளை கொண்டு நிரப்பும் திட்டத்தை மக்களின் பலத்த எதிர்ப்பு மற்றும் சூழல் காரணிகள் மேற்கோள் காட்டி இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை மெகா பொலிஸ் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க 28-4-2017 பாராளுமன்றத்தில் மீதொடமுல்லையில் நடந்த அணர்த்தம் தொடர்பான விவாதத்தின் போது தெரிவித்தார். இத்திட்டத்தை நிறுத்தியே ஆக வேண்டும் என்று புத்தளத்து இளஞ்சர்களுக்கு கிடைத்த வெற்றியாகத் தான் … Continue Reading →

Uncategorized
Read More

உலர்ந்த கச்சான் காற்று வீசுவதால் அடுத்த மாதம் வரை மழை இல்லை !! உப்பு வர்த்தகர்களுக்கு மட்டும் “மழை” கொட்டும்

· · 506 Views

நாட்டில் நிலவும் உஷ்ணமான காலநிலை அடுத்த மாதம்  வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக பட்சம வெப்பநிலையாக, திருகோணமலையில் 37.7 பாகை சென்டிகிரேட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நாட்டிற்கு மேலாக உலர்காற்று வீசுவதால் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவுள்ளதாக வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவிக்கின்றார்.  

Uncategorized
Read More

Good news : 2 மணிக்கு பின்னர் பெரும்பாலான பிரதேசங்களில் மழை..Bad news : புத்தளத்தில் பெய்யாது !!

· · 587 Views

நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், மத்திய வடமத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில், 50 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கமுடியும் என்று, திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின்போது அப்பிரதேசங்களில் கடும்காற்று வீசக்கூடும். பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Uncategorized
Read More

புத்தளத்தின் ஜனரஞ்சக பெண்ணாக சுபியானி பாரூக் தெரிவு !! விருதினைப் பெற்றார் – Change நிறுவனத்தின் சிறந்த முயற்சி

· · 774 Views

எம்.யூ.எம். சனூன் புத்தளம் சேஞ்ச் தொண்டு நிறுவனம் நடத்திய, புத்தளத்தில் வதியும் சிறந்த சாதனைப் பெண்களுக்கான தெரிவுப் போட்டியில், அதிகூடிய விருப்பு வாக்குகளைப் (823) பெற்று, புத்தளத்தின் ஜனரஞ்சக பெண்ணுக்கான விருதினை, புத்தளம் சுபியானி பாரூக் பெற்றுக்கொண்டுள்ளார். புத்தளத்தில் இலை, மறை காய்களாக பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனைகளை செய்திருக்கிறார்கள், செய்து கொண்டும் இருக்கிறார்கள். இவர்களை சமூகத்துக்கு முன்மாதிரிகளாக அடையாளம் காட்டி, ஏனையவர்களுக்கு ஊக்குவிப்பாக அமைவதற்காக, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இத்தேடல் முயற்சியினை புத்தளம் சேஞ்ச் … Continue Reading →

Uncategorized
Read More

புத்தளம் பகுதியைச் சேர்ந்த பெண்மணி இலங்கை வந்த குவைத் விமானத்தில் மரணம் !!

· · 1879 Views

குவைத்திலிருந்து நாடு திரும்பிய இலங்கை பணிப்பெண் ஒருவர் விமானத்திலேயே திடீரென உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இலங்கை நோக்கி வந்த குவைத் விமான சேவைக்குச் சொந்தமான கே.யூ.631 ரக விமானத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Uncategorized
Read More

போராட்டங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை : புத்தளம் செய்னபின் புதிய மாணவ தலைவர்கள் !! சிறப்பான விழா

· · 679 Views

( முஸ்பிக், நமாஸ் ) புத்தளம் செய்னப் முஸ்லிம் பெண்கள் ஆரம்ப பாடசாலை மாணவர் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி பெலஜியா அபுல் ஹுதாவின் தலைமையில் இன்று காலை இடம் பெற்றது. மாணவர் தலைவர் பொறுப்பாசிரியர் எஸ்.ஐ.எல். முஸம்மிலின் வழிகாட்டலில் 3௦ பேர் இவ் வருடத்திற்கான  மாணவர் தலைவர்களாக தெரிவு  செய்யப்பட்டனர். பாதுகாப்பு அமைச்சின் மொழி பெயர்ப்பாளர் கெப்டன் ஏ.டப்ளிவ். அலி சப்ரி இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகவும் ஒய்வு பெற்ற பொலிஸ் … Continue Reading →

Uncategorized
Read More

Latest : ஜனாதிபதி மைத்திரி தொடர்ந்து புறக்கணிப்பு !!ராஜினாமா செய்கிறார் அமைச்சர் ரிஷாத்

· · 4198 Views

கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதற்குக் கலந்தாலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வில்பத்து சரணாலயத்துக்கு வடக்காக உள்ள காடுகளில் நான்கு காடுகளை, பாதுகாப்பான சரணாலயங்களாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2017 மார்ச் 24ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பை தெரிவித்தே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தன்னுடைய அமைச்சுப் பதவியைத் துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. இதேவேளை, சர்ச்சைக்குரிய இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு … Continue Reading →

Uncategorized
Read More

இல்யாஸ் Dr. என்கிற சமூகப் போராளி : மீண்டும் வீதியில் இறங்குகிறார்..!! தள வைத்தியசாலை குறைப்பாடுகளுக்காக ஒரு மறியல்

· · 136 Views

புத்தளம் நகரின் பிரதான வைத்தியசாலையாகத் திகழும் புத்தளம் ஆதார வைத்தியசாலையை தரம் உயர்த்துமாறு கோரி, புத்தளம் நகரம் தழுவிய விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து, புத்தளம் – கொழும்பு வீதி பிரதான சுற்று வட்டத்துக்கு அருகில் இடம்பெறவுள்ளது.     முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்  பலம் பெரும் அரசியல்வாதியுமான  டாக்டர் . இந்தப் போராட்டத்திற்கு தலை தாங்கவுள்ளதாக  புத்தளம் இளம் பிரஜைகள் சங்க உறுப்பினர் ஒருவர் புத்தளம் டுடேக்கு தெரிவித்தார். புத்தளம் … Continue Reading →

Uncategorized
Read More