நலம் நலமறிய ஆவல்: கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் ஜனாதிபதியுடன்

· · 156 Views

கல்கமுவ – மீகாலேவ பிரதேசத்தில் கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தினிந்து யசேன் என்ற 4 வயது சிறுவன் தனது பெற்றோருடன் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அலரி மாளிகையில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ச மற்றும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.  

Read More

அணி மாறும் ஹக்கீமும் வீரவன்சவும் !! ரணிலை சந்தித்து ரகசிய பேச்சு வார்த்தை !!

· · 154 Views

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரின் ஆளுங்கட்சியிலிருந்து அணிமாறும் முடிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. எதிர்வரும் ஊவா மாகாணசபைத் தேர்தலின் பின் ஆளுங்கட்சியிலிருந்து விலகி, எதிர்க்கட்சியுடன் இணைந்து செயலாற்றுவது தொடர்பில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இரகசிய செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பான இரகசிய தகவல்கள் உளவுத்துறை மூலம் ஜனாதிபதிக்கு கிட்டியுள்ளதாக வார இறுதி சிங்களப் பத்திரிகைகளான லக்பிம, திவயின போன்றவை முக்கிய செய்திகளாக வெளியிட்டுள்ளன. இந்நிலையில் … Continue Reading →

Read More

கௌரவ ஜனாதிபதி: நாட்டின் பாரிய முன்னேற்றத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியது !! ஜனாதிபதி பெருநாள் வாழ்த்து

· · 336 Views

ஐக்கியம் மற்றும் புரிந்துணர்வுக் கலாசாரத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்காக இலங்கை முஸ்லிம் சமூகம் செய்துள்ள பெறுமதியான பங்களிப்புக்களை நாம் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருவதுடன் இலங்கையின் எதிர்கால முன்னேற்றத்துக்காக இத்தகைய நல்லுறவுகள் தொடர வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இன்று ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இஸ்லாமிய பாரம்பரியங்களுக்கேற்ப ஒரு முக்கியமான இஸ்லாமிய … Continue Reading →

Read More

நெருப்புமா..நெருப்பு : ஜனாதிபதி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஹோட்டலில் தீ !! ஈடன் ஹோட்டல்

· · 117 Views

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்ற ஹோட்டலில் சிறிய தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. அளுத்கமவில் அமைந்துள்ள ஈடன் என்ற நட்சத்திர ஹோட்டலின் அறையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஹோட்டலி;ல் நடைபெற்ற திருமண விருந்துபசாரமொன்றி; ஜனாதிபதி பங்கேற்றிருந்தார். ஜனாதிபதி நேற்று இந்த நிகழ்வில் பங்கேற்று விட்டு திரும்பிய சிறிது நேரத்தின் பின்னர் ஹோட்டலின் மற்றுமொரு கட்டிடத்தில் தீ பற்றிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டிடத்தின் நான்காம் மாடியில் அமைந்துள்ள அறையொன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் … Continue Reading →

Read More

தொடரும் முறுகல் !! ஹக்கீம் சவூதியில் ஜனாதிபதியை கடுமையாக விமர்சனம் செய்தாராம் !! M.R.P கடுப்பில்

· · 177 Views

தொடரும் முறுகல் !! ஹக்கீம் சவூதியில் ஜனாதிபதியை கடுமையாக விமர்சனம் செய்தாராம் !! சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு  வைத்து, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அளுத்கம பேருவளை சம்பவம், பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கமும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுமே காரணம் என்பது புலனாகியுள்ளது என ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி … Continue Reading →

Read More

ராணித் தேனீ : பொது வேட்பாளராக போட்டியிட சிரானிக்கு உத்தியோகபூர்வ அழைப்பு !!

· · 384 Views

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் கடந்த 24 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்த அரசியல் கூட்டம் ஒன்றில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து பலவந்தமாக நீக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து பகிரங்கமான அரசியல் கூட்டங்களில் … Continue Reading →

Read More

அனுராதபுர பள்ளிவாசலில் ஜனாதிபதி !! முக்கிய சிங்கள அமைச்சர்களே அழைத்து வந்தனர் – முன் மாதிரி

· · 127 Views

நாட்டில் அனைத்து சமயங்களையும் பாதுகாக்கும் கடப்பாடு இருப்பதால் அரசு அது தொடர்பில் தீவிரமாக செயற்படும் நிலையில் மிக நீண்டகாலமாக நாட்டில் நிலவிய  தேசிய ஒற்றுமை-  நல்லிணக்கம்  என்பவற்றை தொடர்ச்சியாக கொண்டு செல்வது அனைத்துப் பிரஜைகளினதும் கடமை என ஜனாதிபதி தெரிவித்தார். அநுராதபும் மொஹிதீன் ஜும்மா முஸ்லிம் பள்ளிவாசலுக்கு நேற்று மாலை (24) விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்- ஆதிதொட்டு நிலவும் கலாசார பிணைப்பை தொடர்ந்தும் கொண்டு செல்வது மிகவும் … Continue Reading →

Read More

பிரித்தானியா ஜனாதிபதியை தொடர்ந்து அவமானப்படுத்துகிறது !! அரசாங்கள் அறிவிப்பு

· · 148 Views

பிரித்தானியா இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜப்கஷவிற்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவில்லை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த காலங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியாவிற்கு விஜயம் செய்திருந்த போது புலி ஆதரவாளர்கள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதலாம் உலக யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து பொதுநலவாய நாடுகள் அமைப்பினால் நடத்தப்படும் நினைவு ஆராதணையில் … Continue Reading →

Read More

கிழக்கின் உதயம்: மருதமுனை முஸ்லிம் மாணவன் ஜனாதிபதி சாரணீய விருதுக்கு தெரிவு !! ஏ.ஜே. அர்ஸாத் ஆத்தீஸ்

· · 173 Views

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மாணவன் மருதமுனையைச் சேர்ந்த ஏ.ஜே. அர்ஸாத் ஆத்தீஸ் சாரனியத்திற்கான ஜனாதிபதி விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கான ஜனாதிபதி விருது எதிர் வரும் 2014-07-30ம் திகதி கொழும்பு பண்டார நாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஜனாதிபதியினால் வழங்கப்படவுள்ளது. இவர் 2007-07-10ம் திகதி தனது சாரணியத்திற்கான பணியை ஆரம்பித்தார் மிகவும் சுறுசுறுப்பாக தனது சாரணியப்பணியை முன்னெடுத்ததுடன் மிகவும் ஒழுக்கமாகவும் நடந்து கொண்டதன் காரணமா ஆசிரியர்களின்; மத்தியில் நன்மதிப்பையும் பெற்றார். 2012ல் இலங்கையில் … Continue Reading →

Read More

அளுத்கம யதார்த்தம் : யார் எதனை கதைத்தும் பிரயோசனம் பிரயோசனமில்லை..மிச்சமானது எறிந்த சுவர்களே !! ( டிசன் குமார பங்ககம ஆரச்சி – ராவய )

· · 142 Views

சிங்களத்தில் – டிசன் குமார பங்ககம ஆரச்சி –  பத்திரிக்கை தமிழ் மொழிபெயர்ப்பு – சிராஜ் .எம். சாஜஹான் அளுத்கம, பேருவளை பிரதேசங்களில் உண்டான அடர்ந்த இருட்டுத்தன்மை நீங்கி வெளிச்சம் தோன்றியுள்ளதாக பெந்தர கடலுக்கு இந்தப்பக்கமாக பேசப்படுகிறது. ஆனாலும் பெந்தர கடலுக்கு அந்தப்பக்கமாக அமைதியைக் குலைக்கும் ஒரு செயல் போன்றது. பகலிலும் அங்கு வாழ்வோரின் இதயங்கள் கும் இருட்டிலேயே உள்ளது. குரைத்துக் கொண்டு மேலெழுந்த கறுப்பு புகை அகப்பட்டவர்களின் கண்களுக்கு கூசும் இருட்டாகவே உள்ளது. இப்போது என்ன … Continue Reading →

Read More

புயல் வீசப்போகிறது : பெசில் ராஜபக்சவுக்கு எதிராக விரைவில் கலகம்..? தயாராகும் பென்சன் அமைச்சர்கள்

· · 264 Views

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நீக்கப்பட்டால், அதற்கு எதிராக போராட அந்த கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் தயாராகி வருவதாக சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவித்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தொடர்ந்தும் கட்சியின் செயலாளரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை தாழ்த்தியும் புறந்தள்ளியும் வருகிறார். இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் கூடிய கவனத்தை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. அலரி மாளிகையில் … Continue Reading →

Read More

ஜனாதிபதியை அவமதிக்கும் பிரிட்டன் !! பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார்!

· · 174 Views

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்படுகிறது. கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்க மாட்டார் என ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், கிளாஸ்கோ விஜயம் செய்தால் எதிர்ப்பு போராட்;டங்கள் நடத்தப்படக் கூடுமெனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இவ்வாறான அழுத்தங்களுக்கு அஞ்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிளாஸ்கோ விஜயத்தை ரத்து செய்யவில்லை என … Continue Reading →

Read More

குசினிச் சண்டை : பிரதமர் பதவி எதிர்ப்பார்ப்பை கைவிடுமாறு அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடும் அழுத்தம் !!

· · 183 Views

மகிந்த அரசாங்கத்தின் அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது பிரதமர் பதவியை எதிப்பார்த்துள்ள அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த எண்ணத்தை கைவிடுமாறு அரசாங்கத்திற்குள் கடும் அழுத்தங்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதில் புதிதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ இணைந்து கொண்டுள்ளார். தினசரி நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அமைச்சர் பசில், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன கட்சியின் செயலாளர், பொருளாளர் பதவிகளை வகித்தவர்களை தேர்தலில் போட்டியிடவோ, நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகவோ இடமளிக்கவில்லை எனவும் ஜே. ஆர் .ஜயவர்தனவின் அந்த செயல் சரியானது … Continue Reading →

Read More

ஜனாதிபதிக்கு நெருக்கமான தங்காலை பிரதேச சபைத் தலைவருக்கு 20 வருட ஜெயில் !!

· · 189 Views

பிரித்தானிய பிரஜையை கொலை செய்த தங்காலை பிரதேச சபைத் தலைவருக்கு 20 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குராம் ஷேக் கொலை வழக்கு தொடா்பில் இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் இந்த சிறைத் தண்டனையை விதித்துள்ளது. தங்காலை பிரதேச சபையின் தலைவர் சம்பத் விதாண பத்திரணவிற்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட மேலும் நான்கு பேருக்கு 20 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு … Continue Reading →

Read More

எதோ அவரால் முடிந்தது: ஜனாதிபதி மஹிந்த,மொஹமட் அபாஸுடன் தொலைபேசியில் கலந்துரையாடினார் – அனுதாபமும் தெரிவிப்பு

· · 142 Views

காஸாவில் தற்போது இடம்பெற்று வரும் இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அபாஸுடன் கலந்துரையாடியுள்ளார். மஹிந்த ராஜபக்ச தொலைபேசியில் தொடர்புகொண்டு பாலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அபாஸுடன் இது குறித்து பேசியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது காஸாவில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச தமது அனுதாபத்தை தெரிவிததுக்கொண்டார். இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி காஸாவில் இஸ்ரேலினால் நடத்தப்படும் தாக்குதல்களில் 166 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பொதுமக்களாவர். கடந்த 7 நாட்களாக … Continue Reading →

Read More