ஜனாதிபதியிடம் நீதி கேட்கிறார் பாலமுனை எஸ்.நபீஸதுல் மிஸ்றியா..!! கிழக்கு மாகாண சபை அதிகாரி அக்கிரமம்

· · 193 Views

தனது தொழில் நியமனத்தில் காட்டப்படும் பாரபட்சம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு, தனக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு கோரி – பெண்ணொருவர் ஜனதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழுள்ள பாலமுனை நூலகத்தில் கடமையாற்றும் எஸ்.நபீஸதுல் மிஸ்றியா எனும் பெண்ணொருவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளார். தனக்கு வழங்க வேண்டிய நியமனத்தினை, தன்னை விடவும் குறைந்த தகைமையுடைய ஒருவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, குறித்த பெண் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். … Continue Reading →

Read More

ஊ..லலல்லா : கண்ணழகி கஜோலை கன்னத்து அழகி சிராந்தி சந்தித்தார்…!! நிதி சேகரிப்பு நிகழ்ச்சி

· · 91 Views

அமெரிக்காவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பிரபல இந்திய திரைப்பட நடிகை கஜோலை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நியூயோர்க்கில் நடைபெற்றுள்ளது.  நிதி சேகரிப்பு நிகழ்ச்சி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியூயோர்க் சென்றுள்ளதுடன் ஷிரந்தி ராஜபக்ஷவும் அவருடன் சென்றுள்ளார்.

Read More

பவித்திராவுக்கு இன்ப அதிர்ச்சி..!! பிரதமாராகிறார் பவித்ரா – D.M. ஜெயரத்னவுக்கு பென்ஷன்

· · 338 Views

ஜனாதிபதி அமெரிக்காவிலிருந்து நாடுதிரும்பியவுடன் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் தேர்தல்களை கவனத்திற் கொண்டு இந்த மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. பெரும்பாலும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரையான குறுகிய காலப்பகுதிக்கு மட்டுமே புதிதாக ஒருவர் பிரதமர் பதவிக்கு அமர்த்தப்படுவார் என்று தெரிய வருகின்றது. தற்போதுள்ள நிலையில் ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து அல்லது அவர்களுக்கு கீழ்ப்படிவுள்ள ஒருவர் பிரதமராக வரவேண்டுமென்பதே ஜனாதிபதியின் விருப்பமாகும். இதன் காரணமாக அமைச்சர்களான பசில் அல்லது பவித்ரா வன்னியாரச்சி ஆகிய இருவரில் … Continue Reading →

Read More

நம்பிட்டோம் Mr. President : மதானி பாய், முஸ்லிம்கள் எனது சகோதரர்கள்..!! அவர்களுக்கு அநீதி ஏற்பட்டால் உடன் நடவடிக்கை

· · 195 Views

இலங்கை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் லயாட் அமீன் மதானியிடம் உறுதியளித்துள்ளார். முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நியூயோர்க்கில் வைத்து மதானியை சந்தித்துள்ளார். இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைச்சின் நாடுகளுடன் நெருங்கிய உறவுகளைப் பேண விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களை சொந்த சகோதரர்களாக … Continue Reading →

Read More

ஜனாதிபதியை சிந்திக்க வைத்த ஊவா மக்களின் சிந்தனை..!! யுத்த வெற்றி மாயை களைகிறது

· · 156 Views

இலங்கையில் எதிர்கால தேர்தலுக்கு வெள்ளோட்டமான ஊவா தேர்தலை பற்றி நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அதன்படியே தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. எமது முன்னைய கட்டுரைகளில் நாம் குறிப்பிட்டடிருந்த விடயம் தான் அராஜகம், வன்முறை, தேர்தல் பொதி போன்ற சம்பவங்கள். தேர்தலில் எதிர்கட்சிகளின் வெற்றியை பாதிக்கலாம் என்றும் அதன் படியே நாம் குறிப்பிட்ட விடயங்களே மிக மோசமான முறையில் நடந்தேறியது. இதன் பிரதிபலிப்பே ஊவா மாகாணத்தில் ஆளும் கட்சியின் வெற்றி எனலாம். ஆனால் இதற்கு பொருத்தமான அரசின் செல்வாக்கு மிக்க … Continue Reading →

Read More

ஆளும் கட்சியை மொனராகலை காப்பாற்றியது.!! மயிரிழையில் தப்பிய அரசாங்கம்

· · 95 Views

  ஊவா மாகாண சபை தேர்தல் முடிவுகள்!  தொகுதி ரீதியாக பதுளை மாவட்ட தேர்தல் முடிவுகள் பரணகம தொகுதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி –  19,127 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி       –  18,930 மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி  – 2, 545 ஜனநாயகக் கட்சி    –  556 தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு  – 307 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  – 44,705 செல்லுபடியானவை    – 42,682 நிராகரிக்கப்பட்டவை  – 2,023 அப்புத்தளை தொகுதி … Continue Reading →

Read More

நம்பியார் வேலைப் பார்க்க இருந்த மக்கள் திலகம் M.G.R…!! வடக்கை தமிழகத்துடன் சேர்க்க முயன்றார் – பதறிய J.R.ஜெயவர்த்தன

· · 134 Views

இலங்கை விடயத்தில் ஆரம்பத்தில் இருந்தே இந்தியா தரப்பில் தவறுகள் இடம்பெற்று வந்தாக இந்திய முன்னாள் அரசியல்வாதி நட்வர்சிங் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி இலங்கை விடயங்கள் தொடர்பில் சில கடுமையான முடிவுகளை எடுத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.     இலங்கை விடயங்களில் சில விடயங்களை தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்ட நட்வர்சிங், ஆரம்பத்தில் இருந்தே இலங்கை தொடர்பில் தவறான விடயங்கள் இடம்பெற்றன என்று … Continue Reading →

Read More

Colombo Port city :ஆரம்பமானது ஆசியாவின் ஆச்சரியம்..!! 4500 ஆயிரம் கோடி செலவில் ஆரம்பமானது PORT CITY திட்டம் – Port city எப்படி இருக்கும்..? வாங்க பார்க்கலாம் O.C trip

· · 605 Views

காலி முகத்திடலுக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படும் புதிய துறைமுக நகர நிர்மாண பணிகள் இன்று கொழும்பு துறைமுக வளாகத்தில் ஆரம்பமானது. இலங்கை வந்துள்ள சீனா ஜனாதிபதி ஜி ஜின்பின் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இந்த ஆரம்ப கட்ட பணிகள் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டன. 500 ஏக்கர் கடற்பரப்பில் இந்த துறைமுக நகரம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இந்த செயற்திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்காக ஆயிரத்து 337 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாண பணிகளுக்காக 1.4 பில்லியன் … Continue Reading →

Read More

ராஜபக்ஸ அற்புத விளக்கு: ஜனாதிபதின் குடும்ப பேரை சொன்னாலே பணம் கொட்டுகிறதாம்..!! 373 முறைப்பாடுகள்

· · 105 Views

இலங்கையில் ராஜபக்ச என்ற பெயரைக் கூறினால் பணம் கிடைக்கும் என்ற தோற்றப்பாடு வேகமாக உருவாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்ற 373 சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன. இது தொடர்பில் 143 பேரை பொலிஸார் கைது  செய்துள்ளனர். இதில் அண்மையில் இடம்பெற்ற சம்பவமாக முதல் பெண்மணி ஷிராந்தியின் வாகன சாரதி என்ற … Continue Reading →

Read More

ஜனாதிபதி அதிரடி: எரிபொருள், மின்சாரக்கட்டணங்கள் இப்போது முதல் குறைந்தன..!! 25 வீதத்தால் குறைந்தது மின்சாரக்கட்டணம்

· · 144 Views

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 5 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.     இதேவேளை, மின்சாரக் கட்டணங்கள் 25 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஊவா மாகாணசபையில் அரசாங்கம் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகவும் … Continue Reading →

Read More

ஷி ஜின்பிங்..,கம்மிங் : 170 பேருடன் இலங்கை வந்தார் சீன ஜனாதிபதி !! ஆசியாவின் பொஸ்க்கு வரலாறு காணாத வரவேற்பு – “pu tong hua”

· · 174 Views

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், எயார் சைனா என்ற விசேட விமானத்தில் மூலமாக கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை முற்பகல்11.53க்கு வந்தைந்தார். விமான நிலையத்தில் வைத்து அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்துக்கு சென்று அவரை வரவேற்றார்.இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்த அவர், 20 ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார். தனது பாரியாருடன் வருகைதந்த அவரை, விமான நிலையத்தில் விரிக்கப்பட்டிருந்த செங்கம்பளத்துக்கு இரு பக்கங்களிலும் நடனக்கலைஞர்கள் நடமாட, … Continue Reading →

Read More

ஜனாதிபதி பயான் : முஸ்லிம் மக்களே! உங்கள் மதத் தலைவர் நபிகள் நாயகம் பிறந்ததும் மக்காவிலே..நீங்கள் இஸ்லாமியர் என்றாலும் அரேபியர் அல்லர்…!!

· · 286 Views

இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் கடமையை எவ்வித பாரபட்சமுமின்றி மேற்கொள்ளுவதற்கு ஏற்ற வகையிலான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் நேரடியாக முன்னெடுக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெலிமடையில் நேற்று தெரிவித்தார். பல தடவைகள் செல்லும் நடை முறைக்குப் பதிலாக அனைத்து முஸ்லிம்களும் இந்த யாத்திரையை மேற்கொள்ள வசதியாக இத்திட்டம் செயற்படுத்தப்படுமென தெரிவித்த ஜனாதிபதிஇ மத விவகார அமைச்சினூடாக இதற்கான நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று வெலிமடையில் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஜனாதிபதி இதனைத் … Continue Reading →

Read More

ஹிஜிங்பிங்..ஜம்பிங் : நுரைசோலைக்கு சீனாகாரவோ வரமாட்டாக !! ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஓபனிங்

· · 158 Views

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் 2 ஆம் 3 ஆம் கட்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஹிஜின் பிங் ஆகியோர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்தே நாளை திறந்துவைக்கவுள்ளதாக ஜனாதிபதியின் சர்வதேச விவகார பணிப்பாளர் அநுராதா ஹேரத் தெரிவித்தார். அத்துடன் மின் சக்தி தொடர்பில் இரு நாடுகளுக்கு மிடையில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட இருப்பதாக மின்சார சபை தெரிவித்தது. இதன்படி மின்சக்தி அமைச்சுடன் ஒரு ஒப்பந்தமும் மின்சார சபையுடன் ஒரு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளன. … Continue Reading →

Read More

வெலிமடையில் கூட்டம் வரவில்லை..!! மேடையில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி

· · 178 Views

பதுளை வெலிமடை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட கூட்டத்தில் மக்கள் குறைவாக கலந்து கொண்டிருந்ததால், ஜனாதிபதி அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார். கூட்டத்தில் 200 பேருக்கும் குறைவான மக்களும் சுமார் 500 பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஊவா மாகாண சபைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஆளும் கட்சியின் ஆட்சி தொடர்பில் ஊவா மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த … Continue Reading →

Read More

தேர்தல் திரு விழா : 2015 ஜனவரி 8 ல் ஜனாதிபதி தேர்தல்..!! மகிந்தவின் பதவிக்காலத்தின் 4 ஆண்டுகள் நிறைவு

· · 122 Views

அடுத்த ஜனாதிபதி தேர்தலை 2015ம் ஆண்டு ஜனவரி முதல் இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பிரகாரம் ஜனவரி மாத ம் 7ம் திகதிக்கும் 11ம் திகதிக்கும் இடைப்பட்ட நாளொன்றில் தேர்தல் நடைபெறும் என்றும், பெரும்பாலும் 8ம் திகதி தேர்தல் நடத்தப்படலாம் என்றும் குறித்த தகவல்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நவம்பர் 20ம் திகதி அறிவிப்பார் என்றும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.     ஜனாதிபதி … Continue Reading →

Read More