குற்றவாளிக் கூண்டில் ரவூப் ஹகீம் : முன் கடன் பின் கடன் !! சவூதி அரேபியா , குவைத் என்பன ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும்…? ஹக்கீம் தான் காரணமா..?

· · 240 Views

இலங்கையில்  இடம்பெற்ற மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை அமெரிக்காவும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரும் முன்னிலைப்படுத்துவது இலங்கை அரசாங்கத்துக்கு புதிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடரில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், மத சிறுபான்மையினர், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளும், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை அவ்வப்போது கண்டித்து வருகின்றனர். இந்தநிலையில், இலங்கைக்கு  எதிராக முன்வைக்கவுள்ள தீர்மானத்தில், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல் விவகாரமும் இடம்பெறும் … Continue Reading →

Read More

பந்து ; சுயேட்சைக் குழுவின் தலைவர் இனாமுல் ஹசனின் பதவி ஏற்பு ஒத்திவைப்பு !! பதவி ஏற்ற உடனேயே ராஜினாமா செய்ய இருந்தாராம் – உறுப்பினராகிறார் அலி சப்ரி

· · 207 Views

  நேற்று திங்கட்  கிழமை  தனது நகரசபை உருப்பினர்ப் பதவியை  சத்தியப் பிரமாணம் செய்து ஏற்றுக் கொள்ள இருந்த புத்தளம் சுயேட்சைக் குழுவின்  தலைவர்  ஏ.எஸ். இனாமுல் ஹசன் தவிர்க்க முடியாத காரணங்களால் அதனை ஒத்தி வைத்துள்ளதாக  செய்திகள் கூறுகின்றன. இனாமுல் ஹசனின் தகப்பனாரும்,புத்தளத்தின்  மூத்த வர்த்தகருமான மர்ஹூம்  அப்துல் சமத் அவர்களின் மரணத்தை அடுத்தே இந்த பதவி ஏற்பு பிரமான  நிகழ்வு பின் போடப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. குறிக்கப்படும் அடுத்த தினத்தில் பதவி ஏற்கவுள்ள  ஜனாப்.இனாமுல் … Continue Reading →

Read More

சுப்ரீம் கட்டைப் பஞ்சாயத்து : அப்பாவி பொறியியலாளர் அப்சல் குருவுக்கு தூக்கு ..ராஜீவைக் கொன்றவர்களுக்கு விடுதலை..!! இந்திய உச்ச நீதிமன்றம் அக்கிரமம்…

· · 213 Views

  பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த மரண தண்டனையை குறைக்க கோரி 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். ஜனாதிபதி பதவிக்கு வந்தவர்கள் ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருணை மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் … Continue Reading →

Read More

என்ன செய்யப்போகிறார் ஜனாதிபதி..? மாடறுப்பு , மத மாற்றம், முஸ்லிம் அடிப்படைவாதம் என்பவற்றுக்கு எதிராக தீக்குளிக்க ஏற்பாடுகள் பூர்த்தி !! சிங்கள ராவய அறிவிப்பு – விடயம் பாரதூரமாக இருக்கிறது ..இறைச்சி கியாஸ் கருத்து !

· · 184 Views

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் சிங்கள ராவய அமைப்பின் பௌத்த பிக்குகள் நாளைய தினம் தீக்குளித்து உயிர் தியாகம் செய்ய தயாராகி வருவதாக அந்த அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார். மாடுகள் அறுக்கப்படுவதற்கு எதிராகவே தாம் இந்த தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர் கூறினார். மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதை நிறுத்துவதாக ஜனாதிபதி தனது கையெழுத்தில் நிரந்தரமான உறுதிமொழிகளை வழங்கும் வரை தாம் இந்த முயற்சியை கைவிடப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். … Continue Reading →

Read More

என்றும் மோர்சி : அதிபர் மோர்சியின் வக்கீல்கள் வெளி நடப்பு…!! வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

· · 290 Views

  எகிப்தில் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முகமது மொர்ஸி மீதான புதிய வழக்கு விசாரணையை கெய்ரோ நீதிமன்றம் ஒன்று ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மொர்ஸி மற்றும் இதர நபர்களை சத்தம் வெளியில் கேட்காத கண்ணாடி அறையில் அடைத்து வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மொர்ஸியின் வக்கீல்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கு வரும் ஞாயிறன்று மீண்டும் விசாரணைக்கு வருகின்றது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் இரானின் புரட்சிக்கர படையினரோடு இணைந்து சதித்தீட்டம் … Continue Reading →

Read More

SLTJ vs SLJI : பற்றியெரியும் மாதம்பை : உள்வீட்டு மோதல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் – SLTJ இணையம் மிரட்டல் – பௌத்தராக மாற மாதம்பை போலீசார் அறிவுரை

· · 322 Views

  மாதம்பையில் நேற்றைய தினம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர் ஆறுபேர் இணைத்து ஒருவரின் வீட்டின் தனியாக ஜூம்ஆ நடாத்த முற்பட்ட வேளை அங்கு அசாதாரண  நிலை  ஏற்பட்டுள்ளது . அந்த வீட்டுக்கு முன்னாள் கூடிய ஒரு குழுவினர்  வீட்டின் மீது கற்களை கொண்டு மோசமான தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் அங்கு நிறுத்தப் பட்டிருந்த மோட்டார் சைக்கில்களுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளனர் .  சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் வீட்டில் தொழுகைக்காக கூடியிருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டு சென்றுள்ளனர் . இந்த கசப்பான … Continue Reading →

Read More

அதிர்ச்சி : குற்றவாளிக் கூண்டில் மாதம்பை ஜமா அதே இஸ்லாமிக் கிளை !! தமது தஹ்வா நிலையம் உடைக்கப்பட்டதாக மாதம்பை தவ்ஹீத் ஜமாஅத் கடும் குற்றச்சாட்டு – படங்கள் ( மாதம்பை ஜமா அதே இஸ்லாமிக்கு இதில் எந்த சம்பந்தமுமில்லை என பள்ளிவாசல் நிர்வாக சபை மறுப்பு மறுப்பு

· · 600 Views

  மாதம்பையில் நேற்றைய தினம் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தினரினால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா நிலையம் உடைக்கப்பட்டு, மத்ரஸா மாணவர்களின் தளபாடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு, புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் கிளித்து எறியப்பட்டு, பொருட்கள் சூரையாடப்பட்டது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் மாதம்பை கிளை சார்பாக கடந்த 03 வருடங்களுக்கும் மேலாக மாதம்பையில் ஏகத்துவப் பிரச்சாரம், சமூக பணிகள், மாணவ மாணவிகளுக்கான கல்வி கருத்தரங்குகள், சிறுவர்களுக்கான குர்ஆன் மத்ரஸா ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாதம்பை … Continue Reading →

Read More

ரத்தத் தாகம்..!! கொழும்பு தேசிய வைத்தியசாலை தொழுகை அறையை மூடுங்கள் PBS – கையாலாகாமல் முஸ்லிம் அரசியல் இயக்க தலைமைகள்

· · 250 Views

கொழும்புதேசிய வைத்தியசாலையில் புதிதாக மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டமுஸ்லிம்களுக்கான வணக்க ஸ்தலகூடத்தை மூடுமாறு – குறித்தவைத்தியசாலையில் உள்ள பெளத்த பிக்குகள் சுகாதார பணிப்பாளர் சுனில்ஜயசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது எனஇலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்பு நீதி அமைச்சின் செயலாளர் சுரேஷ் சாலியவிற்குமுறைப்பாடொன்றை கையளித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்பின் அஷ்ரப் ஹூசைன் கேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 1994ஆம் ஆண்டு முதல் வைத்தியசாலையில்சேவை புரியும் முஸ்லிம் ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் நோயாளிகளுக்காகநிர்மாணிக்கப்பட்ட முஸ்லிம்களின் … Continue Reading →

Read More

கொலைகார இஸ்ரேல் : கொடூர தேசத்தின் மக்கள் அரபுக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்ற விருப்பை கொண்டவர்களா..? இஸ்ரேல் இன்னுமொரு பார்வையில் ( கட்டுரை – பி. ஏ. கிருஷ்ணன் )

· · 428 Views

யூதர்களின் 3,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு இடம்பெயர்தல்களால் நிறைந்தது. ஆனால், அவர்கள் எங்கிருந்தாலும் இஸ்ரேலைப் பற்றியே கனவு கண்டுகொண்டிருந்தார்கள். தங்களுக்காகக் கடவுளால் அளிக்கப்பட்ட பூமி என்று அவர்கள் இஸ்ரேலைக் கருதினார்கள். இன்றும் கருதுகிறார்கள். ஆனால், இஸ்ரேல் 1948-க்கு முன்னால் யூதர்கள் கையில் அநேகமாக இருந்ததே இல்லை என்று சொல்லலாம். அசீரியர்களிலிருந்து தொடங்கி, பிரித்தானியர்கள் வரை இஸ்ரேல் மற்றவர்கள் கையிலேயே இருந்தது. இஸ்ரேல் பிறந்த கதை யூதர்களுக்குத் தனிநாடு ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் வந்தது 19-ம் … Continue Reading →

Read More

ஒரு நிஜப் போராளி : பின்-லேடன் கொல்லப்பட்ட விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை – அமெரிக்க அரசுக்கு மீண்டும் தலைவலி

· · 258 Views

பின்-லேடன் கொல்லப்பட்டபின் எடுக்கப்பட்ட போட்டோக்கள் பற்றி முன்பு அனுப்பப்பட்ட இ-மெயில் உத்தரவு ஒன்று, புதிதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பின்-லேடன் கொல்லப்பட்டு 11-வது நாளில் இந்த இ-மெயில் உத்தரவு, அமெரிக்க ராணுவ உயரதிகாரிகள் சிலருக்கு அட்மிரல் வில்லியம் மக்ராவெனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அட்மிரல் வில்லியம் மக்ராவென், அமெரிக்காவின் சிறப்பு அதிரடி ஆபரேஷன் பிரிவின், மேலதிகாரியாக இருந்தவர். அமெரிக்காவில் சமீபகாலமாக சில சட்ட சர்ச்சைகளில் அடிபடும் அமைப்பான ‘ஜூடிகல் வாட்ச்’ அமைப்பினர்தான், முன்பு அனுப்பப்பட்ட இந்த இ-மெயிலை வெளிப்படுத்தியுள்ளனர். 2011-ம் ஆண்டு, … Continue Reading →

Read More

அமெரிக்காவை நோக்கி நகரும் ஈரானிய நாசகாரிக் கப்பல்கள் !! பஹ்ரேனில் 5ம் கடற்படையை நிறுத்திய அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி –

· · 222 Views

ஈரானின் பல யுத்தக்கப்பல்கள் அமெரிக்க கடற்பரப்பு எல்லையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக ஈரானிய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாரசீக வளைகுடாவில் அமெரிக்க கடற்படை கலங்கள் தரித்து நிற்பதற்கு பதிலடியாக ஈரானிய யுத்த கப்பல்களை அமெரிக்க கடற்படை எல்லையை நோக்கி நகருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்த தகவலை ஈரானிய கடற்படை அதிகாரியான அட்மிரல் அப்ஷின் ரெஸாயீ ஹதாத்தை மேற்கோள் காட்டி ஈரானின் பார்ஸ் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு அருகிலிருந்து அத்திலந்திக் சமுத்திரத்தை நோக்கிய ஈரானிய … Continue Reading →

Read More

Ex chairman on elephant : ஐ.தே.க. அமைப்பளராகிறார் நஸ்மி ..? இப்போதும் நான் தான் அமைப்பாளர் எனக்கு எந்த அறிவித்தலும் இல்லை .. மறுக்கிறார் சக்ரோப் மொஹிடீன்

· · 400 Views

  முன்னாள் நகர சபைத் தலைவரும், சுதந்திரக் கட்சி பிரமுகருமான எம்.என். எம். நஸ்மி  விரைவில்  புத்தளம் ஐ.தே.க. அமைப்பாளராக பதவியேற்க உள்ளதாக  உத்தியோகப் பற்றற்ற, உறுதிபடுத்தப்பட்ட   செய்திகள் தெரிவிக்கின்றன. புத்தளம் நகர சபையின் முதல்வராக இரண்டு முறைக் கடைமையாற்றிய  எம்.என் நஸ்மி, அண்மையில்  புத்தளத்திட்க்கு விஜயம் செய்த ஐ.தே.க.யின் தவிசாளர் கபீர் ஹாசிமுடன்   மேற்கொண்ட பகல் உணவு விருந்தொன்ருக்குப் பின்னர்  ஐ.தே.க.யின் அமைப்பாளராக கடமையாற்ற  சம்மதித்துள்ளார் என  புத்தளம் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு … Continue Reading →

Read More

PMGG காத்தான்குடி : பொய் சொல்ல வேண்டாம் – வாருங்கள் விவாதிப்போம் !! சவால் விடுகிறார் அப்துர் ரஹ்மான் – கடுப்பில் ஹிஸ்புல்லாஹ்

· · 193 Views

PMGG ஊடகப்பிரிவு: “பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார் ஹிஸ்புல்லாஹ்”: பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறார் அப்துர் ரஹ்மான்: பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக பொய்யான கருத்துக்களைக் கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டுள்ள பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவரை இவ்விடயம் தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் அழைப்பு விருத்துள்ளார். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் நேற்று மாலை (05.02.2014) பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விற்கு அனுப்பியுள்ள … Continue Reading →

Read More

பெரோசா தாத்தாக்கு வந்த ஆசை !! கொழும்பு மேயரின் மனைவிக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட ஐ.தே.க. வில் சந்தர்ப்பம் கொடுக்க முடியாது – ரவி கருணாநாயக்க போர்க் கொடி

· · 185 Views

கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸ்ஸாமிலின் மனைவியான பெரோஸா முஸ்ஸாமில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை கோரியுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிலைமையில், கொழும்பு மேயருக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரான ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் பாரதூரமான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு மாவட்டத்தின் தொகுதி அமைப்பாளர்கள் சிலரை அண்மையில் … Continue Reading →

Read More