நானாமாருக்கு நோ : முஸ்லிம்கள் இல்லாத கொழும்பை உருவாக்க அரசாங்கம் திட்டம்..? வெளிவரும் சதி முயற்சிகள் பற்றிய செய்திகள்

· · 155 Views

கொழும்பு நகரில் வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக ராஜபக்ஷ அரசாங்கம் சூழ்ச்சிகரமான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக  முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் இந்த சூழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாளிகாவத்தை எபல் தோட்டத்தில் குடியிருந்த ஆயிரத்து 100 குடும்பங்களையும் கொம்பனித் தெரு ஜாவா லேன் பகுதியில் வசித்து வந்த 450 குடும்பங்களையும், ஸ்டேசன் பெசேஜ் பகுதியில் … Continue Reading →

Read More

En extraordinary phenomenon : நாம் யார், எங்கு போகிறோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம் அணி VS ஒரு வானம் ஒரு பிறை தத்துவக்கார அணி – ” இந்த சமூகம் எங்கு செல்கிறது? என்ன செய்து கொண்டிருக்கிறது….? ஒரு ஆதங்கம்

· · 161 Views

இந்தக் கொஞ்ச நாட்களாக கொஞ்சம் நிம்மதிப் பெரு மூச்சு விடக் கூடியதாக இருக்கிறது.  இப்போதெல்லாம் பள்ளி உடைப்பு சம்பவங்கள் பற்றி ஊடகங்கள் பேசுவதில்லை. ஆனால் அதைப்பற்றி  அடிகடிப் பேசப்பட்ட நாட்களில் முஸ்லிமாகப் பிறந்த ஒவ்வொருவரின் நாடி நரம்புகள் புடைத்தெழுந்ததை அவதானித்தோம். மழைக்குக் கூட பள்ளிப் பக்கம் ஒதுங்காதவர்களுக்குக் கூட தானாடாவிட்டாலும் அவர்கள் தசையாடியது.  சாதுவாக இருக்க வேண்டிய சாதுக்களின் தூண்டுதலால்  செய்யப்பட்ட சின்னத் தனங்கள்  “கைர்” உம்மத்துக்களாலேயே செய்யப்படுவதைக் காணும்போதுதான் கையளவு இதயம் ஆயிரம் கிலோ இரும்புப் … Continue Reading →

Read More

பாலைவன ரோஜாக்கள்: முத்தமிடல், கட்டியணைத்தல், தொடுகை போன்ற செயற்பாடுகள் சவூதி மாணவிகளுக்கு தடை!! – இந்த தடை முட்டாள்தனமானது என்று மாணவிகள் ஆட்சேபம்

· · 174 Views

சவூதி அரேபியாவிலுள்ள பெண்களுக்கான மருந்தாக்கவியல் கல்லூரி ஒன்று அக்கல்லூரி மாணவிகளுக்கு விநோதகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது முத்தமிடல், கட்டிணைத்தல் தொடுகை போன்ற செயற்பாடுகள்மாணவிகளுக்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி அறிவிப்புப்பலகையில் வெளியிடப்பட்ட விதி முறைகள் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியின் தலைமை கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், கட்டாயம் உரிய சீருடை அணிய வேண்டும், கல்லூரி அடையாள அட்டையை வைத்திருக்கவேண்டும், வகுப்புகளுக்கு பின்னர் ஆய்வுகூடங்களில் இருக்கக் கூடாது.விதிகளை ஏற்றுக்கொள்ளவும் இல்;லையெனில் கடுமையான நடவடிக்கைகள்எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் … Continue Reading →

Read More

மாதம்பைக் கலவரம் : அவர்கள் vs இவர்கள் : மாதம்பை தவ்ஹீத் ஜமாத்தின் ஜும்மா குறித்த ஜமாதே இஸ்லாமியின் விமர்சனத்துக்கு பதில் – SLTJ

· · 214 Views

  ‘நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 03: 31 ”அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்” எனக் கூறுவீராக! திருக்குர்ஆன் 03: 32 ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தனது ஏகத்துவப் பிரச்சாரத்தை நாடு முழுவதிலும் தொடர்ச்சியாக செய்து வருவது யாவரும் அறிந்ததே. அந்த வகையில் புத்தளம் மாவட்டம் மாதம்பை … Continue Reading →

Read More

மாதம்பை கலவரம் : அவர்கள் vs இவர்கள் : ” மாதம்பையில் உண்மையில் நடந்தது என்ன .? அஷ்ஷெய்க். எம்.இஸட். றிஸ்வானுர் றஹீம் (நளீமி)

· · 190 Views

14.02.2014 வெள்ளிக்கிழமை அன்று மாதம்பையில் நடைபெற்ற அசம்பாவிதம் குறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை ஊடகங்கள் மூலம் வெளியிட்டு வருவதைக் காண்கிறேன். இவர்களில் மிகச் சிலரே உண்மைநிலையை அறிந்து கருத்து வெளியிடுகின்றனர். எனினும் ஊடகங்கள் மூலம் ஒரு பொய்யை பலரும் சொல்லும் போது அது உண்மையாகி விடுவதைப் போல ஒரு கதைதான் மாதம்பையிலும் நடைபெற்றிருக்கிறது. மாதம்பையோடு திருமண உறவு மூலம் தொடர்புபட்டவன் என்ற வகையிலும் மாதம்பை பள்ளிவாயலின் ஓர் அங்கத்தவன் என்ற வகையிலும் உண்மை நிலையினை சொல்லிக் … Continue Reading →

Read More

குற்றவாளிக் கூண்டில் ரவூப் ஹகீம் : முன் கடன் பின் கடன் !! சவூதி அரேபியா , குவைத் என்பன ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும்…? ஹக்கீம் தான் காரணமா..?

· · 214 Views

இலங்கையில்  இடம்பெற்ற மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை அமெரிக்காவும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரும் முன்னிலைப்படுத்துவது இலங்கை அரசாங்கத்துக்கு புதிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடரில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், மத சிறுபான்மையினர், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளும், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை அவ்வப்போது கண்டித்து வருகின்றனர். இந்தநிலையில், இலங்கைக்கு  எதிராக முன்வைக்கவுள்ள தீர்மானத்தில், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல் விவகாரமும் இடம்பெறும் … Continue Reading →

Read More

பந்து ; சுயேட்சைக் குழுவின் தலைவர் இனாமுல் ஹசனின் பதவி ஏற்பு ஒத்திவைப்பு !! பதவி ஏற்ற உடனேயே ராஜினாமா செய்ய இருந்தாராம் – உறுப்பினராகிறார் அலி சப்ரி

· · 176 Views

  நேற்று திங்கட்  கிழமை  தனது நகரசபை உருப்பினர்ப் பதவியை  சத்தியப் பிரமாணம் செய்து ஏற்றுக் கொள்ள இருந்த புத்தளம் சுயேட்சைக் குழுவின்  தலைவர்  ஏ.எஸ். இனாமுல் ஹசன் தவிர்க்க முடியாத காரணங்களால் அதனை ஒத்தி வைத்துள்ளதாக  செய்திகள் கூறுகின்றன. இனாமுல் ஹசனின் தகப்பனாரும்,புத்தளத்தின்  மூத்த வர்த்தகருமான மர்ஹூம்  அப்துல் சமத் அவர்களின் மரணத்தை அடுத்தே இந்த பதவி ஏற்பு பிரமான  நிகழ்வு பின் போடப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. குறிக்கப்படும் அடுத்த தினத்தில் பதவி ஏற்கவுள்ள  ஜனாப்.இனாமுல் … Continue Reading →

Read More

சுப்ரீம் கட்டைப் பஞ்சாயத்து : அப்பாவி பொறியியலாளர் அப்சல் குருவுக்கு தூக்கு ..ராஜீவைக் கொன்றவர்களுக்கு விடுதலை..!! இந்திய உச்ச நீதிமன்றம் அக்கிரமம்…

· · 182 Views

  பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த மரண தண்டனையை குறைக்க கோரி 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். ஜனாதிபதி பதவிக்கு வந்தவர்கள் ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருணை மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் … Continue Reading →

Read More

என்ன செய்யப்போகிறார் ஜனாதிபதி..? மாடறுப்பு , மத மாற்றம், முஸ்லிம் அடிப்படைவாதம் என்பவற்றுக்கு எதிராக தீக்குளிக்க ஏற்பாடுகள் பூர்த்தி !! சிங்கள ராவய அறிவிப்பு – விடயம் பாரதூரமாக இருக்கிறது ..இறைச்சி கியாஸ் கருத்து !

· · 160 Views

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் சிங்கள ராவய அமைப்பின் பௌத்த பிக்குகள் நாளைய தினம் தீக்குளித்து உயிர் தியாகம் செய்ய தயாராகி வருவதாக அந்த அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார். மாடுகள் அறுக்கப்படுவதற்கு எதிராகவே தாம் இந்த தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர் கூறினார். மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதை நிறுத்துவதாக ஜனாதிபதி தனது கையெழுத்தில் நிரந்தரமான உறுதிமொழிகளை வழங்கும் வரை தாம் இந்த முயற்சியை கைவிடப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். … Continue Reading →

Read More

என்றும் மோர்சி : அதிபர் மோர்சியின் வக்கீல்கள் வெளி நடப்பு…!! வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

· · 252 Views

  எகிப்தில் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முகமது மொர்ஸி மீதான புதிய வழக்கு விசாரணையை கெய்ரோ நீதிமன்றம் ஒன்று ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மொர்ஸி மற்றும் இதர நபர்களை சத்தம் வெளியில் கேட்காத கண்ணாடி அறையில் அடைத்து வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மொர்ஸியின் வக்கீல்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கு வரும் ஞாயிறன்று மீண்டும் விசாரணைக்கு வருகின்றது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் இரானின் புரட்சிக்கர படையினரோடு இணைந்து சதித்தீட்டம் … Continue Reading →

Read More

SLTJ vs SLJI : பற்றியெரியும் மாதம்பை : உள்வீட்டு மோதல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் – SLTJ இணையம் மிரட்டல் – பௌத்தராக மாற மாதம்பை போலீசார் அறிவுரை

· · 274 Views

  மாதம்பையில் நேற்றைய தினம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர் ஆறுபேர் இணைத்து ஒருவரின் வீட்டின் தனியாக ஜூம்ஆ நடாத்த முற்பட்ட வேளை அங்கு அசாதாரண  நிலை  ஏற்பட்டுள்ளது . அந்த வீட்டுக்கு முன்னாள் கூடிய ஒரு குழுவினர்  வீட்டின் மீது கற்களை கொண்டு மோசமான தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் அங்கு நிறுத்தப் பட்டிருந்த மோட்டார் சைக்கில்களுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளனர் .  சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் வீட்டில் தொழுகைக்காக கூடியிருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டு சென்றுள்ளனர் . இந்த கசப்பான … Continue Reading →

Read More

அதிர்ச்சி : குற்றவாளிக் கூண்டில் மாதம்பை ஜமா அதே இஸ்லாமிக் கிளை !! தமது தஹ்வா நிலையம் உடைக்கப்பட்டதாக மாதம்பை தவ்ஹீத் ஜமாஅத் கடும் குற்றச்சாட்டு – படங்கள் ( மாதம்பை ஜமா அதே இஸ்லாமிக்கு இதில் எந்த சம்பந்தமுமில்லை என பள்ளிவாசல் நிர்வாக சபை மறுப்பு மறுப்பு

· · 548 Views

  மாதம்பையில் நேற்றைய தினம் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தினரினால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா நிலையம் உடைக்கப்பட்டு, மத்ரஸா மாணவர்களின் தளபாடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு, புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் கிளித்து எறியப்பட்டு, பொருட்கள் சூரையாடப்பட்டது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் மாதம்பை கிளை சார்பாக கடந்த 03 வருடங்களுக்கும் மேலாக மாதம்பையில் ஏகத்துவப் பிரச்சாரம், சமூக பணிகள், மாணவ மாணவிகளுக்கான கல்வி கருத்தரங்குகள், சிறுவர்களுக்கான குர்ஆன் மத்ரஸா ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாதம்பை … Continue Reading →

Read More

ரத்தத் தாகம்..!! கொழும்பு தேசிய வைத்தியசாலை தொழுகை அறையை மூடுங்கள் PBS – கையாலாகாமல் முஸ்லிம் அரசியல் இயக்க தலைமைகள்

· · 199 Views

கொழும்புதேசிய வைத்தியசாலையில் புதிதாக மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டமுஸ்லிம்களுக்கான வணக்க ஸ்தலகூடத்தை மூடுமாறு – குறித்தவைத்தியசாலையில் உள்ள பெளத்த பிக்குகள் சுகாதார பணிப்பாளர் சுனில்ஜயசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது எனஇலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்பு நீதி அமைச்சின் செயலாளர் சுரேஷ் சாலியவிற்குமுறைப்பாடொன்றை கையளித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்பின் அஷ்ரப் ஹூசைன் கேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 1994ஆம் ஆண்டு முதல் வைத்தியசாலையில்சேவை புரியும் முஸ்லிம் ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் நோயாளிகளுக்காகநிர்மாணிக்கப்பட்ட முஸ்லிம்களின் … Continue Reading →

Read More

கொலைகார இஸ்ரேல் : கொடூர தேசத்தின் மக்கள் அரபுக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்ற விருப்பை கொண்டவர்களா..? இஸ்ரேல் இன்னுமொரு பார்வையில் ( கட்டுரை – பி. ஏ. கிருஷ்ணன் )

· · 370 Views

யூதர்களின் 3,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு இடம்பெயர்தல்களால் நிறைந்தது. ஆனால், அவர்கள் எங்கிருந்தாலும் இஸ்ரேலைப் பற்றியே கனவு கண்டுகொண்டிருந்தார்கள். தங்களுக்காகக் கடவுளால் அளிக்கப்பட்ட பூமி என்று அவர்கள் இஸ்ரேலைக் கருதினார்கள். இன்றும் கருதுகிறார்கள். ஆனால், இஸ்ரேல் 1948-க்கு முன்னால் யூதர்கள் கையில் அநேகமாக இருந்ததே இல்லை என்று சொல்லலாம். அசீரியர்களிலிருந்து தொடங்கி, பிரித்தானியர்கள் வரை இஸ்ரேல் மற்றவர்கள் கையிலேயே இருந்தது. இஸ்ரேல் பிறந்த கதை யூதர்களுக்குத் தனிநாடு ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் வந்தது 19-ம் … Continue Reading →

Read More

ஒரு நிஜப் போராளி : பின்-லேடன் கொல்லப்பட்ட விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை – அமெரிக்க அரசுக்கு மீண்டும் தலைவலி

· · 232 Views

பின்-லேடன் கொல்லப்பட்டபின் எடுக்கப்பட்ட போட்டோக்கள் பற்றி முன்பு அனுப்பப்பட்ட இ-மெயில் உத்தரவு ஒன்று, புதிதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பின்-லேடன் கொல்லப்பட்டு 11-வது நாளில் இந்த இ-மெயில் உத்தரவு, அமெரிக்க ராணுவ உயரதிகாரிகள் சிலருக்கு அட்மிரல் வில்லியம் மக்ராவெனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அட்மிரல் வில்லியம் மக்ராவென், அமெரிக்காவின் சிறப்பு அதிரடி ஆபரேஷன் பிரிவின், மேலதிகாரியாக இருந்தவர். அமெரிக்காவில் சமீபகாலமாக சில சட்ட சர்ச்சைகளில் அடிபடும் அமைப்பான ‘ஜூடிகல் வாட்ச்’ அமைப்பினர்தான், முன்பு அனுப்பப்பட்ட இந்த இ-மெயிலை வெளிப்படுத்தியுள்ளனர். 2011-ம் ஆண்டு, … Continue Reading →

Read More