துவேஷமாக செயற்படும் கபீர் ஹாசீமை செயலாளர் பதவியில் இருந்து நீக்குக..!!ஐ.தே.க. முக்கிய அமைச்சர்கள் போர்க் கொடி

· · 960 Views

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுசெயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் கபீர் ஹாசிமை நீக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது.கட்சியின் முக்கிய அமைச்சர்கள் சிலர் இதுதொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.     உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தெரிவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க கபீர் ஹாசிம் தோல்வி அடைந்திருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.ஆனால் அவர் இனவாதத்துடன் நடந்துக் கொள்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.         இந்தநிலையில் அவருக்கு பதிலாக பிரதி … Continue Reading →

Read More

பின்வாசல் என்ட்ரன்ஸ் சிக்கலில்..? நாளை 7ம் திகதிக்கு முன்னதாக பெண் பிரதிநிதிகளின் பெயர்களை வழங்க வேண்டும் !! இல்லாவிடில் அந்த இடம் வெற்றிடமாக அறிவிக்கப்படும்

· · 404 Views

வெற்றிபெற்ற சகல கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் பெண் பிரதிநிதிகளின் பெயர் அடங்கிய தமது பெயர்பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.     பெண்பிரதிநிதிகளின் பெயர் குறிப்பிடப்படாத பட்சத்தில் குறித்த கட்சி அல்லது சுயேட்சை குழுவின் பெயர் பட்டியலின்படி வர்த்தமானி அறிவித்தலில் பெண் வேட்பாளர்களுக்கான பதவி வெற்றிடமாகவே அறிவிக்கப்படுமென மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.         பெண் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதில் கட்சிகளின் … Continue Reading →

Read More

Cabinet 2018 : ஹக்கீம், ரிஷாத் அமைச்சுக்களில் மாற்றமில்லை !! கபீர் ஹாசிமும், கிரியள்ளவும் தத்தமது அமைச்சை மாற்றிக் கொண்டார்கள்..!! சொன்ன மாதிரி எதுவுமில்லை

· · 676 Views

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பு வரும் 25ஆம் திகதி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.       உள்ளுராட்சி சபைத் தேர்தலின் பின்னர் அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.         எனினும், அமைச்சரவை மாற்றம் இன்று அல்ல நாளை என நாளுக்கு நாள் பிற்போடப்படுகிறது.         அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்படும் எனவும், ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என பேசப்படுபவர்களுக்கும், பணிகளை சரியாக முன்னெடுக்காதவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் … Continue Reading →

Read More

இம்முறை உள்ளூராட்சி சபைகளுக்கு 5 ஆயிரத்து 75 உறுப்பினர்கள் தெரிவு..!! 5% குறைவாக வாக்கெடுத்தவர்களின் டெபொசிட் காலி

· · 323 Views

இம்முறை உள்ளூராட்சி மன்றங்களுக்காக 5 ஆயிரத்து 75 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 5% இற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற அனைத்து வேட்பாளர்களினதும் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்படும் என்றும் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 2ம் திகதிக்கு முன்னர் கட்சிகளின் செயலாளர்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும். இந்தப் பட்டியல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று … Continue Reading →

Read More

E.A.P. நிறுவனம் விற்பனைக்கு !! லைக்கா அதிபர் அலிராஜா சுபாஸ்கரன் வாங்குகிறார்

· · 512 Views

EAP குழும நிறுவனத்தை பிரித்தானிய நிறுவனமொன்றிற்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கைகள் நேற்று (20) வெளியாகியுள்ளன.         வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள் தொடர்பில் மேற்பார்வை செய்யும் மத்திய வங்கியில் உள்ளடங்கும் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் நியூஸ் பெஸ்ட் இது தொடர்பில் வினவியது.       இந்த விடயம் தொடர்பில் EAP குழுமத்தின் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக உறுதி செய்த டபிள்யூ. ரணவீர, மத்திய வங்கியிடம் இதற்கான … Continue Reading →

Read More

ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல். ஏ. அசீஸை நியமிக்க முடிவு – இலங்கை முஸ்லிம்களுக்கு கௌரவம்

· · 407 Views

ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல். ஏ. அசீஸை நியமிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது. இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி, மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் இளவரசர் ஷைட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார். பொறுப்புக்கூறல் தொடர்பில் 30/1 பிரேரணையை … Continue Reading →

Read More

அமைச்சரவையில் மாற்றங்கள்…!! ஹக்கீமின் அமைச்சில் மாற்றம்..றிஷாத் முன்னைய அமைச்சில் தொடர்வார்

· · 1656 Views

தற்போதைய தேசிய அரசாங்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கிடையே நேற்று (19) நடைபெற்ற சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.         அமைச்சரவையில் பல மாற்றங்களைச் செய்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி நிதி, சட்டம் ஒழுங்கு, நெடுஞ்சாலை, வெளிவிவகாரம், முதலீட்டு ஊக்குவிப்பு, விவசாயம், நகர அபிவிருத்தி, ஊடகம் ஆகிய அமைச்சுக்களில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.       ஜனாதிபதிக்கும், … Continue Reading →

Read More

இன்றைய கூட்டாச்சி என்ற நல்லாட்சியை இன்னொரு தேர்தலில் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் !! – இஷாம் மரைக்கார்

· · 374 Views

3 வருடங்களின் முன் அன்னப்பறவையில் ஒன்று சேர்ந்தவர்களின் இலக்கு வெறுமணே இந்த நாட்டில் இருந்த ஜனாதிபதி அகிந்த ராஜபக்ஸ அவர்களை தோற்கடிப்பது என்ற குறுகிய நோக்கமே தவிர இந்த நாட்டை சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என்ற நீண்ட கால இலக்கு கிடையாது என்றே கூற வேண்டும். தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களோடு ஒன்று சேர்ந்த இந்த கட்சிகள் மஹிந்த அவர்களை தோற்கடித்த பின்பு, இந்த நாட்டை திறன்பட நடத்திச்செல்லவும் இல்லை, கள்வர்களை கைதுசெய்யவுமில்லை, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் இல்லை, குறைந்தது … Continue Reading →

Read More

அரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்..!! மார்ச் 5ல் பரீட்சை

· · 313 Views

அரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.         இதன் அடிப்படையில் பரீட்சை மற்றும் வரையறுக்கப்பட்ட பரீட்சையில் தகுதி பெற்றுள்ளவர்களுக்கான நேர்முக பரீட்சை அடுத்த மாதம் ஐந்தாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.     . சமீபத்தில் நடைபெற்ற பரீட்சையில் பரீட்சார்த்திகள் பெற்ற புள்ளிகள் தற்பொழுது இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மாவட்ட மட்டத்தில் அரச முகாமைத்துவ சேவைக்கு தகுதி பெற்றுள்ளவர்களுக்கான வெட்டுப்புள்ளி இணையத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். தகுதி பெற்றவர்கள் நேர்முக … Continue Reading →

Read More

Special cover story : பிரதமர் ரணிலை பதவியில் இருந்து அகற்ற தொடர்ந்து முயற்சிக்கும் சிரச !! மகாராஜாவின் இந்த சசலப்புக்கு அஞ்சாத பிரதமர்

· · 813 Views

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள வாக்குகளையும், அதன் முடிவுகளையும் பல்வேறு தரப்பினர் பல்வேறு கோணங்களில் பார்க்கின்றனர். அதில் சிலர், தேர்தல் முடிவுகளுக்கமைய பிரதமர் பதவி விலக வேண்டும் என அபிப்பிராயப்படுகின்றனர். இவ்வாறு கருதுபவர்களில் சிரச ஊடக வலையமைப்பு முன்னணி வகிக்கிறது.         தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் தொடர்ச்சியாக ரணில் விக்ரமசிங்க மீது தாக்குதல் நடத்தும் வகையில் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது. அல்லது ரணில் விக்ரமசிங்கவை ஊடகத்தில் சலவை (கழிவு … Continue Reading →

Read More

பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் அந்த சபைகளே தங்களுக்குள் ஒருவரை தலைவராக தெரிவு செய்ய வேண்டும்..!!அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

· · 903 Views

உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின்படி எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத சபைகளில் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு பகிரங்க வாக்கெடுப்பொன்றை அல்லது இரகசிய வாக்கெடுப்பொன்று நடத்தப்படும் என உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்◌ாளர்.       இந்த விடயம் உள்ளுராட்சி சபைகள் சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், பகிரங்கமாக வாக்கெடுப்பு நடத்தி தேர்ந்தெடுப்பதே மிகச் சிறந்தது என்பதே தனது கருத்து எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.     மேலும் கருத்துரைத்த அமைச்சர், உள்ளுராட்சி சபைகள் சட்டத்தில் எவ்விதத்திலும் … Continue Reading →

Read More

இலங்கையின் பிரதமாகிறார் நிமால் சிறிபால டி சில்வா !! கொழும்பு அரசியல் சூடு தணிகிறது

· · 1382 Views

மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் இணைந்து, ஆட்சியமைக்கும் முயற்சியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.       ஐதேகவை நீக்கி விட்டு மகிந்த ராஜபக்சவின் ஆதரவுடன், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராகக் கொண்ட ஆட்சியை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி நேற்று முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.       இது தொடர்பாக சிறிலங்கா அதிபருடன், சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பேச்சுக்களை நடத்திய போது, நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக … Continue Reading →

Read More

“உள்ளூராட்சி மன்றத்தில் பெண்களை நியமிப்பதில்பெரும் சிக்கல்..!! முன் கூடியே அரசை எச்சரித்தோம்..அவர்கள் கேட்கவில்லை என்கிறார் ஆணையாளர் – வட்டாரங்களை வென்ற ஆண்களை விலகக் கூறுவது பாவம் என்கிறார் அவர்

· · 676 Views

நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வட்டாரமொன்றில் கடசியொன்று கூடுதலான வாக்குகள் பெறப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்திலும் 25 சதவித பெண் பிரதிநிதித்துவத்தை ஈடு செய்வது மிக சிரமமான விடயமாக அமைந்துள்ளது.         இதன் மூலம் வெற்றிப் பெற்ற ஏனைய ஆண் பிரதிநிதிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.         தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்ட அவர் இதனால் முறைப்படி … Continue Reading →

Read More

கிரிகஹட்ட செலவுக்கு உதவும் : நகர சபையின் / பிரதேச சபையின் சேர்மன், வைஸ் சேர்மன், உறுப்பினர்களுக்கு எவ்வளவு சம்பளம்..? மாதம் 18 கோடியே 28 செலவாகிறது அரசாங்கத்திற்கு

· · 407 Views

உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற/ தேர்ந்தெடுக்கப்பட்ட 8325 உறுப்பினர்களுக்கு சம்பளம்/ படிகள் ( Allowances)மாதாந்தம் வழங்க 18 கோடி 28 இலட்சம் செலவாகும்.         மாநகர சபையாயின்( Municipal Council) மாநகர முதல்வருக்கு( Mayor ) மாதாந்தம் ரூபா 30,000 , மாநகர பிரதி முதல்வர் ரூபா 25,000 மற்றும் மாநகர சபை உறுப்பினருக்கு ரூபா 20,000 மாதாந்தக் கொடுப்பனவை பெற முடியும் (உபசரணைக் கொடுப்பனவு இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது).         … Continue Reading →

Read More

கேள்வி – பதில் : ” வட்டாரத்தில் தெரிவு செய்யப்படாத ஒருவரை மேயராக / தவிசாளராக தெரிவுசெய்ய முடியுமா..? விடை என்ன..?

· · 660 Views

கேள்வி : வட்டாரத்தில் தெரிவு செய்யப்படாத ஒருவரை மேயராக/ தவிசாளராக தெரிவுசெய்ய முடியுமா?     இந்த சட்டப்பிரச்சினைக்குக் காரணம் உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்திருத்தத்தின் சரத்து 66B(1) இல் பாவிக்கப்பட்டிருக்கின்ற ஒரு சொற்பிரயோகம்; என்று கூறப்படுகிறது.       50% அல்லது அதற்கு மேலான ஆசனங்களை உள்ளூராட்சி சபையொன்றில் ஒரு கட்சியோ, சுயேச்சையோ பெறுகின்றபோது தெரிவுசெய்யப்பட்ட ( elected) வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையாளர் வர்த்தமானியில் பிரசுரித்ததன்பின் அக்கட்சியின் செயலாளரை/ சுயேச்சைத் தலைவரை அவர்களின் அங்கத்தவர்களிற்குள்ளிருந்து ( … Continue Reading →

Read More