Special News : ஜீவரூபியை இடை நிறுத்தியது சூரியன்..!! தவறுதலாக சொல்லி விட்டேன் என்கிறார் ஜீவரூபி – மன்னிப்போம் – Video

· · 26059 Views

சூரியன் பெண் அறிவிப்பாளரினால் குறிப்பிட்ட ஸலாம் தொடர்பான சர்ச்சை தொடர்பில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சூரியன் பெண் அறிவிப்பாளர் ஜீவரூபியின் ஸலாம் தொடர்பான சர்ச்சை கடந்த இரண்டு மூன்று தினங்களாக முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் புயலாக வீசிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நேற்று இப்பெண் சூரியன் வானொலி நிறுவனத்தினால் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஸலாம் தொடர்பில் குறித்;த பெண் அறிவிப்பாளரின் கருத்துக்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் குறித்த பெண் தனக்கு நெருக்கமான முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மற்றும் … Continue Reading →

Read More

சூடான் நாட்டில் கற்க: மருத்துவம், மருந்தகவியல், பல்மருத்துவம், பொறியியல், விவசாயம்,..- 2015 A / L சித்தியடைந்த மாணவர்கள் உடன் விண்ணப்பிக்கலாம்..!! அனைத்தும் இலவசம்

· · 753 Views

சூடானில் உயர்கல்வி கற்க விரும்புவோர் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். மருத்துவம், மருந்தகவியல், பல்மருத்துவம், பொறியியல், விவசாயம், கால்நடை மருத்துவம், நிர்வாகம், கணக்கியல், பொருளியல், உயிரியல், விஞ்ஞானம், மொழிபெயர்ப்பு, இஸ்லாமிய கற்கைநெறிகள், இஸ்லாமிய சட்டம் ஆகிய துறைகளில் கற்கைநெறிகளை பின்பற்ற முடியும். 2015 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் தங்களது சுயவிபரக்கோவையை 0112333563 என்ற தொலை நகலுக்கோ அல்லது overseashigherstudies@gmail.com என்ற ஈமெயிலுக்கோ உடன் அனுப்பிவைக்கவும். இந்த கற்கைநெறிகளுக்கான செலவு, … Continue Reading →

Read More

சவூதியில் இருந்து நாடு திரும்புபவர்கள்,4 மணித்தியாலங்களுக்கு முன்னரே ஏர்போர்ட் செல்ல வேண்டும்..!!ஏன்..?

· · 351 Views

சவூதியிலிருந்துஊருக்குசெல்லும்போதுவிமானநிலையங்களுக்குகுறைந்தது 4 மணிநேரத்திற்கு முன் செல்வது நல்லது. காரணம் இப்போது போகும்போதும் நீங்கள் உங்கள் விரல் அடையாளம் Finger Print கொடுக்கவேண்டியுள்ளதுஉங்களுக்கு எந்த குற்ற பின்னணியும் உள்ளதா அல்லது பேங்க் வரவு செலவு பாக்கி கார் வாங்கி பெயர் மாற்றாமல் இருந்தாலோ உங்கள் பெயரில் கார் வாங்கி அது வேறு ஒருவர் பெயருக்கு மாற்றாமல் இருந்தாலோ நீங்கள் எக்சிட் செல்ல முடியாது.  இவை அனைத்தும் சரி செய்த பிறகே நீங்கள் செல்ல முடியும் பரிசோதனைக்காக. ஏற்கெனவே நமது … Continue Reading →

Read More

சவுதி அரேபியாவில் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் தொழிலாளர் சார்ப்பாக முக்கிய மாற்றங்கள்..!! விபரம்

· · 959 Views

சவுதி அரேபியாவில் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது சவுதி அரசாங்கம்.  அதன்படி பின்வரும் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொழிலாளரின் passport அந்த தொழிலாளரிடமே ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்காத நிறுவனங்களுக்கு 2000 ரியால் அபராதம் விதிக்கப்படும். தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தை (employee contract papper) தொழிலாளரிடம் வழங்காத நிறுவனங்களுக்கு 5000 ரியால் அபராதம் விதிக்கப்படும். தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தில் இல்லாத வேலையை செய்ய வற்புறுத்தும் நிறுவனங்களுக்கு 15000 ரியால் அபராதம் விதிக்கப்படும். ஊதியத்தை … Continue Reading →

Read More

தகுதி இல்லாத, அனுபவமில்லாத ஊழியர்களினாலேயே நுரைச்சோலை மின் நிலையம் அடிக்கடி பிரேக் டவ்ன்..!! சீனா, அரசாங்கத்திற்கு அறிவிப்பு

· · 541 Views

நுரைச்சோலை அனல் மின் நிலையம் அடிக்கடி செயலிழந்தமைக்கு இலங்கை அதிகாரிகளே காரணம் என சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் மின் உற்பத்தி நிலையம் தொடர்ச்சியாக செயலிழந்தமைக்கு இலங்கை மின்சார சபையின் சில அதிகாரிகளின் நடவடிக்கைகளே காரணம் என தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை உருவாக்கிய சீனாவின் சிமெக் என்ற நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு 16 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. சில மின் பொறியியலாளர்களின் நடவடிக்கைகள் மட்டுமன்றி, அனுபவம் இல்லாத பயிற்சி … Continue Reading →

Read More

அடிப்படை சம்பளங்களில் மாற்றம் : டாக்டர்கள் 52,500/=, அரச அதிகாரிகளுக்கு 24,230 /= -அரசாங்கம் அறிவிப்பு

· · 5023 Views

அரச வைத்தியர்களின் அடிப்படை சம்பளமானது 52,500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என அரச பரிபாலன, நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இன்று ஊவா மாகாண வாசிகசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அரச அதிகாரிகளின் அடிப்படை சம்பளங்கள் 11,730 ரூபாயிலிருந்து 24,230 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ள அதே வேளை அரச வைத்தியர்களின் அடிப்படை சம்பளமானது 24,500இல் இருந்து 52,500ஆக அதிகரிக்கப்படுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

கட்டார் தொழிலாளர்களுக்கான பின்னேர ஓய்வு முறை நடை முறையில்..!! எந்த நேரங்களில் ஓய்வு..?

· · 466 Views

கத்தாரில்‬ இன்று முதல் தொழிலாளர்களுக்கு மத்தியான நேரம் ஓய்வு முறை நடைமுறைக்கு வந்தது. இதன் படி கத்தாரில் ஆகஸ்டு 30 வரையும் UAE-யில் செப்டம்பர் 15 வரையிலும் இது நடைமுறையில் இருக்கும். இதில் UAE-யில் 11:30 முதல் 3:30 வரையிலும் கத்தாரில் 11:00 முதல் 3:30 வரையிலும் ஓய்வு அளிக்க வேண்டும். இதற்கு ஏற்றார் போல் காலையிலும் மாலையிலும் வேலை நேரம் மாற்றி அமைக்க வேண்டும். சட்டத்தை  மீறும்கம்பெனிகளுக்கு அபராதமாக விதிக்கப்பட வாய்ப்புள்ளது. கம்பெனியை  தரம்தார்த்தல் நடவடிக்கையும் எடுக்கபடும்.

Read More

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான 6% வரியை வாபஸ் பெற்றது சவூதி அரசாங்கம் !!

· · 840 Views

வெளிநாடுகளில் இருந்து சவுதி அரேபியாவில் பணி புரிபவர்களின் சம்பளத்தில் இருந்து 6% தொகையை சவுதி அரசுக்கு வழங்க வேண்டும்என்ற கட்டளையை பிறப்பித்த சவுதி நிதி துறை அமைச்சகம், கடந்த 8 ஆம் தேதி இந்த அறிவிப்பை வாபஸ் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Read More

கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் – ஜூன் 20 முதல் 23ஆம் திகதிவரை பெற்றுக் கொள்ளலாம்

· · 503 Views

கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை விநியோகிக்கப்படவுள்ளன. நாடு முழுவதுமுள்ள அலுவலகங்கள் மற்றும் மாவட்ட பயிற்சி நிலையங்களில் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலதிக தகவல்களை www.slbfe.lk இணைய முகவரியை அழுத்தி தெரிந்து கொள்ள முடியும்.

Read More