முஸ்லிம் பெண் ஊழியர் நஸ்ரினை எட்டி உதைக்கும் சக ஊழியர்..!! வீடியோக் காட்சியால் பரபரப்பு

· · 799 Views

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் ரமலான் நோன்பு வைத்திருந்த முஸ்லிம் பணியாளர் மீது சக ஊழியர் தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://youtu.be/RVwkaXSvfEY இந்தியா கர்நாடகாவின் ராய்ச்சூர் பகுதியின் சிந்தனுர் நகராட்சியில் வேலை செய்து வருபவர் நஸ்ரின். இவர் கடந்த சனிக்கிழமை அன்று வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்துள்ளார். நோன்பு நேரமாதலால் பணிக்கு தாமதாமக வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக ஊழிய சரணப்பா நஸ்ரினை காலால் எட்டி உதைத்துள்ளார். சிசிடிவியில் பதிவான இந்த வீடியோ தற்போது வெளியாகி … Continue Reading →

Read More

கட்டார் இலங்கைத் தூதரகம், அங்குள்ள 22 இலங்கை அமைப்புகளுக்கு அழைப்பு !! அவசர நிலைமைகளின் போது எடுக்ககூடிய நடவடிக்கை தொடர்பிலான கலந்துரையாடல்

· · 438 Views

கட்டார் நாட்டில் அவசர நிலை ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்டாரில் உள்ள இலங்கையர் அமைப்புகளுக்கு அந் நாட்டுக்கான இலங்கை தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.       எதிர்வரும் புதன் கிழமை இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் கட்டாரில் உள்ள 22 இலங்கையர் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கட்டாருக்கான இலங்கை தூதுவர் லியனகே, தெரிவித்துள்ளார்.           இதனுடன் உணவு அல்லது தொழில் தொடர்பில் இலங்கையர்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை … Continue Reading →

Read More

கட்டாரில் இலங்கையர்கள் எப்படி இருக்கிறார்கள்..? ஜனாதிபதி, அமைச்சர்களிடம் உடனடி அறிக்கை கோருகிறார்

· · 314 Views

கட்டாரில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார்.     கட்டாரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், அங்குள்ள இலங்கையர்களின் நிலை தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.           எதிர்வரும் 13ம் திகதி குறித்த அறிக்கையை அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.     வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல ஆகியோருக்கு … Continue Reading →

Read More

மாதர் மஜ்லிஸ் : ” முஸ்லிம் பெண்களும் சம்பாத்தியமும்…!!! முஸ்லிம் பெண்க‌ள் வேலைக்கு செல்ல‌லாமா, செல்ல‌க்கூடாதா?

· · 615 Views

முஸ்லிம் பெண்களும் சம்பாத்தியமும்    நாஸியா   இஸ்லாத்தை போலவும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்போலவும் அதிகமான அளவு விமர்சனத்துக்குள்ளான விஷயங்கள் எதுவுமே இல்லைன்னு நினைக்குறேன். முஸ்லிம்கள் எது செய்தாலும் அது விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகவே மீடியாக்கள் சித்தரிக்கின்றன என்பது என்னுடைய கருத்து. அதுவும் பெண்க‌ள் விஷ‌ய‌த்தில் பார‌ப‌ட்ச‌மாக‌வே ந‌ட‌க்குதுன்னு நாம கண் முன்ன பார்க்கிற விஷயம். ச‌ரி, விஷ‌ய‌த்துக்கு வ‌ருவோம். தாருல் உலூம் என்ற‌ இஸ்லாமிய‌ அமைப்பு, கொஞ்ச‌ நாள் முன்ன‌ ‘முஸ்லிம் பெண்க‌ள் … Continue Reading →

Read More

Kingdom’s crisis: கட்டுமானப்பணிகள் , வணிக வளாகங்களில் வெளிநாட்டவருக்கு வேலை வழங்குவதை படிப்படியாக குறைக்குமாறு சவூதி அரசாங்கம் உத்தரவு !!

· · 334 Views

சவுதி அரேபியாவில் கட்டுமானப்பணிகள் , வணிக வளாகங்கள் ஆகியவற்றில் பணிபுரிவதற்கு அதிகமான வெளிநாட்டினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, வெளிநாட்டினர்களின் வேலைவாய்ப்பு விகிதத்தை குறைக்கம் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. சவுதியின் பொதுத்துறையில் 70 ஆயிரம் வெளிநாட்டினர்கள் பணிபுரிவதாக கூறப்படுகிறது. அடுத்து வரவிருக்கும் 3 ஆண்டுகளில் இவர்களுக்கு பதிலாக, உள்நாட்டினர்களை பணியில் அமர்த்த சவுதி அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக வணிக வளாகங்களில் தன் நாட்டை சேர்ந்தவர்களையே பணியில் அமர்த்தவுள்ளது. வேலையில்லாமல் திண்டாடும் சவுதி மக்களுக்கு வேலை … Continue Reading →

Read More

துபாய், கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பு தொடர்பான இலவச ஆலோசனை மற்றும் விசிட் விசா சேவை

· · 731 Views

துபாய், கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பு தொடர்பான இலவச ஆலோசனை மற்றும் தகவல்களுடன் கூடிய விசிட் விசா சேவை !! We serve you better with 30 Days & 90 Days UAE Visiting/Tourist VISA’s with Abroad Career Counselling & Guidance’s !!! துபாய்க்கு மிகக்குறைந்த விலையில் 30 நாட்கள் & 90 நாட்கள் விசிட் விசா ! அமீரகத்தில் பணிபுரியும் அன்பு தமிழ் சொந்தங்களே உங்கள் தாய் … Continue Reading →

Read More

Latest : இத்தாலியில் பருவ கால வேலை வாய்ப்புக்கள் !! இலங்கையர்களுக்கு விவசாயம், ஹோட்டல் துறைகள் ஒதுக்கீடு – எவ்வாறு விண்ணப்பிப்பது ?

· · 1368 Views

2017 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்தாலியில் பல்வேறு துறைகளில் காணப்படுகின்ற 30 ஆயிரத்திற்கும் அதிகமான தொழில் வாய்ப்புகளில் 17 ஆயிரம் தற்காலிக தொழில் வாய்ப்புகள் வெளிநாட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை உட்பட பல நாடுகள் இந்த தொழிலுக்காக விணப்பிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக தொழிலுக்காக விண்ணப்பிப்பதற்கு மார்ச் மாதம் 28ஆம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இணையத்தளம் ஊடாக விண்ணப்பிப்பதற்கான … Continue Reading →

Read More

கனடா எம்பசிக்கு வாகன சாரதிகள் தேவை..!! O/L பாஸ் செய்திருக்க வேண்டும் !! விபரம் உள்ளே

· · 1034 Views

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகராலயம் சாரதிகள் பணிக்காக விண்ணப்பம் கோரியுள்ளது. விண்ணப்ப இறுதி திகதி ஏப்ரல் 24 திகதி பிற்பகல் 4 .30 மணி இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும், ஆங்கிலம் மற்றும் தமிழ் அல்லது சிங்களம் ஆகிய மொழிகளில் சரளமாக எழுத வாசிக்க தெரிந்திருத்தல் வேண்டும், மூன்று வருட அனுபவம் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில தகுதிகள் அவசியம் என கனடா உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Read More

Special news :ஒரு வருடம் வெளிநாட்டில் பணி புரிந்தால்: “350 C.C. மோட்டார்சைக்கிள், 55 அங்குல T.V., லேப்டாப், ஸ்மார்ட் போன்கள்,குளியலறை சாதனங்கள், படுக்கையறை சாதனங்கள் என பல்வேறு பொருட்களை “டெக்ஸ்” இன்றி கொண்டு வரலாம் !! அரசாங்கம் தீர்மானம்

· · 1223 Views

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாடு திரும்புபோது அவர்களுக்கான சுங்க வரிகளில் மேலும் சலுகைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் இலங்கை பணியாளர்கள் நாடு திரும்பும்போது 1500 அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை கொண்டுவருவதற்கு வரிச் சலுகை வழங்கப்பட்டது. இதற்குப் பதிலாக பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை கொண்டுவருவதற்கான வரியை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சுங்க திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார். இதற்கமைய ஒரு வருட காலம் வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு நாடு திரும்புபவர்கள் குளியலறை சாதனங்கள், படுக்கையறை சாதனங்கள், … Continue Reading →

Read More

சுவீடனில் நாளொன்றுக்கான வேலை நேரம் 6 மணித்தியாலமாக குறைப்பு !! இலங்கையிலும்அதே அடிப்படையை பின்பற்ற பிரதமர் நடவடிக்கை

· · 482 Views

நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவரும் தாம் பெற்றுக்கொள்ள வேண்டிய ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் தொடர்பிலான அறிவிப்பை பிரதமர் விரைவில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அடிப்படைச் சம்பளம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் மக்களுக்கு பிரதமர் அந்த அறிவிப்பை முன்வைப்பார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார். சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு … Continue Reading →

Read More

ஜனாதிபதியின் பேஸ் புக் அட்மினாக “தஹம் சிறிசேனா “நியமிப்பு – முன்னைய அட்மின்கள் ஒழுங்காக செயற்படவில்லையாம்

· · 271 Views

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சமூக வலைத்தள பிரிவு, அவரின் மகன் தஹாம் சிறிசேனவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவின் கீழ் உள்ள சமூக வலைத்தள பிரிவே இவ்வாறு தஹாம் சிறிசேனவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தொடர்பிலான தகவல்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரச்சாரம் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பில் ஜனாதிபதி அதன் ஊழியர்களை கடுமையாக சாடியுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டிள்ளது. அங்கு … Continue Reading →

Read More

அரசாங்க ஊழியர்களுக்கு 25ல் பாதி சம்பளமும் 5 திகதியில் பாதி சம்பளமும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

· · 963 Views

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் முறையில் மாற்றம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க, உள்ளூர் மற்றும் அரசாங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மாதாந்த சம்பளத்தை இரண்டு பிரிவாக வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரான செயலாளர் திலகரத்ன தெரிவித்துள்ளார். மாதாந்தம் 20ஆம் திகதி அல்லது 25 ஆம் திகதி சம்பளம் வழங்குவது சாதாரன முறையாகும். எனினும் இந்த முறையின் கீழ் ஆரம்ப சம்பளத்தை இந்த திகதியில் வழங்கிவிட்டு மாதத்தின் 5ஆம் … Continue Reading →

Read More

68,400/= ரூபாய் அடிப்படை சம்பளம் இருந்தால் மட்டுமே இலங்கையர்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி..!! அரசாங்கம் தீர்மானம்

· · 4024 Views

வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு குறைந்த பட்ச மாத சம்பளமாக 450 அமெரிக்க டொலர்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது வரையிலும் வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கைப் பணியாளர்களின் குறைந்த பட்ச அடிப்படை மாதாந்த சம்பளம் 350 அமெரிக்க டொலர்களாகவே காணப்பட்டுள்ளது. எனினும் அதனை 450 டொலர்களாக உயர்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன் படி இனி வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு 450 டொலர்களுக்கு அதிகமான மாதாந்த சம்பளம் கிடைக்கப்பெறுமாக இருந்தால் மட்டுமே அனுமதி … Continue Reading →

Read More

“பாவனையாளர் அதிகார சபைக்கு 62 பேரை நியமித்தார் அமைச்சர் றிஷாத்..!!புத்தளத்தில் எத்தனை பேருக்கு கிடைத்தது..?

· · 1212 Views

சுஐப் எம் காசிம் மக்களின் நன்மை கருதி பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகளை மேலும் வலுவூட்டுவதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் இவற்றின்; மூலம் முழுமையான பயன் கிடைக்குமெனவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள 62 பரிசோதகர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவம் இன்று காலை (2017.01.21) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வில் … Continue Reading →

Read More

Special news : தனியார் துறை ஊழியர்களுக்கு 5 நாட்கள் மட்டுமே வேலை..!! ஆனால் 9 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்

· · 601 Views

தனியார் துறையில் பணிபுரிவோரின் வேலை நாட்களை 5ஆக குறைப்பதற்கும் பணி புரியும் நேரத்தை 9 மணித்தியாலமாக மாற்றியமைப்பதற்கும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் சாந்தனி அமரதுங்க தெரிவித்துள்ளார். தேசிய தொழிலாளர் பேரவையில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தொழில் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சகல தரப்புகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More