முஸ்லிம் சமூகத்திற்குள் என்ன நடந்து வருகிறது?. தவ்ஹித் ஜமாத் மற்றும் தப்லிக் ஜமாத் ஆகிய இரண்டு அடிப்படைவாத குழுக்கள் முஸ்லிம் சமூகத்துக்குள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி அவர்களை பணயமாக வைத்துள்ளனர் – ஜாதிக ஹெல உறுமய கடும் குற்றச்சாட்டு

· · 199 Views

அடிப்படைவாத முஸ்லிம் குழுக்களின் மோதல்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் இரண்டு முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு அடிப்படைவாத குழு காணி ஒன்றில் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிக்க திட்டமிட்டிருந்த போது, அங்கு சென்ற மற்றுமொரு அடிப்படைவாத குழு பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தியுள்ளது. … Continue Reading →

Read More

காசு..துட்டு..மணீ மணீ : ஹஜ் சர்ச்சை தொடர்கிறது ; அமைச்சின் அறிக்கைகள் நிராகரிப்பு !! அப்பாவுக்கு சுப்ரீம் கோர்ட் மீண்டும் ஆப்பு

· · 255 Views

ஹஜ் கோட்டா பங்கீடு தொடர்பில் புத்த சாசன அமைச்சின் செயலாளர் உச்ச நீதிமன்றில் கையளித்த புதிய அட்டவணைகள் அடங்கிய அறிக்கையை அந்நீதிமன்றம் இன்று (01) நிராகரித்தது. அமைச்சர் பெளசி தலைமையிலான ஹஜ் குழுவுக்கு இம்முறை கிடைக்கப்பெற்ற 2240 கோட்டாக்களையும் 89 முகவர் நிலையங்களுக்கு பிரித்தளிப்பதில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பிலான வழக்கு இன்று உச்சநீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே மேற்படி புதிய அட்டவணைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் பெளசியினால் ஏலவே  கையளிக்கப்பட்டிருந்த திருத்தப்பட்ட  புதிய அட்டவணகளை உச்சநீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையிலேயே,இன்று மீண்டும் … Continue Reading →

Read More

சாய்ந்தமருது பல சேனாக்கள்: சாய்ந்தமருது SLTJ அலுவலகம் மீது தாக்குதல் !! கோஷ்டி மோதல் – பொலீசார் களத்தில்

· · 259 Views

  இன்று மாலை சாய்ந்தமருது கடற்கரை வீதியில் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அமைதியின்மை ஏற்பட்டது. குறித்த குழுக்களில் எவர் முன்பாக இருக்கின்ற திடலை பாவிப்பது என்ற விடையத்தில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் கல் வீச்சு சம்பவங்கள் இடம்பெற்றன. அத்துடன் குழுவினரால் இஸ்தாபிக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டிடங்களும் சேதமாக்கப்பட்டுள்ளது. உடனடியாக இஸ்தலத்துக்கு விரைந்த கல்முனை பொலிசாரும் பிரசைகள் குழுவினரும் குழுக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என எமது நிருபர் தெரிவித்தார். இது தொடர்பில் ஸ்ரீ … Continue Reading →

Read More

ஈராக்; கிளர்ச்சியாளர்களிடமிருந்து திக்ரித் நகரை கைப்பற்றும் முயற்சி தோல்வி !! ரஷ்யாவின் சுக்ஹோய் போர் ஜெட்கள் களத்தில்

· · 102 Views

இராக்கில் சுன்னி கிளர்ச்சியாளர்களிடமிருந்து திக்ரித் நகரை மீளக்கைப்பற்ற முயற்சிக்கும் அரச படையினர் பின்வாங்கியிருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. யுத்த டாங்கிகளையும் கவச வாகனங்களையும் வான்வழி ஒத்துழைப்புகளையும் கொண்டு முன்நகர்ந்த அரச படையினர், தமது முன்நகர்வு தோல்வியடைந்து சுமார் 25 கிலோமீட்டர் தெற்காக டிஜ்லா பின்வாங்கியுள்ளதாக தெரியவருகின்றது. ஐசிஸ் தலைமையிலான ஆயுததாரிகள் பிரதான வீதியின் நெடுகிலும் பெருமளவு வெடிபொருட்களை பொருத்தி வைத்துள்ளதால் அரச படையினர் டிக்ரித் நகரின் மத்திக்கு செல்ல முடியாமல் திணறுவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையே, இராக் … Continue Reading →

Read More

யதார்த்தம்: ஜெர்மனி, ஹொலண்டில் அதிகரிக்கும் முஸ்லிம்கள் !! பலமடங்கு அதிகரிப்பு

· · 72 Views

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட  இந்த ஆண்டுயில்  பன்மடங்காகப் பெருகியுள்ளது. அதே நேரத்தில் கிறித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. யூதர்களின் எண்ணிக்கையோ மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. ஜெர்மனியின் பெர்லின் மற்றும் பிராண்டன்போர்ஜ் மாநிலங்களின் புள்ளிவிவர மையத்தின் அறிக்கையில் இத்தகவல் காணப்படுகிறது. தேஜஸ் நாளிதழில் வெளியான இந்த அறிக்கையில்காணப்படுவதாவது: பெல்லினில் 1992இல் கத்தோலிக்க கிறித்தவர்களின் எண்ணிக்கை சிறிது அதிகரித்தது. 9.2 சதவீதம் முதல் 9.3 சதவீதம்வரைகத் தோலிக்கர்களன்எண்ணிக்கை அதிகரித்த வேளையில், புராட்டெஸ்டண்டு கிறித்தவர்களின் எண்ணிக்கை 17.5 … Continue Reading →

Read More

கோய் பாத் நஹி ஹேய் : இந்த வருடம் பாகிஸ்தானில் காதலர் தின கூத்துகளுக்குத் தடை – இஸ்லாத்தை அவமதிக்கும் செயல் என்கிறது அரசு

· · 295 Views

இந்த வருடம் பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 14ம் திகதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தானிலும் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு தடவையும் அங்கு காதலர் தின கொண்டாட்டம் நடக்கும்போது எதிர்ப்பு தெரிவித்து வன்முறை சம்பவங்கள் நடப்பது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. … Continue Reading →

Read More