halik

எனது தொழுகை நேரத்தை கெடுக்கும் எந்த நட்பும் எனக்கு தேவை இல்லை: ஹாலிக் (யுவன்சங்கர்) டுவீட்டரில் அறிவிப்பு

· · 486 Views

இசைஞானி இளையராஜாவின் மகனும், இசை அமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்தது லைவ்டே வாசர்கள் அனைவருக்கும் தெரியும். ஒரு இஸ்லாமிய பெண்ணை மனம் முடித்தார். குர்ஆன் வாசிப்பதில் தீவிரமாக இருக்கும் யுவன்சங்கர்ரஜா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணியாக இருந்தாலும், ஐந்து வேளை தொழுகையை கட்டாயம் நிறைவேற்றுவார். தொழுகை ஒரு இஸ்லாமியரின் கட்டாயக் கடமை என்பதில் உறுதியாக இருப்பவர் யுவன். சில சமயம், பாடல் கம்போஸிங், ரிக்கார்டிங்கில் பிஸியாக இருநுதாலும் தொழுகை நேரம் வந்ததும் உடனே எழுந்து … Continue Reading →

Read More
ccb

‘கிரடிட் கார்ட்” பயன்பாடு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது..? அடாத்தான வட்டியில் கொன்று விடுவார்கள்

· · 422 Views

கிரடிட் கார்டுகள் பயன்பாடு பற்றி இஸ்லாம் நவீனமயமாகி வரும் சமகால வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்களவில் பல வகையிலும் செல்வாக்குச் செலுத்தி வரும் கடன் அட்டைகள் (Credit Cards) பற்றிய முக்கியமான சில செய்திகளை இங்கு பரிமாறிக் கொள்வோம். அடிப்டையில் இந்தக்கடன் அட்டைகள் வட்டியை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். ‘குறிப்பிட்ட தவணையில் பணம் செலுத்தத் தவறினால் நான் அதற்காக வட்டி செலுத்துவேன் என்று கிரடிட் காட் பெறும் போது நாம் ஒப்பந்தம் செய்ய வேண்டியுள்ளதால் இது … Continue Reading →

Read More
alula

Iron men :”இரும்பு மனிதர்கள்” என்றழைக்கப்பட்ட “சமூது” கூட்டத்தினர் அழிந்த வரலாறு

· · 637 Views

இரும்பு மனிதர்கள்!     ஹவ்வா மைந்தன்      ‘ஆது’ கூட்டத்தினரின் அழிவுக்குப் பிறகு தோன்றியவர்கள்தான் ‘ஸமூத்’ கூட்டத்தினர். ஸமூது கூட்டத்தினரை ‘இரம்’ வம்சத்தினர் என்றும் ‘ஹிஜ்ர்’ வாசிகள் என்றும் அல்குர்ஆன் அழைக்கிறது. அதன் 15-வது அத்தியாயத்திற்கு ‘அல்ஹிஜ்ர்’ என பெயர் சூட்டப்பட்டு அவர்கள் நினைவு கூறப்படுகிறார்கள். மதீனாவிலிருந்து சுமார் 347 கி.மீ. தொலைவில் ‘தபூக்’ நகருக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது தான் ‘அல்உலா’ நகரம். அங்குதான் ஹிஜ்ர் பகுதி உள்ளது. இப்போது அதை ‘மதாயின் … Continue Reading →

Read More
casimiyyah

133 வருட பாரம்பரியத்தைக் கொண்ட காசீமிய்யாவில் 2% குறைவான புத்தளம் மாணவர்களே கல்வி கற்கிறார்கள்..!! Shocking report

· · 992 Views

பிள்ளைகள்  பாடசாலை வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்னர்  குர்-ஆனை ஓதத் தொடங்க வேண்டும் என்ற கவைலை  முஸ்லீம் பொற்றோருக்கு  ஆதி காலம் தொட்டே இயல்பாக இருந்து வருகிறது. எனவே குர் ஆன் மத்ரஸாக்களுக்கு சாதாரணமானவர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பும்போது கொஞ்ஞம் வசதி வாய்ப்பு உள்ளவர்கள்  ஆலிம்களை வீடுகளுக்கு வரவழைத்து பிரத்தியேக குர்ஆன் பாடங்களைத் தம் பிள்ளைகளுக்கு நடாத்துகிறார்கள். குர்-ஆன் ஓதுதல் என்பது பெற்றோருக்கு மாத்திரமல்ல சமுகத்திலே செல்வங்கள் அளுளப்பட்டோருக்கும் இயல்பாகவே இருந்து வருகிறது.   அதனால்தான் இந்த நாட்டில் ஜாமியா  … Continue Reading →

Read More
m18

Per kumplan Malayu Di Puttalam : புத்தளம் மலாய் சங்கத்தினர் கொண்டாட்டம்..!! மலாயர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் – ஆப்பாடுடு..மாம்மா காசி

· · 893 Views

( தர்ஷன் ) புத்தளம்  மலாய் சங்கத்தின் ஒன்றுகூடல் நிகழ்வொன்று புத்தளம் DC Pool இல் சங்கத்தின் தலைவர் ஐ. சபார் தலைமையில் டிசம்பர் 31ஆம் திகதி நடைபெற்றது. புத்தளம், தில்லையடி, மணல்குன்று உட்பட புத்தளம் பிரதேசத்திலுள்ள மலாய் சங்கத்தின் உறுப்பினர்கள் அவர்களின் குடும்பத்தார் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். கலை நிகழ்வுகள் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் இதன் நிகழவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலேசிய நாட்டின் தேசிய விளையாட்டான  Spektakro விளையாட்டுப் போட்டி இந்த … Continue Reading →

Read More
rani

விவாதம் :” இஸ்லாம் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்ட மார்க்கம் என பிரதமர் ஏன் சொன்னார்..? நாம் என்ன செய்ய வேண்டும்..?

· · 464 Views

பூமி உள்ளிட்ட முழுப் பிரபஞ்சத்தையும் அல்லாஹ்தஆலா படைத்தான். அதிலே மனிதன் வாழக் கூடிய இடமாக பூமியைப் படைத்தான். அந்தப் பூமியை நிர்வகிப்பதற்கான வழிகாட்டல்களை காலத்துக் காலம் தனது தூதர்களுக்கூடாக அல்லாஹ்தஆலா அனுப்பி வைத்தான். அந்தத் தூதர்கள் வரிசையில் இறுதியானவராக முஹம்மத் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்தஆலா தெரிவுசெய்தான். நபிகளார் அனுப்பப்படுவதற்கு 500 வருடங்களுக்கு முன்னர் இயேசு நாதர் என அழைக்கப்படுகின்ற ஈஸா (அலை) கடைசிக்கு முந்திய அல்லாஹ்வின் தூதராக உலகுக்கு அனுப்பப்பட்டார்கள். உலகத்தை வழிநடத்த அடுத்தடுத்து அனுப்பப்பட்ட … Continue Reading →

Read More
raasik

“உங்கள் பதில்கள் முரண்பாடானவை” ரிஸ்வி முப்தியுடன் மோதுகிறார் S.L.T.J. அப்துல் ராசீக்

· · 222 Views

சகோ. ரிஸ்வி முப்தி அவர்களுக்கு! வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்… பொது பல சேனா அமைப்பினால் புனித அல்குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கோரி  அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என்றும் பதிலளிப்பதற்கு தேவையான அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் தருவதற்கு தவ்ஹீத் ஜமாஅத் தயார் என்றும் இது தொடர்பில் ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் சகோ. ரிஸ்வி முப்தி, மற்றும் செயலாளர் சகோ. முபாரக் மதனி உள்ளிட்ட உலமா சபையின் தலைமை நிர்வாகத்தை … Continue Reading →

Read More
mahinda-dua

2017 ல் மகிந்தவுக்கு பரகத் இறங்க அவரது வீட்டில் விஷேட துவாப் பிரார்த்தனை..!!

· · 720 Views

சர்வதேச புத்தாண்டை முன்னிட்டு சர்வ மத அனுஷ்டானங்களில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆசி வேண்டி இன்று அவரது தங்கல்லை கால்டன் இல்லத்தில் விஷேட துஆ பிரார்தனை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஹம்பந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த  மொஹமட் அல் பாயிஸ் வஸீர் மவ்லானா நசீம் மவ்லானா ஆகிய மவ்ளவிமார்கள் கலந்துகொண்டுள்ளனர். இதன் போது தங்கல்லையில் புதிதாக கட்டப்படும் பள்ளிவாயல் தொடர்பில் விபரம் கேட்டறிந்துள்ள முன்னாள் ஜனாதிபதி அதற்கான உதவிகள் தேவைப்படுமாயின் உதவுமாறு முன்னாள்  அமைச்சர் பெசிலுக்கு … Continue Reading →

Read More
breast-feeding-4_wide

Health today : தாய்ப்பாலூட்டல் இஸ்லாமிய ஷரீஅத்தும் நவீன ஆய்வுகளும்..!!

· · 520 Views

தாய்ப்பாலூட்டல் இஸ்லாமிய ஷரீஅத்தும் நவீன ஆய்வுகளும்   எஸ்.எம்.எம் மஸாஹிர், நளீமி  ஒரு குழந்தை பிறந்ததும் அதற்குத் தாய்ப்பாலூட்டுவது தொடர்பாக அதன் தாய் கொண்டிருக்கும் கருத்து மிகவும் செல்வாக்கு மிக்கதானதாகும். அக்கருத்தின் அடிப்படையில்தான் அப் பிள்ளையின் உடல், உள, அறிவு வளர்ச்சியும் சிலபோது அதன் முழு வாழ்வும் தங்கியுள்ளது. இது தொடர்பாக முஸ்லிம்கள் கொண்டிருக்க வேண்டிய சரியான கருத்தை இஸ்லாமிய ஷரீஅத்தினதும் நவீன அறிவியல் ஆய்வுகளினதும் நிழலில் இக்கட்டுரை ஆய்வு செய்கின்றது. ஒரு குழந்தைக்கு அதன் தாய்தான் … Continue Reading →

Read More
g2

“உம்ரா செய்யப்போய் 26 லட்சம் நகையுடன் கட்டுநாயக்காவில் ஜோடி கைது..!!

· · 1678 Views

(அஷ்ரப் ஏ சமத்) உம்ரா கடமைக்காக மக்கா நகா் சென்று நேற்று (22)  ஜித்தாவிலிருந்து சவுதி ஏயா விமானம் ஊடக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கொழும்பைச் சோ்ந்த கனவன் மனைவி இருவரே  2.6 மில்லியன் ருபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுக்களுடன் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனா். இவா்கள்   தமது பொதிக்குள் சூழ்ச்சியமான முறையில் தங்க நகைகளை மறைத்து கொண்டு வந்ததையடுத்து சுங்க திணைக்கள அதிகாரிகளினால் பரிசோதனை செய்து மறைத்து வைத்துக் … Continue Reading →

Read More
yuvanthirdwedding

“அப்பா இளையராஜாவை விட அல்லாஹ்வே முக்கியம்..!! இசை அமைப்பாளர் ஹாலிக் (யுவன்) கண்ணீர்ப் பேட்டி

· · 39983 Views

எனக்குள் நிறைய தேடல்கள் இருந்தது. கடவுள் எப்படி இருப்பார்.எந்த உருவத்தில் இருப்பார்.என்றெல்லாம் அடிக்கடி யோசிப்பேன்..! அந்தத் தேடல் என் அம்மாவின் மரணத்தின்போது வேறுவிதமாக எனக்கு உணர்த்தியது. ஒரு நாள் நான் மும்பையிலிருந்து சென்னை திரும்பியபோது வீட்டில் என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் அதிகமாக இருமத் தொடங்கினார். நானும், என் தங்கையும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். நான்தான் காரை ஓட்டினேன். மருத்துமனையை அடைந்தபோது என் பக்கத்தில் இருந்த அம்மாவின் கையைப் பிடித்தபடியே இருந்த நிலையில், என் அம்மா … Continue Reading →

Read More
the_time_traveler_by_xetobyte

Cover story : காலம் நம் எதிரியா? நபிகள் (ஸல்) என்ன கூறியிருக்கிறார்கள்..? ஹதீஸ் என்ன கூறுகிறது..?

· · 249 Views

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ் கூறியதாக அறிவிக்கிறார்கள்: ‘ஆதமுடைய மகன் காலத்தைத் திட்டுகிறான். நானே காலமாக இருக்கிறேன். என்னுடைய கைகளில் இரவும் பகலும் உள்ளது’. (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி) முஸ்லிம்கள் மிக அவசியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இந்த ஹதீஸில் அடங்கியுள்ளது. முஸ்லிம்களின் வாழ்க்கைத் தனித்தன்மை மிக்கதாக இவ்வுலகில் திகழ வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது. அதற்கான அடையாளங்களை எல்லாம் குர்ஆன் – சுன்னாவில் விரிவாக வகுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் மதிப்பீடு என்பது … Continue Reading →

Read More
sultan-of-kelantan-muhammad-v-will-be-the-15th-yang-di-pertuan-agong-picture-by-daum-media-500x420

மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் முகமது முடி சூடினார்..!! ரப்பர் ஸ்டாம்ப் அரசர்

· · 395 Views

மலேசியாவின் புதிய அரசராக சுல்தான் முகமது (47) அரியணை ஏறியுள்ளார். தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அரண்மனையில் அவருக்கு இராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முடி சூட்டும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர், பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்னும் முறையில் அளிக்கப்பட்ட இராணுவ அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றார். தற்போதைய மலேசிய அரச வம்சம் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து கோலோச்சி வருகிறது. ஆயினும் நவீன காலத்தில் அதன் செயல் முறைகளில் சில மாற்றங்கள் வந்துள்ளன. எனினும், மன்னரே மலேசிய … Continue Reading →

Read More
fp

“தௌஹீத் ஜமாஅத் என்று சிறு தொகை­யி­னரே இங்கு உள்­ளனர்.!! அவர்கள் தவறான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர் !! ஜம்மியத்துல் உலமா ஊடக செயலர் குற்றச்சாட்டு

· · 415 Views

ராவய சிங்­கள மொழி பத்திரிகை, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா ஊடகச் செய­லாளர் மௌலவி பாஸில் பாரூக்­குடன் மேற்­கொண்ட நேர்­கா­ணலின் தமிழ் மொழி பெயர்ப்பு இங்கு தரப்­ப­டு­கி­றது. சிங்­க­ளத்தில்: தரிந்து உடு­வ­ர­கெ­தர தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார் கேள்வி: ஜம் இய்­யத்துல் உலமா அமைப்பு என்றால் என்ன? இலங்­கை­யி­லுள்ள முஸ்லிம் அறி­ஞர்­களின் அமைப்பே ஜம் இய்­யத்துல் உலமா என்று அழைக்­கப்­ப­டு­கி­றது. இலங்­கையின் சுதந்­தி­ரத்­திற்கு முன்­பி­ருந்தே இந்த இயக்கம் இங்கு செயற்­பட்டு வரு­கி­றது. இலங்கையில் 99.9 வீத­மான முஸ்லிம் மக்கள் ஜம்­இய்­யத்துல் … Continue Reading →

Read More
nama

புத்தளம் மீலாதுன் நபி விழா :கட்டுரை, கவிதை, இஸ்லாமிய பொது அறிவுப் போட்டி -வயது கட்டுப்பாடில்லை – விபரம் உள்ளே

· · 214 Views

இஸ்லாமிய எழுத்தறிவை மேம்படுத்தும் நோக்கில் புத்தளம் மாவட்ட சமூக நலப் பேரவையினால் மீலாதுன் நபி போட்டி நிகழச்சியொன்று  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டுரை,  கவிதை, இஸ்லாமிய பொது அறிவுப் போட்டி  ஆகிய போட்டிகளில் வயது கட்டுப்பாடின்றி ஆண்,  பெண் இருபாலாரும் பங்கு பற்ற முடியும். போட்டி முடிவுத் திகதி   31.12.2016. போட்டிக்கான விண்ணப்பங்களை புத்தளம் Paper House இல் பெற்றுக் கொள்ளலாம் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு பரிசில்களும் சான்றிதழ்களும்  வழங்கப்படும் என்று போட்டிக் குழு  செயலாளர் … Continue Reading →

Read More