மகுடம் : உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த இடங்களில் கொழும்பும் ஒன்றாகியது !! அதிக மாற்றம் கண்டத்தில் 10 வது இடம்

· · 146 Views

உலகில் வாழ்வதற்கான மிகவும் உகந்த நகரங்களில் கொழும்பு நகருக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. உலக நகரங்களை தரப்படுத்தும் வரிசையில் கொழும்பு நகருக்கு 49வது இடம் கிடைத்துள்ளது. அத்துடன் கடந்த காலத்தில் அதிக மாற்றங்களுக்கு உள்ளான நகரங்களில் கொழும்புக்கு 10வது இடம் கிடைத்துள்ளது. கொழும்பு நகரம் தவிர, தெற்காசிய நாடுகளின் நகரங்களில் நேபாளத்தின் காத்மண்டு மாத்திரமே தரப்படுத்தலில் இடம்பிடித்துள்ளது. ஸ்திரத்தன்மை, உட்கட்டமைப்பு வசதி, கல்வி, சுகாதார சேவை உள்ளிட்ட விடயங்கள் இந்த தரப்படுத்தலின் போது கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், … Continue Reading →

Read More

வல்லரசாகும் நுரைச்சோலை !! அனல் மின் நிலையத்தின் 3 ம் கட்ட பணிகளை ஆரம்பித்து வைக்க வருகிறார் சீன ஜனாதிபதி

· · 161 Views

இன்னும் இரண்டு வாரங்களில் இலங்கை அரசாங்கத்துக்கும் சீன அரசாங்கத்துக்கும் இடையில் நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்தின் தொழில்நுட்ப நடவடிக்கை தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சீன ஜனாதிபதி எதிர்வரும் 16ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இதன்போது சீன ஜனாதிபதி நுரைச்சோலையின் மின்சார நிலையத்தின் மூன்றாம் கட்ட மின்சார கட்டமைப்பு திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். … Continue Reading →

Read More

சிட்டுக் குருவிகளுக்கென்ன கட்டுப்பாடு: அந்துரியம் வகுப்பின் அசத்தல் கண்காட்சி !! சின்ன சாஹிரா Special ( படங்கள் )

· · 214 Views

சிறிய  சாஹிராவுக்குள் நுழைந்தாலே ஒரு சந்தோசம்தான். உடனடியாக நமது பால்ய காலத்து நினைவுகள்  நிலலாடும். ஞாபகம் வருதே என்று பாடத்தூண்டும். அந்த ஒத்தை பனை மரம், அரைவாசி மூடிப்போய் விட்ட பெரிய வண்ணங்குளம்,..இதெல்லாம் தன்னகத்தே கொண்ட சின்ன சாகிராவை அதன் பழைய மாணவர்களால் எப்படி  மறக்க முடியும்..? ஆதர்ஷமான ஆசிரியை – அற்புதமான வகுப்பறைக் கண்காட்சி – பெற்றோரும், முழுப் பாடசாலையும், கல்வித் திணைக்களமும் அது பற்றித்தான் பேசியது. அசத்தி இருந்தார்  ஆசிரியை  சபீலா ராஸிக். புத்தளம் … Continue Reading →

Read More

ஜனாதிபதி என்பதால் அவருக்கு நோய்கள் வராதா..? கெஹலிய !! அவர் மருந்து எடுப்பது பற்றி கூறமுடியாது

· · 168 Views

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிகிச்சை பெறுவதற்காகவே அமெரிக்கா சென்றுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கருத்து வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதா?  அவர் மருந்துகளை எடுக்க முடியாதா? சுகவீனம் ஏற்பட்டால் மருந்தெடுப்பதையும் ஊடகங்களுக்கு  சொல்ல வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதியும் சாதாரண மனிதர்தான். அவருக்கு காய்ச்சல், தடிமன் ஏற்படாதா? சுகவீனம் என்பது ஜனாதிபதி என்றில்லை. எல்லோருக்கும் ஏற்படும் எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு … Continue Reading →

Read More

தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்..மீண்டும் : அல்பாவுக்காக K.A.B கட்டார் பறந்தார் !! அவரின் கனவு நிறைவேறுமா..?

· · 155 Views

”சூழ்ச்சியின் முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியில் தங்குதல் தீது” இது வள்ளுவன் பாயிஸுக்குத்தான் சொன்னான் போலும்.   துணிந்து இறங்கிய கருமம் தாழ்சியில் போய் முடிந்து விடாதிருக்கத்தான் இன்றிரவு KAB கட்டாருக்குப் பயணமானார். நகர மத்தியில் வர்த்தக மையம் ஒன்றை அமைக்க நினைத்துத் தொடங்கிய திட்டத்தின் முதற் படியான ”அல்பா” சந்தைத் தொகுதியின் விற்பனை அறைகளை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்க கேள்விகளை வரவழைத்தபோது  போட்டி  போட்டுக்கொண்டு  முன்வந்தவர்கள் எல்லோரும்  இரண்டாம் கட்ட கட்டணம் செலுத்துமாறு கேட்கப்பட்டபோது  பின்வாங்கிவிட்டார்கள். இந்த பின்வாங்கலுக்குப் … Continue Reading →

Read More

ஜனாதிபதியின் “பேட்டா” நாமலுக்கும் , தம்பி “கோட்டா”வுக்கும் முறுகல் !! மூடப்பட்டது காலி ஹொஸ்பிடல்

· · 173 Views

  குப்பைபகள் அகற்றப்படாமையினால் காலி கரகாப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் திங்கட்கிழமை முதல் காலவரையறையின்றி முடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் செல்ரன் பெரேரா தெரிவித்தார். போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயர்கள் மற்றும் அவர்களை பார்வையிடச் செல்லும் உறவினர்கள் போடும் குப்பைபகள்  வைத்தியசாலையின் வெளி வளாகத்திலும் வைத்தியசாலையை சுற்றியுள்ள வீதிகளிலும் காணப்படுவதால் உள்ளக நோயாளர்கள், வைததியர்கள், தாதிமார் மற்றும் ஊழியர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் இதனால் வைத்தியசாலையை மூடியதாகவும் பணிப்பாளர் கூறினார். காலி மாநகர சபை மேயருக்கும் … Continue Reading →

Read More

புத்தளம் விஞ்ஞானப் பாடசாலையை தொடர்ந்து முடக்கப் பார்க்கும் டியூசன் மாபியாக்கள் !! இன்று அங்கு பெரும் குழப்படி

· · 278 Views

விஞ்ஞானப் பாடசாலையின் முன்னேற்றத்துக்கு தொடர்ந்தும் “மாபியா” அச்சுறுத்தல் இருந்தே வருகிறது.  விஞ்ஞானக் கல்வியைத் தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்துக் கொண்டிருக்கவே இந்த மாபியாக்கள்  பகீரதப் பிரயத்தனங்களைச் செய்து கொண்டு வருகிறார்கள். 2014.08.26 ஆந் தேதி  ஜனாதிபதி விஞ்ஞானப் பாடசாலையின்  புதிய கல்வி ஆண்டுக்கான பெற்றோர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட சலவலப்பு இதைப் பெரிதும் உறுதிபடுத்துவதாகத்தான் நாம் காண்கிறோம். இந்தக் கூட்டத்துக்கு பெற்றோர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் வரவை பதியும் கையொப்பங்கள் பெறும்  நிகழ்வு நடந்து … Continue Reading →

Read More

டக்லஸ் vs ரிசாத் லடாய் : யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர் உப்பு சப்பு இல்லாத பதவிக்கு மாற்றம் !! கவர்னர் in Action

· · 94 Views

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் அதிபர் எம். முபாரக், ஆளுநர் ஜி. ஏ சந்திரசிறியின் தலையீட்டினால் யாழ் வலயக்கல்வி அலுவலகத்திற்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். குறித்த பாடசாலையில் அண்மைக் காலங்களாக கல்வி நிலை மோசமடைந்து வருகின்றதாக கூறி அதிபரை இடமாற்றம் செய்யப் போவதாக கூட்டம் ஒன்றில் கூறியிருந்தார். பின்னர் அவர் கூறிய படியே உடனடியாக அவர் யாழ் வலயக் கல்வி வலயத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். கல்வி வலயத்தில் இவ் அதிபருக்கான பணிகள் ஒதுக்கப்படாத நிலையில் அங்கு அவர் பணிகள் இன்றி … Continue Reading →

Read More

புத்தளம் தள வைத்தியசாலை: ரத்தப்பரிசோதனை, எக்ஸ் ரே, பிசியோதெரபி, பாமசி சேவையாளர்கள் வேலை நிறுத்தம் !!!

· · 398 Views

ரத்தப் பரிசோதனை, எக்ஸ் ரே, பிசியோதெரபி, பாமசி சேவையாளர்கள்  ஆகிய அரசாங்க வைத்தியசாலை  நிபுணர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக புத்தளம் வைத்தியாசலாயின் அதிகாரி ஒருவர் புத்தளம் டுடேக்கு தெரிவித்தார். என்றாலும் அவசர சிகிச்சைகளுக்கான  இந்த சேவைகளை  மேற்படி பரா மெடிக்கல்ஸ் அதிகாரிகள் வழங்குவார்கள் என்றும் அவர் கூறினார். இதுப் போன்ற வேலை நிறுத்தங்களின் போது  சேவைகள் பாதிக்கபடுவது தவிர்க்க முடியாதது என்றும், இந்த வைத்திய துணை சேவையாளர்கள் தமது  வேலை நிறுத்தத்தை கைவிடும் … Continue Reading →

Read More

ஆகவே உங்கள் வாக்குகளை: முப்பது மாதங்களில் 3 தேர்தல்கள் !! ஜனாதிபதி, பாராளுமன்றம், நகர சபை

· · 142 Views

எதிர்வரும் 30 மாதங்களில் நாட்டில் மூன்று தேசிய ரீதியான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ள அதிகாரிகள் பற்றிய தகவல்களை தேர்தல் ஆணையாளருக்கு வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அரச நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார். அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர், மாகாணசபை பிரதான செயலாளர்கள் மற்றும் அனைத்து திணைக்களத் தலைவர்களுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள மாகாணசபை, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடாத்துவதற்காக தேர்தல் ஆணையாளர் மஹிந்த … Continue Reading →

Read More

கொழும்பு கொக் : பாலியல் தொழிலை சட்டமாக்குமாறு அழுத்தம் !! அமைச்சர் கரலியத்த

· · 135 Views

பாலியல் தொழிலை சட்டமாக்குமாறு வெளிநாடுகளின் நிதியில் இயங்கும் சர்வதேச அமைப்புகள் அழுத்தங்களை கொடுத்து வருவதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார். குருணாகல் மாவட்டம் தம்பதெனி, நாராம்பல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பெண்கள் பற்றி பேசும் போது சிறிய பிரச்சினை ஒன்று உள்ளது. வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைக்கும் சர்வதேச தொண்டர் அமைப்புகளில் பணியாற்றும் சிறிய தரப்பு பெண்கள் … Continue Reading →

Read More

பிரார்த்திப்போம் !! ஜனாதிபதி நலமாக இருக்கிறார் !! 28 ம் திகதி திரும்பி வருகிறார் – சில குளுசைகள் ஒத்துக் கொள்ளவில்லை

· · 121 Views

மருத்துவ சிகிச்சைக்காக கடந்த சனிக்கிழமை திடீரென அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 28 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாக ஜனாதிபதி செயலக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளுக்கு மேலதிகமாக ஜனாதிபதியின் தனிப்பட்ட மருத்துவர் எலியந்த வைட் வழங்கிய மருந்துகள் காரணமாக ஏற்பட்ட உடல் நல குறைவுக்கு குறித்து பரிசோதனை செய்வதற்காக ஜனாதிபதி அமெரிக்கா சென்றதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டன. எதிர்வரும் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் … Continue Reading →

Read More

5 லட்சம் ரூபாய் !! பேய் ஓணான் ஒன்றின் விலை – இரத்தினபுரியில் ஒருவர் கைது !!

· · 228 Views

அரிய விலங்கினமாகவுள்ள சிவப்புக் கண்ணையுடைய பச்சோந்தியொன்றை விற்பனை செய்ய முயற்சித்த ஒருவர் மொரவக்க பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மொரவக்க பஸ் தரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையொன்றின் போது இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சந்தேக நபர் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவக்க பொலிஸார் மேற்கொண்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்தது. மேற்படி பச்சோந்தியின் விலை சுமார் … Continue Reading →

Read More

உங்கள் அப்பா இருந்தால் விடுவாரா..? ஹரீனுடனான தொடர்புகளை விடுங்கள் !! ஆளும் கட்சி போஸ் ஹிறுணிகாவுக்கு எச்சரிக்கை

· · 98 Views

ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் ஹரின் பெர்னாண்டோவுடனான உறவுகளை நிறுத்திக் கொள்ளுமாறு, மேல்மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆளும் கட்சியில் அதி உயர் பதவியை வகிக்கும் ஒருவரே இவ்வாறு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஹரின் பெர்னாண்டோ விவாகமானவர், இதற்கு முன்னர் வேறும் ஒருவரின் மனைவியுடனும் தொடர்புகளைப் பேணியிருந்தார்” என ஹிருனிகாவிடம் அவர் தெரிவித்துள்ளார். ஹரின் பெர்னாண்டோ உங்களுக்கு … Continue Reading →

Read More

நம்பிக்கை இல்லை: போது மக்களிடம் அடி வாங்கும் பொலீசார் !! 24 மணித்தியாலங்களில் 5 பேருக்கு அடி

· · 152 Views

கடந்த 24 மணிநேரத்திற்குள் மட்டும் பொதுமக்களின் தாக்குதலில் 5 பொலிசார் காயமடைந்துள்ளதுடன், குடிபோதை காரணமாக நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் கடந்த சில நாட்களாகவே பொலிசாருக்கு கெட்ட காலம் ஆரம்பித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் குருநாகல் பிரதேசத்தில் ராணுவத்தில் இருந்து தப்பி வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்ட பொலிஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து வரிசையாக பொலிசார் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அண்மையில் பிரதி அமைச்சர் ஒருவரிடம் தண்டப்பணம் அறவிட்ட பொலிஸ் … Continue Reading →

Read More