பொதுபல சேனா உங்களை தாக்க வந்தால் அவர்களை நாய்க் கூண்டில் அடைப்பேன்,,!! சந்திரிகா அதிரடி

· · 130 Views

உங்களைத் தாக்க பொதுபல சேனாவோ, வேறு பலு சேனாக்களோ முன்வராது. அப்படி வந்தால் நாம் அவர்களை பிடித்து நாய் கூண்டில் அடைப்போம்  என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்ரடாநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார். திஹாரி ஊர்மனை சந்தியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்து உரையாற்றியுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாம் தனியாக இந்த அரசாங்கத்தை உருவாக்கவில்லை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஒன்றிணைந்து இந்த புதிய … Continue Reading →

Read More

மகிந்த பாய்…பட்ஜெட்டை பார்த்தீங்களா…? மகிந்தவுக்கு ஒரு முதியவரின் கடிதம் !!

· · 114 Views

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியைப் பொறுப்பேற்று 21 நாட்களில் இடைக்கால வரவு செல வுத் திட்டம் நேற்று 29 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப் பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்டத்தை படித்த முதிய வர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வுக்கு கடிதம் ஒன்றை எழுதியதாக ஒரு கற்பனை.அந்தக் கடிதம் வருமாறு… மரியாதைக்குரிய மகிந்த ராஜபக்சவுக்கு அன்பு வணக்கம். முன்னாள் ஜனாதிபதி என்று தங்களை விளித்துக் கூறும் அளவில் நிலைமை உருவாகிற்று. முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் … Continue Reading →

Read More

Breaking news : 98 வீதமான முஸ்லிம்கள் மைத்திரிக்கு வாக்களித்தனர்..!! சந்திரிக்கா பாராட்டு

· · 95 Views

இந்த நாட்டின் முஸ்லிம் பிரதேசங்களில் 98 சத வீத வாக்குகள் மைத்திரி ஆட்சிக்கு கிடைத்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்ரடாநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார். இன்று திஹாரி ஊர்மனை சந்தியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்: இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பாரிய பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. வாழ்வதற்கு கூட முடியாத நிலைமைகள் கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதே போன்று எமது சிங்கள மக்களுக்கும் … Continue Reading →

Read More

சீனாவின் திட்டங்கள் தொடருமா..? அரசாங்கம் பல்வேறு கோணங்களில் ஆய்வு..!! ஜிங் வந்தார்..மகிந்த சிங்க் (Sink) ஆனார்

· · 235 Views

சீன ஜனாதிபதியான ஜி ஜின் பிங் கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது, அது நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் பயணம் என்று அப்போதைய அரசாங்கத்தினால் புகழப்பட்டது. அவரது பயணம் நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் வாய்ப்புகளை அள்ளித்தரப் போகிறது என்ற தொனியில் தான் அவ்வாறு கூறப்பட்டது. ஆனால், சீன ஜனாதிபதியின் அந்தப் பயணம், இலங்கையின் அரசியல் வரலாற்றையே மாற்றியமைத்து விட்டது என்பதே உண்மை. சீன ஜனாதிபதியின் பயணத்தை அண்டி கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சென்ற சீன … Continue Reading →

Read More

அமெரிக்கா மாப்ளே : நாடு திரும்புகிறார் பெசில்..!! ஐ.தே.க. வில் போட்டியிடப் போகிராராம் – நடக்கலாம் !

· · 161 Views

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற பசில் ராஜபக்ச இலங்கை திரும்பவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன் அவர் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் எந்த கட்சியில் போட்டியிடுவது என்பது குறித்து அவர் இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படாது போனால், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிட போவதாகவும் முன்னர் தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போது மேற்கொண்ட விடயங்களை எவரும் மறக்கவில்லை எனவும் பசில் … Continue Reading →

Read More

மீண்டு ( ம் ) வருகிறார் ராஜபக்ஸ..!! லெட்டர் ஹெட் கட்சிகளோடு இணைந்து போட்டி

· · 304 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஷ புதிய அரசியல் கட்சியொன்றின் ஊடாக தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்றின் கீழ் சில அரசியல் கட்சிகள் போட்டியிடத் தீர்மானித்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வரும் சில கட்சிகளின் தலைவர்கள் இந்த திட்டத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். தினேஸ் குணவர்தன, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ வித்தாரண, டியூ.குணசேகர ஆகிய கட்சித் தலைவர்களும், ஸ்ரீலங்கா … Continue Reading →

Read More

நாமலின் நடமாடும் மர்ம பங்களா கண்டுபிடிப்பு..!! Micro பஸ்சுக்கு மாதம் 18 லட்சம்

· · 406 Views

இலங்கையில் நடத்தப்பட்ட பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள இரண்டு அதிநவீன சொகுசு பஸ் வண்டிகள் தனிப்பிட்ட தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டமை அம்பலத்திற்கு வந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களாக நாமல் ராஜபக்ஷ மற்றும் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் தமது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த அதி நவீன சொகுசு பஸ் வண்டிகள் இரண்டு நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன. வெளிவிவகார அமைச்சின் போக்குவரத்துப் பிரிவின் கீழ் இந்த சொகுசு பஸ் வண்டிகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டன. இருந்த போதும் குறித்த பஸ் வண்டிகள் அமைச்சில் நிறுத்த வைக்கப்பட்டிருக்கவில்லை என … Continue Reading →

Read More

புத்தளம் வரலாற்றின் மாபெரும் கொள்ளை: நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 330 கோடி ஏப்பம் !!

· · 168 Views

  நுரைச்சோலை அனல் மின் நிலைய நிர்மாணப் பணிகளின் போது காணப்பட்ட பிரதி அமைச்சர் ஒருவரும் அரசின் பிரபல உறுப்பினர் ஒருவரும் 3302 மில்லியன் ரூபாவை சுரண்டியுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் எனும் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க இன்றைய சிங்கள ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்

Read More

மகிந்தவை மன்னியுங்கள்..!! சந்திரிக்காவிடம் S.L.F.P. கட்சியினர் நேரில் வேண்டுகோள்

· · 204 Views

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செய்த சகல இடர்பாடுகளையும் மன்னித்து அவருடன் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றி பெறச் செய்ய முன்னுக்கு வருமாறு அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் நேற்றும், நேற்று முன்தினமும் சந்திரிக்காவை சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். இதன் போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த, நாட்டுக்கும், கட்சிக்கும், தனக்கும் எதிராக கடந்த 9 வருடங்களாக செய்த … Continue Reading →

Read More

அம்மாடியோவ் :பழைய ஜனாதிபதியின் செலவு 10,494 கோடி புதியவருக்கு 256 கோடி மட்டுமே

· · 114 Views

        கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 47% சம்பள அதிகரிப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக அவர் அறிவித்தார். இதேவேளை, தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்களை உயர்த்துமாறு தனியார்துறை நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தைப் போன்று இந்த அரசாங்கம் தனியார் துறை முயற்சியான்மையாளர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கப் போவதில்லை எனவும் அந்த நலன்களை ஊழியர்களுக்கு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி அலுவலகத்தின் கடந்த கால செலவுகள் 2009ம் ஆண்டு 634 … Continue Reading →

Read More

மகிந்தவின் வீட்டுக்குள்ளேயே மைத்திரி என்ற ஜனாதிபதியை வளர்த்த ” ரோ “..!! – ஒரே ஒரு அதிகாரியை வைத்து சாதித்தது இந்தியா

· · 182 Views

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து இரண்டு வாரங்களாகியுள்ள  நிலையில், இன்னமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நம்பமுடியாததொரு விடயமாக பேசப்படுகிறது. சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் இதை ஓர் ஆச்சரியமான விடயமாக, அபூர்வமான நிகழ்வாக சித்திரிக்கப்படுகிறது. அந்தளவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  இலங்கையில் அசைக்கமுடியாத பலத்துடன் இருந்துவந்தார். அவரது தோல்வியை எவராலும் நம்பமுடியாத நிலை இன்னும் தொடர்கிறது. ஏன், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட, இது நம்பமுடியாத அதிசயமாக நிச்சயம் இருந்திருக்கும். … Continue Reading →

Read More

மைத்திரிக்கு எதிராக மகிந்த ” பைல் ” போட்டார்..ஆனால் இலங்காகோன் வீசி விட்டார்

· · 162 Views

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் இலங்கையை விட்டு தப்பியோடிய, பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய மைத்திரிபாலவை கைதுசெய்ய அனைத்து ஆவணங்களையும் தயார் படுத்தி வைத்திருந்துள்ளார் என்று அறியப்படுகிறது. மகிந்த ராஜபக்ஷ வென்றுவிட்டார் என்ற செய்தி கிடைத்ததும், உடனடியாக மைத்திரியை கைதுசெய்ய மகிந்த போட்ட திட்டங்களில் இதுவும் ஒன்று. இது தொடர்பாக மேலும் அறியப்படுவது, நாட்டைவிட்டு தப்பிச் சென்ற முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய சிலவேளைகளில் ம ஹிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்றிருந்தால் மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய … Continue Reading →

Read More

நினைத்ததை முடிப்பவள்; இன்று பதவிப்பிரமாணம் செய்யும் சிராணி!! நாளை ராஜினாமா..!!

· · 152 Views

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க சற்றுமுன்னர் உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வருகைதந்தார். அதேவேளை இன்றைய தினம் அவர் மீண்டும் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரச வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. அதேவேளை இன்று பதவியேற்கும் அவர் நாளையதினம் தனது பதவியை உத்தியோகபூர்வமாக இராஜனாமா செய்யவுள்ளதாகவும் தெரியவருகிறது. அதன் பின்னர் சிரேஷ்ட நீதிபதி கே.சிறீபவன் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

Read More

10 கட்டளைகள் : மகிந்தவை வீழ்த்திய முக்கியமான 10 ஏவுகணைகள்..!! என்னென்ன..?

· · 108 Views

– நஜீப் பின் கபூர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேல்வியடைவதற்குக் காரணமாக இருந்த விடயங்களை மூன்ற தலைப்புக்களில் நாம் இங்கு வரிசைப்படுத்தி இருக்கின்றோம். எமது இந்த மதிப்பீடு தொடர்பாகவும் இந்த வரிசைப்படுத்தல் ஒழுங்கு மீதும் முறன்பாடுகள் சிலருக்கு ஏற்படவும், இல்லை இந்தப் பட்டியலில் இந்த விடயங்களும் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் இருக்கலாம். இது எமது பார்வை அவ்வளவுதான். 01. மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகாரப் போக்கு 02. ராஜபக்ஷக்களின் குடும்ப ஆதிக்கம் 03. தூய்மையற்ற நிருவாக முறையும் … Continue Reading →

Read More

EX president firing : குற்றச்சாட்டுக்கள் அருவருக்கத்தக்கவை..!! வாய்மையே வெல்லுமாம் – மகிந்த கோபத்தின் உச்சியில்

· · 139 Views

தமக்கு எதிராக இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பரப்பப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வாய்மை என்றாவது ஒரு நாள் வெல்லும் என தாம் நம்புவதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாம் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக கடந்த சில தினங்களாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி தமது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். ஜனவரி 9ஆம் திகதி இராணுவ சதி மூலம் ஆட்சியில் நீடிப்பதற்கு முயற்சித்ததாக தம்மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது … Continue Reading →

Read More