Saeqeh-2 : சொந்தமாக சூப்பர் சோனிக் யுத்த விமானம் தயாரித்து ஈரான் சாதனை !!

· · 116 Views

கடந்த வாரம்  ஈரான்  இஸ்லாமியக்  குடியரசானது  அதன் முழுதும் உள்ளூர் தொழினுட்பத்தை  வைத்து தயாரிக்கப்ப்ட்ட சொந்தத் தயாரிப்பான   Saeqeh-2. எனப்படும்  சுப்பர் சோனிக் சண்டை விமானத்தை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளது.  இந்த விமானத்தை போருக்கும் , பயிலுவதற்கும் பயன்படுத்தலாமென  அந்நாட்டின்  பாதுகாப்பு பிரதி அமைச்சர் பிரிகேடியர் அமீர் கடானி கூறியுள்ளார்.   இதே நேரம் இந்த விமானம்  ஐக்கிய அமெரிக்காவின்   IHS Jane’s நிறுவனத்தின்  F- 5  யுத்த  விமானமே  தற்போது  Saeqeh-2.வாக மாற்றப்பட்டுள்ளதாக … Continue Reading →

Read More

அண்டார்டிக்காவில் தபால் நிலைய ஊழியராக கடமையாற்ற விண்ணப்பங்கள் கோரல்..!! 1100 ஸ்ரேலிங் பவுன் சம்பளம்

· · 129 Views

அந்தாட்டிக்காவில் –10 பாகை செல்சியஸிலும் குறைந்த உறை குளிரான காலநிலை நிலவும் தீவு ஒன்றிலிலுள்ள உலகின் மிகவும் பின்தங்கிய தபால் அலுவலகத்தில் ஊழியராக கடமையாற்றுவதற்கு பொருத்தமான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோடியர் தீவிலுள்ள மேற்படி தபால் அலுவலகத்தில் கடமையாற்றுபவர்கள் துர்நாற்றம் வீசும் 2000 பென்குயின்களுக்கு மத்தியில் வாழ நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் வழுக்கும் பாறைகள், பனிக் குவியல்கள் என்பவற்றில் மிகவும் பாரமான பெட்டியொன்றை தூக்கிச் செல்லக் கூடியவர்களாக இருப்பது அவசியம் என கோரப்பட்டுள்ளது. … Continue Reading →

Read More

BMW i8 Sports car : சச்சின் அறிமுகப்படுத்தினார்..!! இலங்கை மதிப்பு = 4.8 கோடி – காசி இருந்தால் வாங்குங்கள்

· · 163 Views

கிரிக்கெட் நட்­சத்­தி­ர­மான சச்சின் டெண்­டுல்கர், புதிய 2015 BMW i8 ரக ஆடம்­பர காரை மும்­பையில் நேற்று அறி­முகம் செய்­து­வைத்தார். இந்­தி­யாவில் இந்த றைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரின் விலை 2.29 கோடி ரூபா (சுமார் 4.8 கோடி இலங்கை ரூபா) ஆகும். சச்சின் டெண்­டுல்கர் பி.எம்.டபிள்யூ கார் அபி­மா­னி­யாவார். 1989 ஆம் ஆண்டு இந்­திய அணியில் விளை­யாட ஆரம்­பித்த அவர் 1993 ஆம் ஆண்டு தனது முத­லா­வது பி.எம்.டபிள்யூ காரை வாங்­கி­யி­ருந்தார். அது ஏற்­கெ­னவே பயன்படுத்தப்பட்ட ஒரு … Continue Reading →

Read More

Phú Quốc, Haiti, , Djibouti,Samoa,Palau போன்ற ஊர் பேர் தெரியாத நாடுகளுடன் 39 நாடுகளுக்கு விசா தேவையில்லை !! ஒரு ரவுண்ட் போகலாம்

· · 111 Views

இலங்கை பிரஜைகள் 39 நாடுகளுக்கு எந்தவித தடைகளும் இன்றி சுதந்திரமாக பிரயாணம் செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது. இலங்கையின் கடவுச்சீட்டு ஆசியாவில் பெறுமதியான கடவுச் சீட்டு என்றும் பல சுற்றுலா மையம் கொண்ட நாடுகளுக்கே இப்படியான சலுகைகள் வழங்கப் படுகின்றது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் பல நாடுகள் வருகை விசாவினை அறிமுகப்படுத்தியுள்ளன. வருகை விசா என்பது நீங்கள் ஒரு நாட்டினுள் நுழையும் போது அங்குள்ள விமான நிலையத்தில் வைத்து உங்களுக்கு விசா தரப்படும். இதற்கு எந்த ஆவணங்களும் … Continue Reading →

Read More

Qatar Free Visa : அரசாங்கத்தின் புதிய நடைமுறையினால் 5000 பாதிப்பு ..!! தொழில்களை இழக்கும் அபாயம் – Alert news

· · 500 Views

கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கட்டார் நாட்டின் Free visa எனப்படும் கட்டாரில் சுயமாக வேலையை தேடிக் கொள்ளும் விஸா மூலம் கட்டார் நாட்டிற்கு செல்லவிருந்த ஐயாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனுமதி மறுப்பினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனா். கட்டார் நாட்டிற்கு செல்லமுடியாமல் இவா்கள் கடந்த ஒரு மாத காலமாக திண்டாட்டத்திற்குள்ளாகியுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஏ.எல்.எம்.கனி,  தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை … Continue Reading →

Read More

யோஷித ராஜபக்சவின் முன்னாள் காதலிக்கும் தூதரக பதவி..!! திரும்ப உத்தரவு

· · 150 Views

மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவின் முன்னாள் காதலி யசாரா அபேநாயக்க, கெஹலிய ரம்புக்வலவின் மகள் சமித்ரி ரம்புக்வல உட்பட 23 ராஜதந்திர செயற்திட்டங்களின் பிரதிநிதிகள் மீள அழைக்கப்பட்டுள்ளனர். அவசியமற்ற அரசியல் நியமனங்களாக இவை கருதப்படுவதோடு இதில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலைய பொறுப்பாளர் லக்ஷ்மன் ஹலுகலவும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

நாமல் சவால் ; ஹெலிகொப்டர் எங்கே? லம்போகினி எங்கே? குற்றம் சுமத்தியவர்கள் தற்பொழுது எங்கே? அடிபட்ட நாய்கள் போல் இருக்கிறார்களாம்

· · 88 Views

தன்னிடம் உள்ளதாக கூறிய ஹெலிகொப்டர் மற்றும் லம்போகினி தற்பொழுது எங்கே உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். தேர்தல் மேடைகளில் என்னிடம் ஹெலிகொப்டர், லம்போகினி கார்கள் உள்ளதாக கூறினார்கள். அவர்கள் கூறியது போன்று நான் ஹெலிகொப்டர் வைத்திருந்திருந்தால் அவற்றினை வைப்பதற்கு ஒரு இடம் இருக்க வேண்டும். அப்படியான குற்றங்களை சுமத்தியவர்கள் தற்பொழுது கற்களால் அடிக்கப்பட்ட நாய்கள் போல் ஆதாரங்களின்றி நிற்கிறார்கள். லம்போகினி வைத்திருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு … Continue Reading →

Read More

Alert news : அவசரப்பட்டு விற்க வேண்டாம்..!! ரீ கன்டிஷன் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும்

· · 84 Views

நடைமுறையிலுள்ள பெறுமதிக்கு ஏற்ப மதிப்பீடு செய்யும் முறைமையை மாற்றுவதன் மூலம், இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிக்கலாம் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிடுகின்றது.   ஆயினும், வாகன இறக்குமதியாளர்களின் கோரிக்கையின் பிரகாரமே புதிய மதிப்பீட்டு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவிக்கின்றார்.   புதிய வாகன மதிப்பீட்டு முறைமை குறித்து இறக்குமதியாளர்களை தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இலங்கை சுங்கத்தில் நேற்று நடைபெற்றது.

Read More

அற்பனுக்கு பவிசு: விமல் அணியும் US சேர்ட்டின் விலை 45,000/= Burberry brit Shirt

· · 95 Views

முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரசன்ச அண்மையில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதமொன்றுக்கு அணிந்துவந்த பெறுமதி மிக்க சேட் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவர் அன்று அணிந்துவந்திருந்த சேட்டின் விலை ஸ்ரீலங்கா ரூபாவில் 45 ஆயிரம் எனக் கூறப்படுகின்றது. பர்பரி பிறேண்ட் (Burberry brand) வர்க்கத்தைச் சேர்ந்த இந்த சேட்டின் அமெரிக்க விலையானது 344 டொலர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகள் மீது குற்றம் சுமத்திவரும் இவர் அந்த நாடுகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்து … Continue Reading →

Read More

துமிந்தவை கைது செய்ய வேண்டாம் என அரசாங்க உயர் மட்டம் உத்தரவு ..!! C.I.D. அதிருப்தி

· · 110 Views

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விரிவான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைதுசெய்ய வேண்டாம் என புதிய அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பிரபல போதைப் பொருள் வியாபாரியான வெலே சுதாவின் வாக்குமூலத்தின் அடிப்படைடையில், துமிந்த சில்வாவை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தயாராகினர். அப்படி செய்ய வேண்டாம் என அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து பொலிஸ் மா அதிபருக்கு … Continue Reading →

Read More

ஆசியாவின் அநியாயம் : ஒரு வாக்கிற்காக 43,000 ரூபாய் செலவு செய்து அசத்திய மகிந்த..!! விளங்கிரும்

· · 418 Views

கடந்த அரசாங்க ஆட்சியில் இடம் பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக சாட்சியுடன் மேலும் பல தகவல்களை வெளிபடுத்த ஆயத்தமாகவுள்ளதாக நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் இடம் ஊழல் மற்றும். முறைகேடுகள் தொடர்பான தகவல் பல தன்னிடம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஒரு வாக்கிற்காக 43,000 ரூபாய் செலவு செய்த மகிந்த, மொத்தம் 250 மில்லியன்: பட்டலி கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச … Continue Reading →

Read More

சதொச விலைக் குறைப்பு : சீனி 83 /= மா /=87 நெத்தலி 384/= மாசி/=1740 உலர் மிளகாய் /=245 பயறு/= 260 பொன்னி சம்பா /= 60

· · 267 Views

  சதொச ஊடாக அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர் நன்மை கருதி, நாளை முதல் அமுலுக்கு வரும் விதத்தில் 10 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.   வர்த்தக அமைச்சு இதற்கான உத்தரவை விடுத்துள்ளது.   அதன்படி, பின்வரும் பொருட்களின் விலைகள் (கிலோ அடிப்படையில்) குறைக்கப்படவுள்ளன.   சீனி – 83 ரூபா கோதுமை மா – 87 ரூபா நெத்தலி – 384 ரூபா மாசி – 1740 ரூபா உலர் மிளகாய் – … Continue Reading →

Read More

ரவியின் கருணை : ஏப்ரல் மாதம் வரை அடகு நகைகளை ஏலம் விட வேண்டாம்..!! வங்கிகளுக்கு ரவி உத்தரவு

· · 102 Views

அரச வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை ஏப்ரல் மாதம் வரை ஏலத்தில் விடவேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்ட யோசனைகளின் பிரகாரம் அரச வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளுக்காக அறவிடப்படும் வட்டி நீக்கப்படும் வரை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்க வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சம் ரூபாவிற்கும் குறைந்த பெறுமதியுடைய தங்க நகைகளுக்கான வட்டியை முழுமையாக நீக்குவதற்கு அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு … Continue Reading →

Read More

Made in Russia : ரஷ்யாவின் குண்டு வீசி பழகும் ஜெட் விற்பனைக்கு !! $ 15,000,000/= – YAK – 130

· · 170 Views

Yak-130 is an advanced pilot training aircraft, able to replicate characteristics of Russian 4+ generation fighters, as well as the Sukhoi T-50 fifth generation fighter. Yak-130 is an advanced pilot training aircraft, able to replicate characteristics of Russian 4+ generation fighters, as well as the Sukhoi T-50 fifth generation fighter. Combat training suite on the Yak-130 includes simulated and real … Continue Reading →

Read More

Breaking news : The judgment : வெட் மோசடியில் ஈடுபட்ட நபர்களுக்கு 380 வருட ஜெயில்..870 கோடி தண்டம் !!

· · 137 Views

மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருக்கும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய வெற் ஊழல் மோசடியின் (400 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை) குற்றவாளிகள் இருவருக்கும். 380 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 8.7 பில்லியன் ரூபா தண்டமும் வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மேற்படி குற்றவாளிகள் இருவருக்கும் எதிராக ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ள  தண்டனையை அமுல்படுத்தும்படியே,மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னகோன் இன்று உத்தரவிட்டார், மொஹம்மட் முர்சி ரசீட் மற்றும் மொஹம்மட் நஸ்மி நாகூர் … Continue Reading →

Read More