கல்முனை மஹ்மூத் பெண்கள் பாடசாலை மாணவிகளின் கல்வி நிலைமை பாதிப்பில் !! சாதனைகளை படைத்த பழம் பெரும் பாடசாலை இப்போது வேதனையில்

· · 396 Views

கல்முனை மஹ்மூத் பெண்கள் பாடசாலை ஆசிரியர்களின் கவனயின்மை காரணமாக மாணவர்களின் கல்வி நிலைமை பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேசத்தில் பழைமை வாய்ந்த பெண்கள் பாடசாலையாகவும் பல்வேறு சாதனைகளை கடந்த காலங்களில் இப்பாடசாலை நிலைநாட்டியுள்ளது. ஆனால் தற்போது அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் பணி துஸ்பிரயோகத்தினால் மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். கிழக்கு மாகாண மாணவர்கள் மாத்திரம் இப்பாடசாலையில் கல்வி கற்பதில்லை.நாட்டின் நாலா பக்கமும் இருந்து மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வியை தொடர்கின்றனர்.ஆனால் கல்வியை தொடர்கின்ற வெளிமாவட்ட மாணவர்கள் … Continue Reading →

Read More

Dr.Farween says : டெட்டன்னஸ் தடுப்பூசி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டுக் கொள்ளவேண்டும்..!! இந்த ஊசி போட்டிருந்தால், இடையில் விபத்தில் அடிபட்டால்கூட தடுப்பூசி தேவையில்லாமலே நம்மைக் காப்பாற்றிவிடும்

· · 515 Views

அபு அலா – எமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக்கூட்ட நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்கவேண்டும்.  அதற்காக எந்த செலவினங்களும் செலவிடத்தேவையில்லை என அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்தியர் எஸ்.எம்.எப்.பர்வீன் தெரிவித்தார். அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையில் இன்று (27) இடம்பெற்ற தொற்றா நோய் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் போது மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில், நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத்தட்டுகள் ஆகியவை இருக்கின்றன. இதில் வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நோய்  எதிர்ப்புச் சக்தியைத் தருபவையாகும். இன்று சுற்றுப்புறச் சூழல்  மாசடைந்து இருக்கும் நிலையில் தண்ணீர், காற்று, உணவு, சக மனிதர்களுடன் பழகுவது என்று எந்த வடிவிலும் நோயை உண்டாக்கும் கிருமிகள் நம்  உடலுக்குள் ஊடுருவலாம். அந்தக் கிருமிகளை எதிர்த்துப் போராடி நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேலையை வெள்ளை அணுக்கள்  செய்கின்றன. இதுபோல், தோல் பகுதி, வயிற்றுக்குள் இருக்கும் அமிலம் என இயற்கையான எதிர்ப்பு சக்திகள் பல இருக்கின்றன. இன்னொன்று  அனுபவத்தின் அடிப்படையில் உடல் உருவாக்கிக் கொள்ளும் எதிர்ப்பு சக்தி. அதாவது, புதிதாக ஒரு நோய் ஏற்படும்போது அந்த நோயை எதிர்க்கும் சக்தி உடலுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட பிறகு, அந்த நோய் பற்றி உடலில் இருக்கும் செல்கள் தெரிந்துகொள்ளும். இந்தக்  காரணங்களால் நோய் ஏற்படுகிறது அதனால் நாம் எளிமையான உடற்பயிற்சி, அரைமணி நேரம் நடைப்பயிற்சி,  விளையாட்டுகள் என்று ஏதாவது உடல் செயல்பாடுகளை தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை அதற்காக ஒதுக்கி செய்துவருவதன் மூலம் எம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் … Continue Reading →

Read More

புத்தளத்தின் ஈத்தம் பழங்களை காத்தான்குடியில் அறுவடை செய்தார் அமைச்சர் ஹலீம்..!! ஈத்தம் பழ அறுவடை விழா

· · 994 Views

கிழக்கு மாகாணத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட அஞ்சல் மற்றும் அஞ்சல் விவகார முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு அருகாமையில் நேற்று 23 சனிக்கிழமை இடம்பெற்ற இவ் வருடத்திற்கான பேரீச்சம் பழங்கள் அறுவடை நிகழ்வில் கலந்து கொண்டார். இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி பேரீச்சம் பழங்களை அறுவடை செய்யும் நிகழ்வில் அஞ்சல் … Continue Reading →

Read More

S.L.M.C. க்கு டாட்டா : கிழக்கு ஆளுனராகிறார் பசீர் சேகு தாவூத்..!! வ.மா.உறுப்பினர் முகமது ரயீஸ் தேசியப்பட்டியல் எம்.பி.ஆகிறார்

· · 3755 Views

ஜனாதிபதி மைத்திரிபாலாவை முன்னாள் அமைச்சர் பஸீர் சேகு தாவூத் அவர்கள் சந்தித்ததை அடுத்து,முன்னாள் அமைச்சர் பஸீர் சேகு தாவூத் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுனராக ஜனாதிபதினால் நியமிக்கப்படலாம் என்று பேசப்படுகின்றது. அவ்வாறு இருக்க சல்மான் இராஜினாமாச் செய்யும் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு வன்னி மாகாண சபை உறுப்பினர் நியமிக்கப்படலாம் என நம்பகமான வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றன… கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாரை ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஹக்கீம் வெகு விரைவில் … Continue Reading →

Read More

காதல் போராளிகள்: சம்மாந்துறை சுலைமான் லெப்பை அப்துல் அலி காதலுக்காக கொல்லப்பட்டார்..!!

· · 2768 Views

அம்பாறை, சம்மாந்துறைப் பிரதேசத்தில் காதல் விவகாரம் தொடர்பில் இரு இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 22 வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்மாந்துறை – சென்னல் கிராமத்தைச் சேர்ந்த சுலைமான் லெப்பை அப்துல் அலி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் இரு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பிரதான சூத்திரதாரி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் … Continue Reading →

Read More

கிழக்கின் பாவாக்கள் பார்களில்..!! கிழக்கின் அதிகரித்த டைவர்சுகளுக்குக் காரணம் மது பாவனையே – அதிர்ச்சித் தகவல்

· · 257 Views

இஸ்லாம் மதத்தில் மது தடை செய்யப்பட்டுள்ள போதிலும் கிழக்கில் முஸ்லிம்கள் மத்தியில் விவாகரத்துக்கு மதுபோதையே பிரதான காரணமாக அமைந்துள்ளது. இந்த தகவலை தெ நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. மது காரணமாக வறுமை ஏற்படுகின்றமையால், கிழக்கின் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிகளுக்காக செல்கின்றனர். இதனால் குடும்ப வாழ்க்கையில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. காத்தான்குடியில் மதுபான விற்பனை நிலையங்கள் இல்லை. எனினும் அருகில் உள்ள மட்டக்களப்பு நகரில் மதுபான விற்பனை மையங்கள் அமைந்துள்ளன. எனவே ஆண்கள் அங்கு சென்று … Continue Reading →

Read More

சமூக எழுச்சிக்காக பாடு படும் விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ் க்குக் கெளரவம் – துருவ நட்சத்திரம்

· · 347 Views

விடிவெள்ளிப் பத்திரிகையின் ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ் நேற்று (1.4.2016) வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரசேத செயலக கலாசார பேரவையினால் கௌரவிக்கப்பட்டார். காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த கௌரவிப்பு வைபவத்தில் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.கோமலேஸ்வரன் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களான மௌலவி எம்.சி.எம். றிஸ்வான் மதனீ, மற்றும் எம். ஜாவித் உட்பட உலமாக்கள் கலைஞர்கள், கவிஞர்கள் ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள் உலமாக்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இதன் போது தேசிய நாளார்ந்த … Continue Reading →

Read More

Special news : கேபினெட் அமைச்சராகிறார் ஹிஸ்புல்லாஹ்..!! காத்தான்குடிக்கு ஜனாதிபதியின் புத்தாண்டுப் பரிசு

· · 459 Views

அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. நேற்று புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் தெரியவருகிறது. இது தொடர்பாக அரசியல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரியவருவதாவது; பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்திற்கு முன்பதாக அல்லது அதற்கு பின்னர் இந்த அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெறவுள்ளன. தற்போது மீள் குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சராக பதவி வகிக்கும் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாகவும் மற்றும் … Continue Reading →

Read More

அரசியலுக்கு அப்பால் : கவிஞர் மஜீதின் மருத்துவ செலவுக்கு ஐந்து லட்சம் வழங்கினார் அமைச்சர் றிஷாத்..!! கண்ணீர் தருணங்கள்

· · 446 Views

கைத்தொழில், வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரிசாத் பதியுதீன் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த கவிஞர் ஒருவரின் வீடு தேடிச் சென்று மருத்துவச் செலவுக்கு பெருந்தொகைப் பணம்கொடுத்து உதவியுள்ளார். கிழக்கிலங்கையின் அம்பாறை மண் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு உரமிட்டு வளர்த்த மண்ணாகும். அதிலும் குறிப்பாக கல்முனை, பொத்துவில் பகுதிகள் முஸ்லிம் காங்கிரசின் கோட்டைகளாகும்.     எனினும் இங்குள்ள மக்களின் துன்ப, துயரங்களில் அக்கட்சியினர் ஒருபோதும் பங்கேற்பதோ, தேவையான உதவிகளை வழங்குவதோ இல்லை. இந்நிலையில் மிக நீண்ட காலமாக நரம்புபாதிப்பு … Continue Reading →

Read More

கிழக்கு அரசியலின் மிகப்பெரிய மொத்த வியாபாரம்..!! 18 முன்னாள் உள்ளூராட்சி மெம்பர்கள் A.C.M.C. இல் இணைவு

· · 384 Views

குச்சவெளி, தம்பலகாமம், மூதூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள 18 முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இன்று (27) இரவு இணைந்துகொண்டனர். முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த இந்த உறுப்பினர்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னிலையில் கட்சியில் இணைந்துகொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்தும் பாடுபடப் போவதாகப் பகிரங்கமாக அறிவித்தனர். கிண்ணியா, பொது மைதானத்தில் … Continue Reading →

Read More

காத்தான்குடியில் பூத்துக் குலுங்கும் புத்தளத்து பேரீத்தம் பழ மரங்கள்..!! புத்தளத்திற்கும் பங்குண்டு

· · 816 Views

மத்திய கிழக்கு நாடுகள் போன்று மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே சுமார் 70 பேரீத்த மரங்கள் நடப்பட்டு காத்தான்குடி நகர சபையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிக வெப்பநிலை நிலவுவதால் இப் பிரதான வீதியிலுள்ள அதிகமான பேரீத்த மரங்களில் பேரீத்தம் பழங்கள் பூத்தும் காய்த்தும் காணப்படுகின்றது. மேற்படி பேரீத்தம் மரங்கள் கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் வீதிகளை அழகுபடுத்தும் விஷேட திட்டத்திற்கமைவாக 2008-2009 காலப்பகுதியில் தற்போதைய இராஜாங்க அமைச்சரும் , மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற … Continue Reading →

Read More

Security tightened in Kalmunai : மு.கா. மாநாட்டுக்கு ஜனாதிபதி, பிரதமர் விஜயம் !! கல்முனையில் பாதுகாப்பு தீவிரம்

· · 190 Views

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாகவும் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் நாளை (19) சனிக்கிழமை வருகைத்தர உள்ளதாகவும், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகம் மற்றும் விஞ்ஞான ஆய்வு கூடம் என்பவற்றை திறந்துவைத்து, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாநாட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளதாக அறியப்படுகின்றது. ஜனாதிபதி … Continue Reading →

Read More

கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நசீர் புத்தளம் விஜயம்..!! நுரைச்சோலை, முசல்பிட்டி கிராமம், பள்ளிவாசல் துறை, கற்பிட்டி பிரதேஷ மக்களின் பிரச்சனைகளை ஆராய்ந்தார்

· · 490 Views

பைஷல் இஸ்மாயில் புத்தளம் மாவட்டத்துக்கு நேற்று (12) மாலை  விஜயம்  செய்த கிழக்குமாகாண  முதலமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான செய்னுலாப்தீன் நசீர் அஹமட், நுரைச்சோலை, முசல்பிட்டி கிராமம், பள்ளிவாசல் துறை, கற்பிட்டி உள்ளிட்ட  பிரதேச மக்களை சந்தித்து  அம்மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து  ஆராய்ந்தார். இச்சந்திப்பின்போது, கடந்த காலங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் இன்னும் நிரந்தர வீடு, குடிநீர், போக்குவரத்து பாதைகளின் சீரின்மை, தொழில் வசைதில்லாது படும் அவலநிலைகள் போன்ற பல பிரச்சினைகள் குறித்து … Continue Reading →

Read More

கிழக்குக்கு மேலும் ஒரு எம்.பி. : தொடரும் ஹக்கீமின் மாற்றாந்தாய் மனப்பான்மை..!! ஏனைய பிரதேச முஸ்லிம்களை கைவிடும் மு.கா.

· · 497 Views

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் வாக்குறுதி வழங்கப்பட்டவாறு அவற்றை நான் நிவர்த்தி செய்வேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். எதிர்வரும் 19ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச பாலமுனை கிராமத்தில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு பற்றி ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியாளர் சந்திப்பு இன்று ஒலுவில் கிறீன் வில்லா ஹோட்டலில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு கூறினார். அங்கு ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பிய கேள்விக்கு … Continue Reading →

Read More

மு .கா .வின் கௌரவப் பிரச்சனையில் வெற்றி பெற்றார் ஹக்கிம்..!! கல்முனையில் மீண்டும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவலகம் திறக்கப்படும்..!!

· · 464 Views

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கல்முனைக் காரியாலயம் மீண்டும் திறக்கப்படும் என முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில். கல்முனை அலுவலகம் மூடப்பட்டுள்ள விடயம் தொடர்பில் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.கல்முனை அலுவலகத்தில் வசதிகள் போதாமை , கட்டடத்துக்கான வாடகை அதிகம் உள்ளிட்ட பல குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் … Continue Reading →

Read More