கூளக் கோச்சி : நியாயம் கேட்க முடியவில்லை புத்தளத்து வல்லவர்க “ளால்” – “லால்” காந்த எம்.பி. இன்று பெரிய பள்ளிக்கு வருகிறார் நியாயம் கேட்க !!

· · 568 Views

// மக்கள் மீது அன்புகொண்ட அனைவருக்கும் \\ இலங்கையின் அரசியல் கட்சிகளில், இனம் – சமயம் – மொழி வேறுபாடு பாராமல் பணியாற்றும் கட்சிகளாக சமதர்ம () சிந்தனை கொண்ட கட்சிகள் காணப்படுகின்றன. அவற்றில், மக்கள் விடுதலை முன்னணி இன்றைய அரசியலில் முன்னிலையில் இருக்கின்றது. கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைக் கூளங்களை புத்தளம் பிரதேசத்தில் கொட்டும் திட்டம் தொடர்பில் மக்களின் கருத்தறியும் திறந்த கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. ம.வி.மு.வின் பா.உ. லால்காந்த இக் கலந்துரையாடலுக்காக வருகைத் தருகின்றார். காலம்: … Continue Reading →

Read More

உரத்துச் சொன்னார் I.G.P. : வெள்ள அனர்த்தத்தின் போது முஸ்லிம்களின் செயற்பாடு போற்றத்தக்கது..!! பொலீஸ் பொஸ்

· · 5511 Views

நாட்டில் இடம்பெற்ற வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தின் பின்னர் முஸ்லிம் சமூகம் பௌத்த, ஹிந்து மற்றும் கிறிஸ்தவ சமூகத்துடன் இணைந்து செயற்பட்ட எண்ணற்ற சந்தர்ப்பங்களை அவதானித்தோம். மத தலைவர்களும் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். நாம் இதனைப்பாராட்டுகின்றோம் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் -13 -இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றும் போதே பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் பொலிஸ் அதிகாரிகள் தமது கடையிலும் … Continue Reading →

Read More

கண்டி மகியாவையை சேர்ந்த விமானப்படை வீரர் இன்ஷாப் காலமானார் – ரயிலில் தவறி விழுந்தார்

· · 986 Views

மருதானையிலிருந்து காலி நோக்கி புறப்பட்ட ரயில் ஒன்றில் ஏற முற்பட்ட நபரொருவர் தவறி விழுந்தமையால் உடல்  பாகங்கள் இரண்டாக சிதைவடைந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகி வபாத்தாகியுள்ளார். குறித்த நபர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து ரயில் புறப்படுவதற்கு தயாரான சந்தர்ப்பத்தில்  குறித்த நபர் அவசரமாக ஏற முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சுமார் 30 வயதுடைய இன்ஷாப் எனவும், கண்டி மஹிய்யாவ ( பூர்னவத்த) பகுதியை சேர்ந்த இலங்கை … Continue Reading →

Read More

பிளவை உண்டாக்கும் பிறை விவாதம் : “உள்நாட்டுப் பிறையா…சர்வதேஷ பிறையா என பிறையை வைத்து கஞ்சி காய்ச்சாமல் உருப்படியான தீர்வை நோக்கி நகர வேண்டுகோள்

· · 537 Views

(Raazi Muhammadh Jaabir) சர்வதேசப்பிறை,உள்நாட்டுப்பிறை சம்பந்தமான வாதப்பிரதிவாதங்கள் இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் இருந்து வருகின்றன. நோன்பையும்,பெருநாளையும் தீர்மானிப்பது ஆட்சியாளனின் வேலை. ஆட்சியாளன் நோன்பையும், பெருநாளையும் சர்வதேசப் பிறையையோ அல்லது உள்நாட்டுப் பிறையையோ அடிப்படையாக வைத்து அறிவித்தால் அதற்கு அடிபணிவது மக்களின் கடமை.அதனை மீறி சுயமாகப் பெருநாள் கொண்டாடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இந்தப் பிரச்சினை இந்த வடிவத்திலேயே கொண்டுசெல்லப்பட்டால் இதற்கு ஒரு போதும் தீர்வு காணமுடியாது.பிரச்சினையை அணுகும் முறையை நாம் மாற்றிக்கொள்ளவேண்டும். இஸ்லாமிய கிலாபா ஒன்று உருவாகும் வரைக்கும் இலங்கை … Continue Reading →

Read More

Yes fire Zone : 600 பூகொட முஸ்லிம்கள் இடம்பெயர்வு !! இன்னலுக்கு மேல் இன்னல்

· · 1433 Views

கொஸ்கம, சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்டுள்ள பாரிய தீ விபத்து காரணமாக வெளியேறியுள்ள மக்கள், உணவுத் தேவை உள்ளிட்ட அவசர உதவிகளுக்கு 117 என்ற இலக்கத்தினூடாகத் தொடர்புகொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கனரக பீரங்கித் துப்பாக்கிச் சன்னங்கள் வெடித்துச் சிதறியமையால் ஹங்வெல்ல மற்றும் பூகொட உள்ளிட்ட பிரதேச மக்கள் உடனடியாக பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர். இதேவேளை, சலாவ இராணுவ முகாமிலிருந்து 2 கிலோமீட்டர் சுற்றளவே பாதிப்புக்கு உட்பட்டுள்ளதாகவும் அச்சம் காரணமாக வெளியேறியுள்ள ஏனைய மக்கள் … Continue Reading →

Read More

தொடர்ந்து வெடித்துச் சிதறும் குண்டுகள்..!! திகைக்கும் ராணுவம் – ஒரு ராணுவ வீரர் மரணம்

· · 1867 Views

கொஸ்கமவிலுள்ள சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இது தவிர, காயமடைந்த இருவர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் காயமடைந்த எவரும், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் இன்று மாலை ஏற்பட்ட வெடிவிபத்தையடுத்து, அங்குள்ள ஆட்டிலறி, பல்குழல் பீரங்கி, ஆர்பிஜி குண்டுகள் நாலாபுறமும் வெடித்துச் சிதறிக் கொண்டிருப்பதாக பிந்திய தகவல்கள் … Continue Reading →

Read More