முசல்பிட்டி கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பம் – அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்தார்

· · 263 Views

-ரஸீன் ரஸ்மின் கற்பிட்டி, முசல்பிட்டிப் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கிராமிய குடிநீர் திட்டத்துக்கான ஆரம்ப வேலைகள், நேற்று வெள்ளிக்கிழமை (11), வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸின் வேண்டுகோளுக்கிணங்க நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினூடாக இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந் நிகழ்வில் வடமேல் மாகாண … Continue Reading →

Read More

Special news : 1000 CC 200,000 ரூபாவாலும், 1,800 – 2,000 CC வரை இலட்சம் ரூபாயினாலும் அதிகரிப்பு -வேன்களுக்கு 2 லட்சம் குறைவு – Full details

· · 2428 Views

ஆயிரத்துக்கும் குறைவான எஞ்ஜின் திறன் கொள்ளளவு கொண்ட சிறிய ரக கார்கள், 2 இலட்சம் ‌ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக, வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். எஞ்ஜின் திறன் கொள்ளளவு கொண்ட வாகனங்கள் 9 இலட்சம் ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய மேற்படி இறக்குமதியாளர்கள், இது, ஹைப்ரிட் வாகனங்களில் தாக்கம் செலுத்தப்போவதில்லை என்றனர். அனைத்துவிதமான வான்களும், இரண்டு இலட்சம் ரூபாயினால் குறைவடையவுள்ளது. இந்த விலைக் குறைப்பானது, பெட்ரோல் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு மாத்திரமே அமுலானதாகும். டீசலில் இயங்கும் வான்களுக்கு, இந்த விலைக்குறைப்பு இல்லை. … Continue Reading →

Read More

நோய் காரணமாக வார்ட்டில் அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கு ஒரு லட்சம் காப்புறுதி..!! O.P.D. க்கு 10,000/= அரசாங்கம் மற்றுமோர் புரட்சி

· · 540 Views

நேற்று முன்வைக்கப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்டம் மாணவர்களின் கல்விக்கும் அவர்களது எதிர்காலத்திட்டத்திற்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் 5 வயது தொடக்கம் 19 வயது வரையான அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இரண்டு இலட்சம் ரூபா காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார். அது மட்டுமின்றி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற மாணவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவும், வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக 10 ஆயிரம் ரூபாவும் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதன்மூலம் மாணவர்களின் பாதுகாப்பில் அரசாங்கம் கவனம் … Continue Reading →

Read More

நிதியமைச்சரின் சோனக மனைவி மெலா கருனானயக்கே அவரை ஆரத்தியுடன் வழியனுப்பினார் !!

· · 1581 Views

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு அவரின் துணைவியும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவருமான ( பார்த்தால் அப்படி விளங்கவில்லை ) திருமதி மெலா கருணாநாயக்க இன்று அமைச்சரின் இல்லத்தில் வைத்து ஆரத்தியுடன் வழியனுப்பி வைத்ததாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முஸ்லிம் பெண்மணியான திருமதி. மெலாவை காதல் திருமணம் புரிந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. கருணாநாயக்க  தம்பதியருக்கு  ஒனேலா, ஷேனேல்லா, மற்றும் மிநெல்லா என்ற 3 புதல்விகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

“பால் பண்ணையாளர் ஒருவருக்கு 10 மாடுகள் வழங்கப்படும்..பட்ஜெட் வாசிப்பில் ரவி..!! ஞானசார தேரருக்கு நெத்தியடி

· · 821 Views

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான வாசிப்பு இன்றைய தினம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. பால் பண்ணையாளர்களுக்கு ஒரு வீட்டுக்கு 10 மாடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், பால் உற்பத்தி அதிகரிப்பிற்கு 400 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கைத்தொழில் துறை முன்னேற்றத்திற்காக 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, விவசாயத்துறையில் வருவாய்களை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாகவும், அவர்களுக்கான நிலம் ஒதுக்கி கொடுப்பதற்காக … Continue Reading →

Read More

சொன்னதை செய்தார் நிதியமைச்சர் !! பட்ஜெட்டில் மக்களுக்கு பல்வேறு வரப் பிரசாதங்கள்..!! மார்ச் மாதம் பாலாவி டொமஸ்டிக் ஏர்போர்ட் இயங்கத் தொடங்கும்

· · 4258 Views

05:02 PM – 100 பொருட்களுக்கான தீர்வை குறைப்பு. 05:02 PM – இலத்திரனியல் மோட்டார் வாகனங்களுக்கான வரி குறைக்கப்படும்.   05:01 PM – பழைய வாகன ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் வழங்கப்படும்   05:01 PM – கார்பனுக்கு புதிய வரி.   05:00 PM – சமூர்த்தி பயனாளிகளுக்கு மாதாந்தம் 5 கிலோகிராம் அரசி.   05:00 PM – பெல்மடுல்லவில், அனர்த்த முகாமைத்துவ மையமொன்று அமைக்கப்படும்   05:00 PM – … Continue Reading →

Read More

அடிக்கல் நாட்டச் சென்ற அமைச்சர் ஜோனுக்கு “குரக்காட்டிய “மக்கள்..!! வெலிசறவில் சம்பவம்

· · 318 Views

வெலிசர பகுதியில் இடம்பெற்ற கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்த அமைச்சருக்கு எதிராக மக்கள் கூச்சலிட்டுள்ளனர். அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராகவே இவ்வாறு கூச்சலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று இடம் பெற்றது. இருப்பினும்,குறித்த விளையாட்டு மைதானத்தில் கட்டிடம் அமைக்க தேவையில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், மக்களின் கூச்சலை பொருட்படுத்தாது அடிக்கல் நாட்டப்பட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று … Continue Reading →

Read More

துருக்கி விமானம் முதல் தடவையாக இலங்கையில் !! பயணிகள் சேவைகளும் ஆரம்பம்

· · 344 Views

துருக்கி விமான சேவையின் காகோ விமானம் ஒன்று முதல் முறையாக இன்று இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது. துருக்கி பயணிகள் விமான சேவை மற்றும் காகோ விமான சேவை இன்று முதல் இலங்கையில் தனது செயற்பாட்டினை ஆரம்பித்துள்ளது. இந்த விமானத்தில் இலங்கையில் இருந்து 30 ஆயிரத்திற்கும் அதிக நிறையுடனான பொருட்களை ஐரோப்பாவுக்கு கொண்டு செல்ல முடியும்.     ஐரோப்பாவில் இருந்து இலங்கை வரும் ஒரே விமான சேவை இதுவாகும்.       துருக்கி விமான சேவை தொடர்ந்து … Continue Reading →

Read More

அமீர் அலி நம்பிக்கைத் துரோகம் செய்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர். அவரை இஸ்லாம் சமயம் ஏற்றுக் கொள்கின்றதா.? சீ.யோகேஸ்வரன் அதிரடி

· · 466 Views

வாலே இங்கு ஆடும் போது முழுமையாக அமைச்சர் றிசாட் பதியுதீன் வந்தால் எமது மாவட்டம் என்ன நிலைமைக்கு ஆகும் என்பதை சிந்திக்க வேண்டும். அதைத்தான் எமது மக்களுக்கு சொன்னேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். வாகரைப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்! மட்டக்களப்பில் ஒரு முழு அமைச்சர், ஒரு முக்கால் அமைச்சர், ஒரு அரை அமைச்சர், ஒரு கால் … Continue Reading →

Read More

Morning story : அபூதாபியின் Abudhabi Capital Group நிறுவனத்திற்கு பிரபல அமைச்சர் ஒருவரே சிவ­னொ­ளி­பாத காணியை விற்பனை செய்தார்..!! இதில் எடிசலாத் நிறுவனத்திற்கு எதுவித சம்பந்தமும் இல்லை..!! A – Z Story

· · 628 Views

A.R.A Fareel – நன்றி -விடிவெள்ளி வர­லாற்றுப் புகழ்­மிக்க சிவ­னொ­ளி­பாத மலை இன்று சர்ச்­சைக்­கு­ரிய பிர­தே­ச­மாக மாறி­யுள்­ளது. மலைப் பிர­தேசப் பகு­தியில் மத்­திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த நிறு­வ­ன­மொன்று ஹோட்­ட­லொன்று நிர்­மா­ணிக்கும் பணி­களில் ஈடு­பட்டு வரு­வ­தாக சர்ச்­சைகள் கிளப்பி விடப்­பட்­டுள்­ளன. இந்த மலையில் சிவ­பெ­ரு­மா­னு­டைய பாதச் சுவடு பதிந்­துள்­ள­தாக நம்­பிக்கை வைத்­துள்ள இந்­துக்­கள் இம்­ம­லையை சிவ­னொ­ளி­பா­த­மலை என்­ற­ழைக்­கி­றார்கள். இதே­வேளை முஸ்­லிம்கள் இம்­ம­லையில் ஆதம் (அலை) யின் பாதச்­சு­வடு பதிந்­துள்­ள­தாக நம்­பிக்கை வைத்து பாவா ஆதம் மலை என்­ற­ழைக்­கி­றார்கள். பெரும்­பான்மை … Continue Reading →

Read More

அரசாங்க சேவையில் 60% பெண்களே..!! இந்த நிலையால் அரசாங்கத்திற்கு பெரும் தலையிடி

· · 671 Views

இலங்கையின் நிர்வாக துறையில் பெண்கள் பெரும்பான்மையாக இருப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது. அரச சேவையில் பிரதான பதவிகளை பெரும்பாலும், பெண்கள் வகித்து வருவதால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளதே இதற்கு காரணம். பெண்களின் முடிவுகளை எடுக்கும் தயக்கம் காட்டும் சுபாவமும், பெண்களிடம் காணப்படும் முன்னேற்றமற்ற எண்ணங்களுமே இதற்கு காரணம் என சமூக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அச்சமின்றி தீர்மானங்களை எடுக்க பெண்கள் தயங்குவதால், நிர்வாகத்துறையில் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. இலங்கை பல்கலைக்கழங்களில் மாணவிகளே அதிகளவில் கல்வி கற்று … Continue Reading →

Read More

ஊழல்களின் தாய் : ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்தில் 40,000 மில்லியன் ரூபாய் ராஜபக்சக்களினால் கொள்ளை !!

· · 452 Views

ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாண நடவடிக்கையின் போது ராஜபக்ஸர்களினால் அறவிடப்பட்டுள்ள பணம் கிட்டத்தட்ட 270 மில்லியன் அமெரிக்க டொலர் (40,000 மில்லியன் ரூபாய்) என உறுதியாகியுள்ளது. துறைமுக நிர்மாணிப்பு நடவடிக்கைக்காக சீன மெர்சன்ட் வங்கியில் இருந்து 1350 மில்லியன் டொலர் கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும் சீனா துறைமுக நிறுவத்தினால் இந்த துறைமுகம் 1080 மில்லியன் டொலருக்கு கோரப்பட்டுள்ளது. வணிக துறைமுகத்தின் பெறுமதி இவ்வாறு குறைமதிப்பிடப்படாது என்பதனால், மேலதிக பணம் தரகாக அறிவிடப்பட்டுள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் … Continue Reading →

Read More

கடையாமோட்டைக்கு பொலீஸ் நிலையம் வேண்டும்..!!அ மைச்சர் றிஷாத் ஊடாக பொலீஸ் மா அதிபருக்கு கோரிக்கை

· · 2309 Views

-ரஸீன் ரஸ்மின் கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட கடையாமோட்டை பிரதேசத்தில் புதிதாக பொலிஸ் நிலையமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஏ.எஹியா மற்றும் முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.முஹ்சி ஆகிய இருவருமே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய நாடு பூராகவும் 600 புதிய பொலிஸ் நிலையம் அமைக்கும் … Continue Reading →

Read More

Special news :”ஞானசாரரின் பூச்சாண்டியையும் தாண்டி S.L.T.J. கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டத்தில்..!!

· · 978 Views

ஜி.எஸ்.பி வரி சலுகையை பெற்றுக்கொள்ள தனியார் சட்டங்களை மாற்ற அரசாங்கம் நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறி ஸ்ரீலங்கா தவ்ஜீத் ஜமா அத் அமைப்பினால் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் முஸ்லிம் மக்களின் மத சார்பான சட்டங்களை மாற்ற முற்படுவதாகவும் இதனால் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது கலாச்சாரத்தை பாதிக்கும் எனவும் குற்றம் சாட்டினர். முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு ஐ.நா … Continue Reading →

Read More

நல்லாட்சி ஸ்பெஷல் : 20 வருடங்களின் பின்னர் நெதர்லாந்தின் KLM விமான சேவை ஆரம்பம்..!!

· · 613 Views

நெதர்லாந்தின் தேசிய விமான சேவையான KLM விமான சேவை 20 வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான தனது விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. KLM விமான சேவை நிறுவனத்தின் KL873 இலக்க விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் KLM நிறுவனம் தனது சேவையை இலங்கையில் ஆரம்பித்துள்ளது. Boening 787 -9 Dreamliner ரக நவீன விமானத்தை இந்த நிறுவனம் தனது விமான சேவைக்கு பயன்படுத்தியுள்ளது.

Read More