
முஜிபுர் ரஹ்மானை பிரதி சபாநாயகராக நியமிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை – U.N.P. எம்.பி.க்கள் கடிதம் கொடுத்தனர்
· · 148 Viewsபாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை பிரதி சபாநாயகராக நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள்,பிரதமர்ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 20 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய கோரிக்கை கடிதமொன்று இன்றைய தினம் காலை பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.