you டூ : ஞானசாரவை கைது செய்யாமல் தடுத்தது பொலீஸ் மா அதிபர்..!! S.T.F. க்கு கோல் எடுத்தாராம் பூஜித

· · 206 Views

குருநாகலில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் கைது செய்ய முயன்றபோதும் அது பலனளிக்காமல் போனதற்கு காரணம் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் தலையீடு என குருநாகல் பொலிஸ் நிலைய உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.     குருநாகல் பொலிஸ் அதிகாரி பிரியந்த லியனகே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவை கைது செய்ய சென்றபோது தொலைபேசி … Continue Reading →

Read More

திருமதி. பொட்ட நவ்பர் விஷேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டார் !! 610 கிராம் தங்கம் இருந்ததாம்

· · 292 Views

பொட்டு நௌவ்பர்  என்று அழைக்கப்படும் மொஹமட் நௌவ்பரின் மனைவி, பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விஷேட அதிரடிப்படை குழுவினர் முன்னெடுத்த திடீர் சுற்றிவளைப்பின் போது, இன்று அதிகாலை இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை கைதுசெய்யும்போது, 610 கிராம் தங்கம் அவரிடம் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ஞானசாரரின் குழப்படிகள் முஸ்லிம்களின் நோன்பு கால இரவு வணக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தல் !! சந்திரிக்கா சொன்ன கூட்டில் தேரரை அடைக்க வேண்டுகோள்

· · 578 Views

´நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதமாக செயற்படுகின்ற ஞானசார தேரரை நாயை இளுத்துச் சென்று அடைப்பது போன்று சிறைக்குள் தள்ளி தகுந்த நடவடிக்கை எடுப்போம்´ என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தது போன்று பௌத்த தீவிரவாதிகள் மீது அவசரமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக … Continue Reading →

Read More

முந்தலில் ஒரு கோடி ரூபாய் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது..!! என்ன நடக்கிறது இங்கே..?

· · 518 Views

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய ஹெரோயினுடன் முந்தல் – சின்னப்பாடு பகுதியில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முந்தல் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, சின்னப்பாடு பகுதியிலுள்ள வீடொன்றை சோதனையிட்ட போது அங்கிருந்து ஒரு கிலோ 50 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனுடன் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் 39 வயதுடைய ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவரை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More

Video: ஞானசாரர் அமைச்சர் மனோவுடன் ஒரு “கடைலை கருத்தைக் கடைக்காரரரிடம் பேசுவது போல் பேசும் கேவலம் !! ஜனாதிபதிக்கே அவமானம்

· · 951 Views

‘இந்த நாடு யாருடையது? சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை நீங்கள் ஒத்து கொள்கின்றீர்களா?’ என ஞானசார தேரர் அமைச்சர் மனோ கணேசனிடம் அதிகார தொனியில் கேள்வி கேட்க அதற்கு அமைச்சர், ‘தேரரே இந்த நாடு சிங்கள, தமிழ் முஸ்லிம்..’ என பதிலளிக்க முற்பட்டபோது இடைமறித்த தேரர், ‘இல்லை இல்லை இந்த நாடு யாருக்கு சொந்தமானது?’ என கேட்க, அமைச்சர் ‘இந்த நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்று கூற முற்பட்ட போது, கோபமடைந்த தேரர் முறையற்ற … Continue Reading →

Read More

சிலாபம் 200 கோடி ஹெரோயின் விவகாரத்தில் பாயிஸ் பாயை தேடும் புத்தளம் D.I.G.!! தெஹிவளை வாகன வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார்

· · 2016 Views

பாகிஸ்­தானிலிருந்து கடல்­மார்க்­க­மாக கொண்­டு­வ­ரப்­பட்ட சுமார் 200 கோடி ரூபா பெறு­ம­தி­யான ஹெரோயின் போதைப்பொரு­ளை கடந்த வியா­ழ­னன்று புத்­தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­ல­கத்தின் கீழ் இயங்கும் விசேட உளவுப் பிரி­வினர் கைப்­பற்­றிய நிலையில், அதன் பின்­ன­ணியில் உள்­ள­தாக நம்­பப்­படும் பாயிஸ் பாய் குறித்து பல தக­வல்­களை பொலிஸார் வெளிப்­ப­டுத்­தியுள்­ளனர். பாகிஸ்­தானி­ய­ரான குறித்த நபர் டுபாயில் தங்­கி­யி­ருந்து இந் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­துடன் நாட்­டுக்குள் அவ­ரது போதைப்பொரு­ளை விற்­பனை செய்யும் முன்­னணி வர்த்­த­கர்கள் பலர் … Continue Reading →

Read More

ஜனாதிபதி தலையிட்டதால் தோப்பூர் முஸ்லிம்கள் உயிர் பிழைத்தார்கள் !! நல்லாட்சிக்கே அவமானம்

· · 917 Views

“வெடிச்சத்தமும் வால் வீச்சும் மேலோங்கியிருந்தனர். அச்சத்துடன் முஸ்லிம் மக்கள் ஓடி வந்த காட்சிகள் 2006 ஆம் ஆண்டு மூதூர் வெ ளியேற்றத்தையும் அதற்கு முன்னர் விடுதலை புலிகள் காலத்தில் இருந்த பதற்றமான நிலைமையையே காட்டின. மீண்டும் ஒரு முறை யுத்தத்தின் கொடூரத்தை அனுபவித்ததுபோல் இருந்தது.” “பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் திருகோணமலை துறைமுகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தபோது இச்சம்பவம் எமக்கு எட்டியது. … Continue Reading →

Read More

“எனது வாப்பாவின் கதையில் நடித்தால் நடவடிக்கை..!! பம்பாயை கலக்கிய தாதா ஹாஜி மஸ்தானின் மகன் ரஜனிக்கு மிரட்டல்

· · 604 Views

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கவுள்ள ரஜினியின் 161வது படம், மும்பையை கலக்கிய தாதா ஹாஜி மஸ்தான் கதை என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை இயக்குனர் ரஞ்சித் மறுத்திருந்தார் இந்நிலையில் ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன், ரஜினிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். தனது தந்தை ஒரு தாதா இல்லை என்றும், அவரை தாதா போன்று சித்தரித்து திரைப்படம் எடுத்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் … Continue Reading →

Read More

மீதொட்டமுல்ல பெண்களுக்கு வழங்கப்பட்ட “மார்ப்புக் கச்சைகளில்” ஜெல் மற்றும் குளுசைகள் !! அதிர்ச்சி ரிப்போர்ட்

· · 1522 Views

மீதொட்டமுல்ல குப்பை மலை சரிந்ததில், வீடுகளை இழந்த நிலையில் முகாம்களில் தங்கியுள்ள யுவதிகள் மற்றும் சிறுமிகளுக்கென, இலவசமாக விநியோகிக்கப்பட்ட மார்புக் கச்சைகளுக்குள், ஜெல் பெக்கெட்டுகளும் மாத்திரைகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீதொட்டமுல்ல நெற்களஞ்சியசாலையில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுமிகள் மற்றும் யுவதிகளின் பாவனைக்கு மாத்திரமே என்று கூறப்பட்ட நிலையிலேயே, மேற்படி மார்புக் கச்சைகள் விநியோகிக்கப்பட்டதாக, அவர்களின் தாய்மார் தெரிவிக்கின்றனர். இந்த மாத்திரைகள் மற்றும் ஜெல் அடங்கிய பெக்கெட்டுகள், மிகவும் சூட்சுமமான முறையில், மேற்படி மார்புக் கச்சைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டு … Continue Reading →

Read More

முஸ்லிம் பெண்களின் புர்காவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் !!ஞானசார தேரர் அறிவிப்பு

· · 505 Views

முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் நாட்டில் ஒரே சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு மட்டும் நாட்டில் தனியான சட்டங்கள் இருக்க முடியாது என  கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

வாக்கு மூலம் : “ஆட்சி மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்தவர் ஞானசார தேரர் !! மகிந்தவுக்கு ஞானம் பிறந்தது

· · 615 Views

முஸ்லிம்களை எம்மிடம் இருந்து பிரிக்க சூழ்ச்சிசெய்தவர்களின் ஆட்சியில் முஸ்லிம்களுக்குஒருபோதும்விமோசனம் கிடைக்கப்போவதில்லைஎன முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷகுறிப்பிட்டார். மே தின நிகழ்வையொட்டி அதன் ஏற்பாடுகள்தொடர்பில் அவரது காரியாலயத்தில் இடம்பெற்றகலந்துரையாடலின் போது தற்போது நாட்டுமுஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள்தொடர்பில் கருத்து வெளியிடும் போதேஅவர்மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் .. நான் 10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தேன் எனது காலத்தில் காலத்தில் இனவாதம்எப்போதும்தலைதூக்கவில்லை.2012 ம் ஆண்டு சம்பிக்க ரணவக்கவே புர்கா மற்றும் ஹலால்பிரச்சினையை ஆரம்பித்துவைத்தார்.2014ம் ஆண்டு  தேர்தல் … Continue Reading →

Read More

மகிந்தவை, அவரின் சால்வையாலேயே தூக்கிலிட வேண்டும் !! என்ற sarath போன்செக்காவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

· · 460 Views

(க.கமலநாதன்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சால்வையினாலேயே அவரை தூக்கிலிட வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென கூட்டு எதிரணியின் மாகாண சபை உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் உதேனி அதுகோரல தெரிவித்தார். கூட்டு எதிரணியின் கோரிக்கைகளை செவிசாய்க்காமல் அதன் செயற்பாடுகளை போலியாக விமர்சிக்கின்ற அரசாங்கத்தில் வெறுமனே குருடர்களும் செவிடர்களும் மாத்திரமே நிறைந்துள்ளார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கூட்டு எதரிணின் பத்தரமுல்லை நெலும் மாவத்தை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் … Continue Reading →

Read More

சந்திரிக்கா குழப்படி : தனது பாதுகாப்புக்கு, மகிந்தவுக்கு போன்று 107 P.S.D. அதிகாரிகளைக் கோருகிறார் – 40 பேர் போதாது என்கிறார்

· · 273 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இணையாக தமக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்படுவது குறித்து ஒன்றிணைந்த எதிரணி சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் குறித்து தாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தியதாக அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து ஒரே விதமாகவே செயற்பட வேண்டும் என்பதை … Continue Reading →

Read More

சாலாவை இராணுவ களஞ்சியம் கல்பிட்டி,கண்டல்குளியில்..!! ஆரம்பக்கட்ட முயற்சிகளில் அரசாங்கம்

· · 1847 Views

சுல்தான் ஜஸீல் சில மாதங்களுக்கு முன்னர் சாலாவைப் பிரதேசத்தில் இராணுவத்தின் ஆயுதக் களஞ்சிய சாலையில்  பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்று அப்பிரதேசம் முழுமையாக அழிவுற்றதை நாம் அறியவும், பார்க்கவும் கிடைத்தது. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டன. அதில் ஒன்றுதான் அதிக வெப்பத்தினால் இவ்வனர்த்தம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. அப்படியாயின் கற்பிட்டிக்கு இக்களஞ்சியசாலை ஏன் மாற்றப்பட வேண்டும்?… அவ்வனர்த்தத்துக்குள்ளான பாரிய ஆயுத களஞ்சிய சாலையை அப்பிரதேசத்தில் இருந்து அகற்றி கண்டல்குளி விமானப்படைப் பயிற்சிப் பிரதேசம் அமைந்துள்ள பகுதியில் அமைப்பதற்கான ஆரம்பகட்ட … Continue Reading →

Read More

கல்பிட்டியில் 200 kg கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது..!! விஞ்ஞான முறையில் ஒளித்து வைத்திருந்தார்கள்

· · 1138 Views

ரஸீன் ரஸ்மின் கற்பிட்டிக்கு அண்மித்த கோளபத்து தீவுப் பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான, 200 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. இதேவேளை, இந்தப் பொதிகளை கொண்டுவந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கற்பிட்டி ஆனவாசல பிரதேசத்தைச் சேர்ந்த நால்வரையும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, புத்தளம் மாவட்ட நீதிமன்ற நீதவான், பொலிஸாருக்கு நேற்று (03) அனுமதியளித்துள்ளார். காட்டுப் பகுதியில், கேரள கஞ்சாப் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக, … Continue Reading →

Read More