மானமுள்ள T.N.A : சந்திரசிறியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்ச்சியை C.V. உற்பட அனைவரும் புறக்கணிப்பு !!

· · 134 Views

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. மும்மத தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் ஆளுநர் தனது இரண்டாவது பதவியேற்புக் காலத்தினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து, ஆளுநரும் அவரது பாரியாரும் முன்பள்ளி சிறார்களுக்கு பரிசில்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில், வடமாகாணப் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, யாழ்.மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் ரூபினி வரதலிங்கம், யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் … Continue Reading →

Read More

ஹக்கீம் மீதான யுத்தம்: தலிபான் பயங்கரவாத்திற்கான பாதையை ரவூப் ஹக்கீம் தயார் செய்கின்றார் !! ஹெல உறுமைய

· · 143 Views

பௌத்த குரு­மாரை பயங்­க­ர­வா­தி­க­ளாக உலகம் முன் சித்­த­ரித்து இலங்­கையில் இயங்கும் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தை நியா­யப்­ப­டுத்தி நாட்­டிற்குள் தலிபான் பயங்­க­ர­வா­தத்­திற்­கான பாதையை ரவூப் ஹக்கீம் தயார் செய்­கின்றார் என குற்றம் சாட்டும் அரசின் பங்­காளிக் கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­மய நீதி அமைச்­ச­ராக பதவி வகிக்கும் அமைச்சர் ஹக்­கீமின் நாட்­டுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை அரசால் நிறுத்த முடி­யாமல் உள்­ளமை வெட்­கப்­பட வேண்­டி­ய­தா­கு­மென்றும் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக ஜாதிக ஹெல உறு­ம­யவின் ஊடகச் செய­லா­ளரும் மேல் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான … Continue Reading →

Read More

மைய்யர் கிழங்கு உண்ணச்சொன்ன: உலகின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா இலங்கையில் பதவியேற்றார் (ஜூலை 20, 1960)…!! உலகின் முதல் பெண் பிரதமர்

· · 237 Views

இலங்கையின் பிரதமராக ஸ்ரீமாவோ ரத்வதே தியாஸ் பண்டாரநாயக்கா 1960-ஆம் ஆண்டு இதே நாளில் பதவியேற்றார். இவர்தான் உலகிலேயே முதல் பெண் பிரதமர் ஆவார். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக பணியாற்றியவர். தன்னுடைய கணவர் சாலமன் பண்டாரநாயக்கா கொல்லப்பட்ட பின் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். 1980-ல் ஜெயவர்த்தனாவின் ஆட்சியின்போது ஊழல் குற்றச்சாட்டுக்களால் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, குடியுரிமையும் பறிக்கப்பட்டது. அதன்பின் ஏழு வருடங்களுக்கு அரச பதவிகளை ஏற்கவும் தடை விதிக்கப்பட்டது. என்றாலும் அவரது மகள் சந்திரிக்கா ஐக்கிய தேசியக் … Continue Reading →

Read More

அளுத்கம: அரசாங்கத்தின் வாக்கு பலத்தில் வீழ்ச்சி !! அளுத்கம சம்பவங்களின் போது அரசின் செயல்பாடுகளினால் சிங்கள் மக்கள் பெரும் அதிருப்தி – CID Report

· · 374 Views

அரசாங்கத்தின் வாக்கு பலத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அளுத்கம, பேருவளை சம்பவங்களைத் தொடர்ந்து அரசாங்கத்தின் வாக்கு பலத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சம்பவங்களின் போது அரசாங்கத்தின் நடவடிக்கையினால் சிங்கள பௌத்த மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் என புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கள பௌத்த மக்கள் மட்டுமன்றி, முஸ்லிம் வாக்காளர்களும் அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த நிலைமைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தை விட்டு … Continue Reading →

Read More

சீசெல்ஸ் நாடு அழைக்கிறது: இலங்கையருக்கு ஏராளமான வேலைவாய்ப்புக்கள் – சீஷெல்ஸ் ஒரு பார்வை

· · 935 Views

துரிதமாக அபிவிருத்தியடைந்து வரும் சீஷெல்ஸ் நாட்டில் இலங்கையருக்கு அதிகளவு வேலைவாய்ப்புகள் கிடைக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காதிகார தெரிவித்தார். குறிப்பாக சீஷெல்ஸ் நாட்டில் சுற்றுலா துறை சார்ந்த வேலைவாய்ப்புகளே அதிகளவில் கிடைக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். இலங்கையிலுள்ள சீஷெல்ஸ் நாட்டின் தூதுவர் வெவன் வின்ஸ்லோ வில்லியம் பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காதிகாரவை பணியகத்தின் அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன் விவசாயத்துறையிலும் வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வது குறித்தும் இருவரும் பேச்சு நடத்தினர். மேலும் … Continue Reading →

Read More

அத்தேனிசம்: ஜனாதிபதியும் அமைச்சர்களும் அல் தக்கியாவில் சிக்கியுள்ளனர்!- ஞானசாரர் அதிரடி

· · 103 Views

நாட்டின் தலைவர் உட்பட அமைச்சர்கள் என அனைவரும் அல் தக்கியாவில் (தேவையில்லாக் கொலை, எதிலும் எங்கும் ஏமாற்றுதல்) சிக்கி கொண்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். அளுத்கம சம்பவத்தை அரசாங்கம் மேற்கொண்டதா அல்லது எதிர்க்கட்சி மேற்கொண்டதா என்பது எமக்கு தெரியாது. நாட்டின் தலைவர் உட்பட அமைச்சர்கள் அல் தக்கியாவிற்கு சிக்கியுள்ளனர். ஏமாற்றுதல், அசௌகரித்திற்கு உட்படுத்துவது போன்ற சம்பவங்கள் நாட்டில் சகல … Continue Reading →

Read More

அளுத்கம வன்முறைகளும் அரசாங்கத்தின் தோல்விகளும் !! – (கலாநிதி ஜெஹான் பெரேரா) முஸ்லிம்களே இலங்கைக்கான அச்சுறுத்தல் என்னும் BBS யின் தான்தோன்றித்தன பிரசாரத்தை அரசு கண்டு கொள்ளாது விட்டது !

· · 367 Views

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் மீது மீண்டும் மீண்டும் ஏற்படும் தாக்குதல்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலான விளைவுகள் பற்றி அரசாங்கம் விழிப்புணர்வு அடைந்துள்ளதாகத் தெரிகிறது. இனம் மற்றும் சமயங்கள் அடிப்படையில் வெறுப்புணர்வினை ஏற்படுத்தக்கூடிய கூட்டங்களை இனிமேல் அனுமதிக்கப் போவதில்லை எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர். இப்புதிய கொள்கை, வெளிப்பகட்டிற்காக இல்லாது உண்மையாக நடைமுறைப்படுத்தப்படுமானால் அது நிச்சயமாக வரவேற்கக் கூடியதாக இருக்கும். முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட வன்முறைகளில் முடிவுற்ற பொதுக்கூட்டத்தை பொதுபலசேனா நடத்தியமை தொடர்பில் அதற்கு அனுமதியளித்த பொலிஸார் பலிக்கடாவாகியுள்ளனர். … Continue Reading →

Read More

கார் கூந்தல் : கண்டியில் நடைப்பெற்ற கார் பந்தயப்போட்டியின் போது 300 பாலியல் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர் !! – S.L.F.P மாகாண சபை உறுப்பினர்

· · 493 Views

கண்டியில் நடைபெற்ற கார்ப்பந்தய போட்டியின் போது 300 விலை மாதர்கள் அழைத்து வரப்பட்டதாக மத்திய மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கண்டி நகரில் முக்கிய பிரமுகர்களின் புதல்வர்கள் சிலர் இரவு நேர கார் ஓட்டப் பந்தயம் நடத்திய தினத்தில், 300 விலை மாதர்கள், கண்டிக்கு அழைத்து வரப்பட்டு ஆடம்பர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாநாயக்க தேரர்களின் எதிர்ப்பையும் மீறி இந்த கார் ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டதாக அவர் மேலும் … Continue Reading →

Read More

அங்கொட அத்த தேரர்: குரானின் கருத்துக்கள் தவறானவை !! அதனாலேயே முஸ்லிம்கள் தவறான பாதையில் சென்றுள்ளனர் – பெளத்தத்தின் புனிதத்தை ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கிக்கொள்ள வேண்டும்

· · 119 Views

குர்ஆனின் தவறான கருத்துக்களினாலேயே இன்று முஸ்லிம்கள் தவறான பாதையில் சென்றுள்ளனர். இந்த பயங்கரமான குர் – ஆனை கைவிட்டுவிட்டு முஸ்லிம் இளைஞர்கள் எம்முடன் கைகோருங்கள் எனத் தெரிவிக்கும் கலகொட அத்தே ஞானசார  பெளத்தத்தின் புனிதத்தை ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கிக்கொள்ளுங்கள் எனவும் சுட்டிக்காட்டினார். பொதுபலசேனா பெளத்த அமைப்பினால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; இலங்கையில் மூவின மக்களுக்கும் … Continue Reading →

Read More

இலங்கைக்குப் பெருமை : சம்மித்ரி ரம்புக்வெல்ல ஐ.நா. உயர் பதவிக்கு தெரிவு – பெரும் பதவியில் இலங்கைப் பெண்

· · 282 Views

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான நிரந்தரவதிவிட பிரதிநிதியின் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளரான சம்மித்ரி ரம்புக்வெல்ல ஐ.நாவின் 5வது குழுவின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நாவின் 69 வது மாநாட்டின் கூட்டத்திற்கான 5வது குழுவின் உப தலைவராக அவர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சம்மித்ரி ரம்புக்வெல்ல, ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான 5ஆம் குழுவில் அங்கம் வகித்து வருகிறார். ஐ.நாவின் 69 வது மாநாட்டிற்கான நிர்வாக பணிகள், அபிவிருத்தி நடவடிக்கைகள், ஆலோசனை பணிகள் என்பவற்றை இந்த 5வது குழுவே … Continue Reading →

Read More

ஹரீன் பெர்னாண்டோ ஜனாதிபதியின் புதல்வரோடு விடிய விடிய குடிக்கிறார் !! தயாசித குற்றச்சாட்டு

· · 193 Views

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ ஜனாதிபதியின் புதல்வர்களுடன் இரவு நேர விடுதிகளில் விடிய விடிய மதுபானம் அருந்துவதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியில் நேற்றிரவு இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் தயாசிறிக்கும் ஹரின் பெர்ணான்டோவுக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் போது தயாசிறி இந்த தகவலை தவறுதலாக வெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தை விமர்சிக்கும் ஹரின் பெர்ணான்டோ, ஜனாதிபதியின் புதல்வர்களுடன் இரவு விடுதிகளுக்கு சென்று விடிய … Continue Reading →

Read More

பிராயச்சித்தம்: மூன்று முஸ்லிம்களின் உயிரைக் காப்பாற்றிய சிங்கள சகோதர்கள் !! அக்குரஸ்ஸ தீ

· · 248 Views

அக்குரஸ்ஸ கொடப்பிட்டிய முஸ்லிம் வீடொன்றில் ஏற்பட்ட தீயினுள் சிக்கிய 6 மாதமேயான குழந்தை ஒன்றையும் இன்னும் இரு சிறுவர்களையும் அருகில் வசித்த சிங்கள சகோதரர்கள் காப்பாற்றியுள்ளனர். இவர்களின் பெற்றோர் ஆடைகளைத் துவைப்பதற்காக நிலவளா கங்கைக்குச் சென்றுள்ளனர். இதன் போது பிள்ளைகளுக்குப் பால் கரைக்க எரித்த அடுப்பிலிருந்தே தீப்பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உடனே செயற்பட்ட சிங்கள சகோதரர்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் தீயை அனைத்துள்ளனர்.  

Read More