முஸ்லிம் சமூகத்திற்குள் என்ன நடந்து வருகிறது?. தவ்ஹித் ஜமாத் மற்றும் தப்லிக் ஜமாத் ஆகிய இரண்டு அடிப்படைவாத குழுக்கள் முஸ்லிம் சமூகத்துக்குள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி அவர்களை பணயமாக வைத்துள்ளனர் – ஜாதிக ஹெல உறுமய கடும் குற்றச்சாட்டு

· · 260 Views

அடிப்படைவாத முஸ்லிம் குழுக்களின் மோதல்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் இரண்டு முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு அடிப்படைவாத குழு காணி ஒன்றில் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிக்க திட்டமிட்டிருந்த போது, அங்கு சென்ற மற்றுமொரு அடிப்படைவாத குழு பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தியுள்ளது. … Continue Reading →

Read More

பேருவளையில் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு பயிற்சியாம் !! பீ.B.S கண்டுபிடிப்பு – அமைப்பின் மீது கை வைத்தால் நாடு கொந்தளிக்குமாம்

· · 179 Views

பேருவளையில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளின் முக்கிய களமாக பேருவளை காணப்படுகின்றது என தெரிவித்துள்ளது. மத வழிபாடுகளையும் மத நிகழ்வுகளையும் நடாத்தும் போர்வையில் இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. தற்பாதுகாப்பு நோக்கில் பொல்லுகளை எடுத்து தாக்குதல் நடத்திய சிங்கள இளைஞர்களை கைது செய்யும் உரிமை காவல்துறையினருக்கு கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளது. காவல்துறையினரோ, எதிர்க்கட்சிகளோ அல்லது அரசாங்கமோ … Continue Reading →

Read More

சதாம் வீதி பள்ளிவாசல்வரை வந்த ரௌடித்தனம்!! பன்றி இறைச்சியுடன் அச்சுறுத்தல்

· · 171 Views

கொழும்பு, கோட்டை சதாம் வீதியிலுள்ள பள்ளிவாசலுக்கு பன்றி இறைச்சியுடனான அச்சுறுத்தல் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது என அப்பள்ளிவாசல் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பள்ளிவாசலின் முகவரியிடப்பட்ட அச்சுறுத்தல் கடிதம் கடந்த சனிக்கிழமை கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த பள்ளிவாசலின் முகவரியிடப்பட்டு வந்த குறித்த கடிதத்தினை பள்ளிவாசலின் பேஷ் இமாம் திறந்துள்ளார்.  அச்சமயத்தில் குறித்த கடித உறைக்குள் பன்றி இறைச்சியுடனான கடிதமொன்று காணப்பட்டுள்ளது. அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள இந்த பள்ளிவாசின் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அச்சுறுத்தியோ குறித்த தாளில் எழுதப்பட்டுள்ளது என … Continue Reading →

Read More

பத்தரமுல்லை பெட்டிக்கடை பாத்திமாவையும் விட்டு வைக்காத இனவாதம் !! ஒரு ஏழை முஸ்லிமின் சோகக்கதை

· · 131 Views

  -அஸ்ரப் ஏ சமத்– இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள இனக்குரோதத்தின் எதிரொலி-  ஒர் அப்பாவி ஏழை முஸ்லிம் பெண்னைக்கூட விட்டு வைக்கவில்லையே. நேற்று முன்தினம் ஞயிறு(29)ஆம் திகதி இரவு 10.00 மணியலவில் தனது கடையை முடும்போது தனக்கு ஒருவர் பாரங்கல் ஒன்றை எனது கண்னத்தில் வீசி ஓடினார். நான் இரத்தம் சிந்த கதறி கீழே விழுந்தேன். என கடந்த 65 வருட காலமாக பத்தரமுல்லை சந்தியில் உள்ள வெற்றிலை விற்கும் பாத்திமா முறையிட்டார். அதன் பின்னர் உள்ளேயிருந்த … Continue Reading →

Read More

தர்கா நகர் வந்தார் ஜனாதிபதி: தனது கண்ணெதிரே நடந்த அழிவுகளை பார்வையிட்டார் ஜனாதிபதி !! – வேலையெல்லாம் சரியா நடக்கின்றதா என பார்க்க வந்தாராம்

· · 184 Views

  இனவாதிகளின் தாக்குதலினால் சேதமாக்கப்பட்ட தர்கா நகர் மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று  மாலை முதற் தடவையாக விஜயம் மேற்கொண்டார். இதன்போது குறித்த பிரதேசங்களில் ஏற்பட்ட தாக்குதல்களை ஜனாதிபதி பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் குறித்தி பிரதேசங்களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் மீள் கட்டுமாணப் பணிகனையும் ஜனாதிபதி பார்வையிட்டார். கடந்த ஜுன் 15ஆம் திகதி இரவு இனவாதிகளின் தாக்குதலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக தர்கா நகர் மற்றும் பேருவளை ஆகிய … Continue Reading →

Read More

அரசாங்க முஸ்லிம் புலனாய்வு அதிகாரிகளை நீக்க BBS முயற்சி !! – முஸ்லிம் அதிகாரிகள் அவர்களின் திட்டங்களை முடக்குகின்றனறாம்

· · 231 Views

அரச புலனாய்வு சேவையில் உள்ள அனைத்து முஸ்லிம் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு வலியுத்தியுள்ளது.இது தொடர்பாக பொது பல சேனாவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான திலான் விஜேசிங்க, இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரச்சார செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் கீழ் விசேட புலனாய்வுப் பிரிவின் ஊடாகவே பொது பல சேனாவின் நடவடிக்கைகளுக்கான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகின்றது.இது தொடர்பாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பரபரப்பான … Continue Reading →

Read More

அளுத்கம ; சுமுகமான நிலை .. என்றாலும் பயத்துடன் வாழும் முஸ்லிம்கள் !!

· · 119 Views

அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் தற்போது சுமுகமான நிலைமை காணப்படுகின்ற போதிலும் அங்குள்ள மக்கள் இன்னும் பயத்துடன் வாழ்கின்றனர். அங்குள்ள சிங்கள் மக்களின் ஆறு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மொத்த சேத விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை தம்மீது தாக்குதல் நடத்தியவர்கள் தமது பிரதேசத்தின் மக்கள் இல்லை எனவும், அவர்கள் குழுக்களாக வெளி இடங்களில் இருந்து வந்தவர்கள் என அம்மக்கள் தெரிவிக்கின்றனர். கலவரம் நடந்த போது முஸ்லிம் மக்கள் அதிகமாக இருக்கு … Continue Reading →

Read More

அடங்காத வெறி : ரத்மலான – கந்தவல வீதி பள்ளிவாசலின் கதவுக்கு தீ வைக்கப்பட்டது !! அசாத் சாலி விஜயம்

· · 106 Views

ரத்மலான -கந்தவல வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலின் கதவில் இன்று அதிகாலை தீ ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இது இடம்பெற்றுள்ளதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் பள்ளிவாசலில் இருந்தவர்கள் தீயை அணைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விஷேட பொலிஸ் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி சம்பவ இடத்திற்கு இன்று சென்றிருந்தார். மத்திய மாகாணச் சபை உறுப்பினர் … Continue Reading →

Read More

The great Bar Association: சஹீதான இரு முஸ்லிம் இளைஞர்களின் ஜனாசாக்களை தோண்ட நடவடிக்கை !! வாள் வெட்டு என்பது பொய் – நீதிமன்று போகும் BASL

· · 105 Views

சஹீத் அஹமட்: அளுத்கம பேருவளை போன்ற பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட வன்முறை காரணமாக கொல்லப்பட்ட இரு முஸ்லிம் வாலிபர்களின் மரண விசாரனை அறிக்கைகளின் மீது சந்தேகம் நிலவுவதால் குறித்த இரு முஸ்லிம் வாலிபர்களின் உடல்களையும் மீண்டும் தோண்டி எடுத்து மரணத்துக்கான காரணத்தை கண்டறிய மரண விசாரணை மீண்டும் நடாத்தப் படவேண்டும் என கோரி இலங்கை சட்டத் தரணிகள் சங்கம் The Bar Association of Sri Lanka (BASL)   நீதி மன்றத்தை கோரவுள்ளது . வல்பிட்டிய மஸ்ஜித்  பகுதில் … Continue Reading →

Read More

அளுத்கம வன்முறைகள்: முஸ்லிம்களே முஸ்லிம்களுக்குள் அடித்துக்கொண்டார்கள் !! பொலீஸ் விசாரித்தால் இப்படித்தான் முடிவு வரும் – முஸ்லிம் காங்கிரஸ்

· · 88 Views

அளுத்கம, பேருவளை, தர்கா நகர், வெலிப்பிட்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக விசாரணை செய்ய பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. இது தொடர்பாக விசாரணை செய்ய மூன்று சமூகங்களையும் உள்ளடக்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. முஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்களை விசாரணை செய்வதற்கு மூவினங்களையும் உள்ளடக்கிய ஜனாதிபதி ஆணைக்குழு அவசியம் எனத் தெரிவித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே … Continue Reading →

Read More

லங்காதீப ஹக்கீம் மீது கடும் தாக்கு !! சம்பிக்க இலங்கை முஸ்லிம்கள் பற்றி பாகிஸ்தான் தூதரிடம் முறைப்பாடு

· · 100 Views

-அஸ்ரப் ஏ சமத்- ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையாண லங்கா தீப சனிக்கிழமையே வருவதுண்டு. ஞயிறு லங்கா தீப  பத்திரிகையில் முதல் பக்க தலைப்புச் செய்தியில்  அமைச்சர் றவுப் ஹக்கீம் படத்துடன் அவர் முஸ்லீம்  காங்கிரஸ் தலைமையகமான  தாருஸலாத்தில் இருந்துகொண்டு அளுத்கம விடயம் சம்பந்தமாக நாளர்ந்தம் மேற்கத்தய நாடுகளின் தூதுவர்களையும்  சர்வதேச சமுகத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கைபற்றி அளுத்கம விடயத்தை பெரிது படுத்து சொல்லிவருவதாக செய்தி வெளியீட்டுள்ளது. சிகல உறுமைய கட்சியின் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க இந்த நாட்டில் உள்ள முஸ்லீம்கள் … Continue Reading →

Read More

அழுத்கம : களத்தில் ராணுவம் : பொலீசார் பார்த்து நிற்க அழிக்கப்பட்டதை ராணுவம் சரி செய்கிறது !!

· · 89 Views

-அஸ்ரப் ஏ சமத்-   அளுத்கம தர்காநகரில் அண்மையில் விசமிகளால் தீக்கிரையாக்கிய வீடுகள் ,கடைகள், தீபற்றிய சாம்பல்களையும் பொறுட்களையும் அகற்றி இலங்கை இரானுவம் 700 பேர் மீளநிர்மாணப்பணிகளில் ஈடுபடுவதைப் படத்தில் காணலாம்.        

Read More

ஹலால்,அளுத்கம எதிரொலி :சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – சுற்றுலா அபிவிருத்திச் சபை வட்டாரங்கள்

· · 138 Views

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்திச் சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட அமைதியான சூழலின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.  இதன் காரணமாக இலங்கைக்கு அதிகளவில் அந்நியச் செலாவணி கிடைத்தது.இந்நிலையில்  அடக்குமுறை தொடர்வது பற்றிய கண்டனங்கள் காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அவப் பெயர் ஏற்பட்டது. அன்று தொடக்கம் சுற்றுலாத்துறை வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கியது. இவ்வாறான நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான ஹலால் பிரச்சினையை … Continue Reading →

Read More

ஞானசார தேரராக மாறுவததை விட ” முஹம்மத் ராஜிதயாக ” மாற விரும்புகிறேன் !! Dr.ராஜித அதிரடி

· · 406 Views

மொஹமட் ராஜிதயாக மாறுவது அல் -கைதா, தலிபான் மற்றும் ஞானசார தேரராக மாறுவததை விட சிறந்தது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தர்கா நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அளுத்கமவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் என்னையும் மொஹமட் ராஜித என்று கூறி திட்டியுள்ளனர். ஞானசார, அல்-கைதா மற்றும் தலிபான்களை போல் மாறுவதை விட மொஹமட் ராஜிதவாக மாறுவது எனக்கு மிகவும் உகந்தது என்பதுடன் பெறுமதியானது. இந்த பேச்சுக்கள் குறித்து … Continue Reading →

Read More

இலங்கையில் உள்ள மாலைதீவு பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் கிடையாது!! G.L.பீரிஸ் – உள்ளூர் முஸ்லிம்களுக்குத்தான் அடி போலும்

· · 78 Views

இலங்கை வாழ் மாலைதீவு முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் கிடையாது என இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது, அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளினால் மாலைதீவு முஸ்லிம்கள் அச்சமடையத் தேவையில்லை என வெளிவிவகார அமைச்சு ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் சுமார் 9000 மாலைதீவு பிரஜைகள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெஹிவளை, கல்கிஸ்ஸ பகுதிகளில் அதிகளவான மாலைதீவு மக்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளினால் மாலைதீவு பிரஜைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் உள்நாட்டு ரீதியானது … Continue Reading →

Read More