சாத்தானிய இணைவு : இணைந்து செயல்பட பொது பல சேனா – விராது கூட்டணி இணக்கம் !!

· · 296 Views

-A.R.A.Fareel- இலங்­கை­யி­லி­ருந்து மியன்­மா­ருக்கு விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு அங்கு சென்­ற­டைந்­துள்ள பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் அசின் விராது தேரர்  தலை­மை­யி­லான பௌத்த அமைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடாத்தி ரோஹிங் யாவில் முஸ்­லிம்­க­ளுக்கும் பௌத்­தர்­க­ளுக்­கு­மி­டையில் நிலவும் முரண்­பா­டு­களின் உண்­மை­யான கள நிலைமை பற்றி ஆராய்ந்­தனர். மேலும் ரோஹிங்­யாவில் பௌத்­தர்­களின் உரி­மை­களைப் பாது­காத்துக் கொண்டு மேலும் பல­மான நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பா­கவும் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­யின்­போது கருத்­துகள் பரி­மா­றிக்­கொள்­ளப்­பட்­டன என பொது­ப­ல­சேனா வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கைக்கும் மியன்­மா­ருக்கும் … Continue Reading →

Read More

B.B.S. யின் முதலாவது வெற்றி : சட்டத்தரணி சிராஷ் நூர்டீனின் R.R.T. அமைப்பு கலைக்கப்படுகிறது – காழ்புணர்ச்சியே காரணம்

· · 1085 Views

-AAM. Anzir- முஸ்லிம்களிடையே சட்டத்துறை மற்றும் சமூக விவகாரங்களில் பிரபலம் பெற்று விளங்கும்  சிராஸ் நூர்தீனுக்கு எதிராக போலிப் பிரச்சாரத்தை சில தரப்புகள் முன்னெடுத்துள்ள நிலையில், இலங்கைத் தீவில் பௌத்தசிங்கள இனவாதிகளை சட்டத்தின் மூலம் கட்டிப்போடச் செய்வதில் ஓரளவு வெற்றி கண்டுள்ள  முஸ்லிம் சட்டத்தரணிகளை கொண்ட RRT எனப்படும் அமைப்பு கலைபடும் அபாயம் உருவாகியுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது. கடந்த 2 வருடங்களாக கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்களை இணைத்து ஓரணியில் செயற்படவும், பலம் பொருந்திய அமைப்பாக கட்டியெழுப்புவதிலும்  சிராஸ் … Continue Reading →

Read More

Cover story : நாட்டை துவம்சம் செய்த பிரபாகரனுக்கு சிலை வைத்தாலும் குற்றமில்லை,ஆனால்  நாட்டுக்கு ஒருஅச்சுருத்தலையும் ஏற்படுத்தாத முஸ்லிம்களை அரபு நாட்டுக்குஅனுப்பவேண்டுமென்று கூறிய ஞானசார தேரரை நம்பலாமா..?

· · 598 Views

எம்.எச்.எம்.இப்றாஹிம்   பொதுபல சேனாவுடன் பேசுங்கள் என்று ஒரு அமைச்சர் என்னிடம்வேண்டிக்கொண்டதன் காரணமாகவேநாங்கள் உலமா சபையின்உதவியுடன் பொதுபலசேனாவுடன்  பேச முயன்றோம் என்று கூறும்அசாத்சாலிஅவர்கள்,     அந்த அமைச்சர் யார் என கூறவில்லை.       கடந்த காலங்களில் பொதுபலசேனாவை பின்னாலிருந்துஇயக்குவது கோதாபாய ராஜபக்ஸ என்று ஒன்றுக்கு நூறுதடவைகூக்குரல் இட்டவர்தான் இந்த அசாத்சாலி அவர்கள், இன்று அதேஅசாத்சாலி அவர்கள் இந்த பொதுபலசேனாவை பின்னாலிருந்துஇயக்கும் கோதாபாயாவுடன் பேசுவதற்கு பதிலாக கூலிப்படையானபொதுபலசேனாவுடன் பேச முற்பட்டிருப்பது நகைப்புக்குரியவிடயமாகவே தெரிகின்றது.         இந்த பொதுபலசேனா தங்களுடைய முஸ்லிம் விரோதசெயல்பாடுகளை நிறுத்துவதற்கு ஒத்துக்கொள்கின்றது என்றுவைத்துக்கொள்வோம், அப்படியென்றால் கோதாபாயவோ, மஹிந்தவோ வேறொரு தீய சக்தியை உருவாக்க மாட்டார்கள் என்றுஎன்ன உத்தரவாதம் உள்ளது என்று அசாத்சாலி அவர்களினால்உறுதிப்படுத்த முடியுமா என்று கேட்க வேண்டியுள்ளது.         அதேநேரம் மஹிந்த அரசாங்கம்தான் இந்த பொதுபலசேனாவைபின்னாலிருந்து இயக்குகிறதென்ற வாதம் இவர்களுடையதற்போதைய நடவடிக்கைகள் மூலம் பொய்யாகி வருகின்றதுஎன்பதே உண்மையாகும்.         இந்த பொதுபலசேனா என்ற இயக்கம் முஸ்லிம்களை சீண்டியதுமுஸ்லிம்களுடைய கொள்கைகளையோ,நடவடிக்கைகளிலோசந்தேகப்பட்டு அல்ல என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்,அவர்களுக்கு முஸ்லிம்களைப்பற்றியோ, அவர்களின் மார்க்கத்தைப்பற்றியோ பூரண அறிவு இல்லாதன்காரணத்தினால்தான் அவர்கள் முஸ்லிம்களை சீண்டினார்கள்என்று யாராவது கூறுவாராகயிருந்தால் அவர்களை போன்றமுட்டாள்கள்  எவர்ய்ம் இருக்கமுடியாது.         பொதுபலசேனாவின் கடந்தகால நடவடிக்கைகள் தமிழ்சமூகத்தையோ,அல்லது சுயாட்சி கேட்டுப் போராடும் தமிழ்தலைவர்களையோ இலக்கு வைப்பதற்கு பதிலாக,  இந்த நாட்டுக்குஎந்தவித அச்சுருத்தலையிம் மேற்கொள்ளாத முஸ்லிம்களின் மீதுசென்றதன் காரணம் என்ன என்ற கேள்விக்கு ஆழமாக சிந்தித்தால்விடை கிடைத்துவிடும்.         நாட்டை துவம்சம் செய்த பிரபாகரனுக்கு சிலைவைத்தாலும்குற்றமில்லை என்று கூறும் ஞானசாரா அவர்கள்,நாட்டுக்கு ஒருஅச்சுருத்தலையும் ஏற்படுத்தாத முஸ்லிம்களை அரபு நாட்டுக்குஅனுப்பவேண்டுமென்று ஏன்? கூறுகின்றார் என்றாவது நாம்புரிந்துகொள்ள மறந்து விடுகின்றோம்.           இந்த பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பு மஹிந்தவின்அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒருகுழுவேயாகும்,இவர்கள் மூலம் முஸ்லிம்களை சீண்டி அதன் மூலம்மஹிந்த அரசாங்கத்தை வீழ்த்தப்போட்ட திட்டத்திற்குமுஸ்லிம்களும் பழியாக்கப்பட்டார்கள் என்பதே உண்மையாகும். அதே நேரம் மஹிந்தவும் அந்த சதிகளுக்கு பழியானார் என்பதும்தற்போது நடப்பவைகளை பார்க்கும் போது தெளிவாகி வருகின்றது.           அதேபோல இந்த இனவாத குழுவுக்கு பூரணபாதுகாப்புக்களைவழங்குவதே இந்த நல்லரசாங்கம்தான் என்ற விடயமும் இப்போதுஅவர்களின் நடவடிக்கை மூலம் வெளியாகி வருகின்றது.           இப்போது விடயத்துக்கு வருவோம், இன்று ஞானசாரா அவர்கள் முஸ்லிம்களுடன் ஆரஅமர இருந்துபேசுவதற்கு முன்வருவதன் காரணம் என்ன?   … Continue Reading →

Read More

இம்சை அரசர்கள்: பொது சேனாவுடன் ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாய் முடிந்ததாம் !! கடையை எரித்தவர்கள், பள்ளியை உடைத்தவர்களுக்கு எல்லாம் பொது மன்னிப்பா..?

· · 675 Views

  “2069 இல் முஸ்லிம்கள் இந்த நாட்டில் இரண்டாவது பெரும்பான்மை சமூகமாய் மாறி எங்களை ஓவர் டேக் செய்துவிடுவார்கள் , முஸ்லிம் கடைகளில் கருத்தடை மாத்திரை சாப்பாட்டில் கலக்கப்படுகிறது”         இப்படியான திருவசனங்கள் அடங்கிய ஸ்கிரீன் சாட்டுகள் கிடைக்கப் பெற்றேன்.இதெல்லாம் பார்த்ததும் எனக்குக் கவலையாய் இருந்தது.இந்தக் குற்றச்சாட்டுக்களைக் கண்டு அல்ல..இவர்களின் கற்பனைப் பஞ்சத்தை நினைத்து..         தமிழ்ப் பாட்டுக்களையும் படங்களையும் அப்படியே காப்பி பண்ணி வாந்தி எடுக்கும் சிங்கள … Continue Reading →

Read More

News break : பொது பல சேனா அதிகாரிகளுக்கு “பள்ளிவாசல்கள், மதரசாக்களை சென்று பார்வையிட அனுமதி வழங்கியது ஜம்மியதுல் உலமா சபை..!!

· · 658 Views

ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- முஸ்லிம் தரப்புக்கும், பொதுபல சேனாக்கும் நடைபெற்றுவரும் பேச்சுக்களை பகிரங்கப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருதரப்புக்கும் இடையிலான 5 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை  நவம்பர் 2 ஆம் திகதி, வியாழக்கிழமை நடைபெற்ற போதே, முஸ்லிம் தரப்பினர் இத்தீர்மானத்திற்கு வந்துள்ளனர். மிகவிரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகவுள்ளது. அதேவேளை 5 ஆவது சுற்றுப்பேச்சுவார்த்தையில் முஸ்லிம் பாடசாலைகள், மதரஸாக்கள் குறித்து பொதுபல சேனா கேட்ட கேள்விகளுக்கு முஸ்லிம்கள் தரப்பில் உரிய பதில் வழங்கப்பட்டுள்ளது. ஜம்மியத்துல் உலமா சபை சார்பில், பேச்சில் பங்கேற்ற மௌலவி … Continue Reading →

Read More

இலங்கை முஸ்லிம்கள் மிகவும் நல்லவர்கள்..!! கொண்டாடுகிறது பொது பல சேனா அமைப்பு

· · 923 Views

(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்) புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டாலோ அல்லது திருத்தங்கள் மேற்கொண்டாலோ ஐக்கிய இலங்கையே முஸ்லிம்களின் நிலைப்பாடு என முஸ்லிம் தரப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளதுடன், இதுதொடர்பில் பகிரங்க அறிக்கையொன்றை வெளியிடவும் தீர்மானித்துள்ளது. பொதுபல சேனா முஸ்லிம் தரப்பு 5 ஆவது சுற்றுப் பேச்சில் (நவம்பர் 2 ஆம் திகதி, வியாழக்கிழமை இரவு) முக்கிய கலந்துரையாடலாக இரு அமைந்திருந்தது. ஐக்கிய இலங்கைக்குள், ஒற்றையாட்சி முறையே என முஸ்லிம்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக இதன்போது முஸ்லிம் தரப்பினர் சுட்டிக்காட்டினர். இதன்போது குறிக்கிட்ட பொதுபல சேனா, … Continue Reading →

Read More

விடாதீங்க பாய் : புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்..!!ஞானசார தேரோ களத்தில்

· · 362 Views

நாட்டில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என, பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.   புதிய அரசியலமைப்பு குறித்து கலந்துரையாட வேண்டிய அவசியம் கூட இல்லை என, அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.       தற்போது நாட்டு மக்களுக்கு உள்ளது அரசியலமைப்பு குறித்த பிரச்சினை அல்ல, வாழ்வது குறித்த பிரச்சினையே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

டொன் பிரசாத்தை விடுவிக்கும் படி முஜிபுர் ரஹ்மான் எம்.பி. யிடம் மன்றாடிய டொன்பிரசாத்தின் மனைவி !! சங்கடத்தில் முஸ்லிம் சட்டத்தரணிகள்

· · 912 Views

பௌத்த சிங்கள இனவாதிகளான ஞானசாராவுக்கும், டன் பிரசாத்திற்கும்  பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை முஸ்லிம்களின் சில தரப்புகளில் இருந்து எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து முஸ்லிம் சட்டத்தரணிகள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். பொதுபல சேனாவுக்கும், முஸ்லிம் தரப்புக்கும் இடையே தற்போது பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. ஞானசாரர் நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில், அவருக்கு  மன்னிப்பு வழங்கும் முயற்சியாகவே  இந்தப் பேச்சில் ஞானசாரர் பங்கேற்பதாக சில தரப்பினரால் சொல்லப்பட்டு வருகிறது. முஸ்லிம் சட்டத்தரணிகள் தமது தியாகம் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு … Continue Reading →

Read More

சட்டம் ஒரு இருட்டறை: ஞானசாரருக்கு எதிரான அமைச்சர் ரிஷாதின் பைலை ஒழித்து வைத்த நீதிமன்ற அதிகாரிகள் !!

· · 552 Views

500 மில்லியன் ரூபா  நஷ்டஈடு கோரி ஞானசார தேரர் மீது அமைச்சர்ரிஷாத் தொடுத்திருந்த வழக்கை ஒரு வருடத்திற்குப் பின்னர் கடந்தசெவ்வாய்க்கிழமை விசாரணைக்கு அழைத்திருந்தார்கள்.       இந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் சீ.டிஆகியவற்றை ஏற்கனவே அமைச்சர் தரப்பு நீதிமன்றத்தில்சமர்ப்பித்திருந்த நிலையில்.         இது தொடர்பில் அமைச்சர் ரிஷாத் அவரது சட்டத்தரணிகளுடன்கலந்தாலோசித்து விட்டு குறித்த தினம் நீதிமன்றத்துக்குசென்றுள்ள போது, அந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் தரப்புசமர்ப்பித்திருந்த ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.         மேலும் ஏற்கனவே இந்த வழக்கு ஒரு நீதிமன்றத்துக்குமாற்றப்பட்டிருந்த அதேவேளை ஞானசார தேரருக்குஅழைப்பாணை அனுப்பாமல், மனுதாரர் ஆகிய அமைச்சர் ரிஷாத்நீதிமன்றத்துக்கு வரவில்லை எனக் காரணம் காட்டி வழக்கைமற்றுமொரு நீதிமன்றத்துக்கு மாற்றியுள்ளதுடன் வழக்கு பதிவுசெய்த அமைச்சர் தரப்பிற்கு அறிவிக்கப்படாமல் அந்த வழக்குநிலுவையில் (Pending) போடப்பட்டிருந்தது.         தற்போது வழக்கு வந்த நீதிமன்றத்துக்கு அமைச்சர் சென்ற வேளைஆவணங்கள் தொலைந்து விட்டன என்று கூறிய போது, அமைச்சரின் சட்டத்தரணிகள் அங்கிருந்த அதிகாரிகளிடம், குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் முறைப்பாடு செய்வோம் எனக்கூறிய பின்பே, ஆவணங்களை தேடி எடுக்கப்பட்டுள்ளது.         இது தொடர்பில் கண்டியில் நேற்று நடைபெற்ற அமர்வு ஒன்றில்கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் ரிஷாத்         அமைச்சரான எனக்கே இந்த நிலை என்றால் விபரமறியாத பாமரமக்களின் நிலை என்னவாகும்? என குறித்த சம்பவத்தை கூறிகேள்வி எழுப்பியுள்ளார்.         மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ரிஷாத் “ஞானசார தேரர் விடயத்தில் தற்போது சமரசத்துக்கு போகுமாறுஎன்னிடம் அங்கிருந்த அவரது சகாக்கள் வேண்டுகோள் விடுத்தனர். எனினும், வில்பத்துவில் வேற்றுமொழி  பேசும் மக்களைகுடியேற்றினேன், வில்பத்துக் காட்டை அழித்தேன் என்றவிடயங்களை தான் கூறியது தவறென பகிரங்கமாக மன்னிப்புக்கேட்டால் இந்த விடயத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்கலாம் என நான்உறுதியாகக் கூறியிருக்கிறேன்” என குறிப்பிட்டார்.

Read More

Special flash news : “ஞானசாரர் இனிமேல் இஸ்லாம் பற்றியும் , முஸ்லிம்கள் பற்றியும் விமர்சிக்க மாட்டார் !! முஸ்லிம்களும் B.B.S.க்கு எதிரான பிரச்சாரங்களை கைவிட வேண்டுகிறார்

· · 9957 Views

-AAM Anzir- பொதுபல சேனாக்கும் முஸ்லிம் தரப்புக்கும் இடையிலான 3 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று  புதன்கிமை, 18 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றுள்ளது. உலமா சபை பிரதிநிதிகள், முஸ்லிம் சிவில் பிரதிநிதிகள் மற்றும் பாயிஸ் முஸ்தபா உள்ளிட்டோர் பங்கேற்ற இப்பேச்சுவார்த்தையில் முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளன. இஸ்லாத்தை மோசமாகவும், முஸ்லிம்களை கேவலமாகவும் விமர்சித்துவந்த ஞானசாரர் அந்நிலையிலிருந்து தற்போது பின்வாங்கியுள்ளதை அவரது பேச்சுக்கள் மற்றும் செயற்பாட்டின் மூலம் உணரக்கிடைத்ததாக இச்சந்திப்பில் பங்கேற்றவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் தமது தரப்பிலிருந்து, … Continue Reading →

Read More

முஸ்லிம் தரப்பு vs BBS Dialogs : “முஸ்­லிம்கள் தொடர்­பா­கவும் இஸ்லாம் தொடர்­பா­கவும் பொது பல சேனா அமைப்பு கொண்­டுள்ள சந்­தே­கங்­களை நிவர்த்­திக்கும் நோக்­கி­லேயே மூன்றாவது பேச்சு வார்த்தை !!

· · 442 Views

ஏ.ஆர்.ஏ.பரீல் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர்  கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கும் முஸ்லிம் சிவில் தலை­மை­க­ளுக்­கு­மி­டையில் இது­வரை இரு கட்டப் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றுள்­ள­தா­கவும் மூன்றாம் கட்டப் பேச்­சு­வார்த்தை விரைவில் நடை­பெ­ற­வுள்­ள­தா­கவும் சம்­பந்­தப்­பட்ட தரப்­புகள் தெரி­விக்­கின்­றன.       இப் பேச்­சு­வார்த்­தை­யா­னது முஸ்­லிம்கள் தொடர்­பா­கவும் இஸ்லாம் தொடர்­பா­கவும் பொது பல சேனா அமைப்பு கொண்­டுள்ள சந்­தே­கங்­களை நிவர்த்­திக்கும் நோக்­கி­லேயே இடம்­பெ­று­வ­தா­கவும் முஸ்­லிம்­களால் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக தொடுக்­கப்­பட்­டுள்ள வழக்­கு­களை வாபஸ் பெறு­வதை அடிப்­ப­டை­யாகக் கொண்­டவை … Continue Reading →

Read More

ஞானம் வந்தது சாரருக்கு : பொதுபல சேனா VS முஸ்லிம் தரப்பு 3 வது சுற்று பேச்சு வார்த்தை அடுத்த வாரம்..!!

· · 640 Views

(AAM. Anzir) பொதுபல சேனாவுக்கும், முஸ்லிம் தரப்புக்கும் இடையேயான 3 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை அடுத்தவாரம் நடைபெறவுள்ளது. பேச்சுக்களில் பங்கேற்ப இருப்போர் இதனை Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினர். ஏற்கனவே 2 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அடுத்தவாரம் 3 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது. வழமைபோன்றே இதிலும்  முஸ்லிம் சமூகத்தின் சிவில், சமூக, சமய சட்டத்துறை சார்ந்தவர்கள் பங்கேற்பார்கள். குறித்தொதுக்கப்பட்ட காலம், இடம், நேரம் என்றடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

Read More

“ஞானசாரரை நான் சந்திக்க முடியாது..!! ஞானசார தேரருடனானவழக்குகள் விடயத்தில் அவர் நீதிமன்றத்திலே தனது பிழையைஏற்றுக் கொண்டு இனிமேல் இதில் ஈடுபட மாட்டேன் எனஉறுதியளிக்க வேண்டும்” ஜம்மியத்துல் உலமாவுக்கு சட்டத்தரணி சிராஷ் நூர்டீன் போட்ட கண்டிஷன்

· · 1889 Views

ஞானசார தேரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்குமாறுஜம்இய்யத்துல் உலமாவோ அதன் தலைவரோ யாரிடமும் வேண்டிக்கொள்ளவில்லை. நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் ‘வழக்குகளை வாபஸ்பெற்று ஞானசார தேரரை காப்பாற்ற முயற்சி’ என்ற செய்தி பரவிவருகின்றுது. இதில் ஞானசார தேரருக்கு எதிரான வழக்குகளைவாபஸ் வாங்குமாறு ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர்சட்டத்தரணி சிராஸ் நூர்தீனிடம் வேண்டியதாக கூறப்பட்டுள்ளசெய்தி உண்மைக்கு புறம்பானதாகும். உண்மைக்கு புறம்பான இவ்வாறான செய்திகளைஎழுதுகின்றவர்களும் பரப்புபவர்களும் அல்லாஹ்வை பயந்துகொள்ளவேண்டும். மேற்படி விடயம் சம்பந்தமாக பின்வரும் விடயத்தை அகில இகிலஇலங்கை ஜம்இய்யத்தல் உலமா அனைவருக்கும் அறியத்தரவிரும்புகின்றது. இலங்கையில் சகவாழ்வை கட்டியெழுப்ப அகில இலங்கைஜம்இய்யத்துல் உலமா எடுத்துள்ள முயற்சிகள் நாம் அறிந்ததே. இதில் 2012 ஆம் ஆண்டு ஜம்இய்யா வெளியிட்ட சகவாழ்வு பிரகடனம்குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த வகையில் இஸ்லாம் பற்றியதெளிவு பிற மதத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும், இஸ்லாம்பற்றிய தப்பபிப்பிராயங்கள் களையப்பட வேண்டும், சத்தியம்அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயேஜம்இய்யா செயற்படுகின்றது. அதற்கான முயற்சிகளாகவேஜம்இய்யாவின் சமாஜ சங்வாத புத்தக வெளியீடும் பிற மதத்தலைவர்களுடனான சந்திப்புகளும் காணப்படுகின்றன. ஞானசார தேரரோடு பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என்றுஜம்இய்யாவோ ஜம்இய்யாவின் தலைவரோ யாரிடமும் கேட்டுக்கொள்ளவில்லை. மாறாக சிலர் குறித்த தேரர் இஸ்லாம் பற்றிய சிலசந்தேகங்கள் பற்றி கலந்துரையாடி முஸ்லிம்களுடனான தனதுபிரச்சினைக்கு தீர்வுகாண விரும்புவதாகவும் அதற்காக அவருடன்சந்திப்பொன்று நடாத்தப்பட இருப்பதாகவும் கூறி அதில்உலமாக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஜம்இய்யாவிடம்வேண்டிக்கொண்டனர். இதன்போது குறித்த இவ்விடயத்தில் அனுபமுள்ள சட்டத்தரணிசிராஸ் நூர்தீன் அவர்களையும் பிரிதொரு சட்டத்தரணியையும்ஜம்இய்யாவின் தலைவர் தொடர்பு கொண்டு இவ்விடயத்தில்எவ்வாறு நடந்து கொள்ளலாம் என ஆலோசனை பெற்றார். அதன்போது சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள் குறித்த தேரரைசந்திப்பதில் பிரச்சினையில்லை என்றும் தான் இச்சந்திப்பில்கலந்துக் கொள்ள போவதில்லை என்றும் ஞானசார தேரருடனானவழக்குகள் விடயத்தில் அவர் நீதிமன்றத்திலே தனது பிழையைஏற்றுக் கொண்டு இனிமேல் இதில் ஈடுபட மாட்டேன் எனஉறுதியளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பின்னர் குறித்தசந்திப்பில் கலந்துகொள்ள அஷ்-ஷைக் பாழில் பாரூக்அனுப்பப்பட்டார். அடுத்தநாள் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட அஷ்-ஷைக்பாழில் பாரூக் அவர்கள் குறித்த தேரர் மீதான வழக்குகள் பற்றிஅங்கு கலந்துரையாடவில்லை என்பதாகவும் மாறாக அவரிடம்காணப்பட்ட இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயங்களுக்கு பதில்வழங்கும் வகையியே சந்திப்பு நடைபெற்றதாகவும்உறுதிப்படுத்தினார். இவ்விடயம் ஜம்இய்யாவின் கடந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில்கலந்துரையாடப்பட்ட போது, குறித்த தேரர் இஸ்லாத்திற்கும்முஸ்லிம்களுக்கும் எதிராக தான் முன்வைத்த கருத்துகளுக்குமன்னிப்புக் கேட்டு, உண்மையில் இஸ்லாம் பற்றிய அவரதுதப்பபிப்பிராயங்களுக்கு தெளிவு பெற விரும்பினால் அவருடன்உரையாடலை தொடரலாம் என்றும் அவருக்கு எதிராகபதியப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தமாக குறித்த சட்டத்தரணிகளேமுடிவெடுக்க வேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டது. எனவே சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் குறித்த செய்திஉண்மைக்கு புறம்பானதாகும். பிழையான தகவல்களைப் பரப்பிமக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துவதை தவிர்ந்துகொள்ளுமாறு சகலரையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது. வஸ்ஸலாம். ஊடகப் பிரிவு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Read More

40 க்கும் அதிகமான நிறுவனங்கள் வழங்கப்பட்டுள்ள ரிஷாதையும், 75 நிறுவனங்கள் வழங்கப்பட்டுள்ள கபீர் ஹாசீமையும் சந்திக்க போகும் ஞானசாரர்..!! வேறென்ன அதிகாரம் கேட்கிறீர்கள் எனக் கேட்கப் போகின்றாராம் ( Video )

· · 936 Views

முஸ்லிம் அமைச்சர்கள் தேவை இல்லை!!   இது சிங்கள நாடு!   சிங்களவர்களே ஆள வேண்டும்!       மீண்டும் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் பொதுபலசேனா!     முஸ்லிம் அமைச்சர்கள் தேவை இல்லை!இது சிங்கள நாடு!சிங்களவர்களே ஆள வேண்டும்!மீண்டும் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் பொதுபலசேனா!இது சிங்கள பெளத்த நாடு இதை சிங்கள பெளத்தர்களே ஆட்சி செய்ய வேண்டும் என ஞானசார தேரர் குறிப்பிட்டார்.இன்று நன்பகல் பொது பல சேனாவின் ஊடக மாநாட்டில் … Continue Reading →

Read More

ரோஹியாங்கி முஸ்லிம்களை வில்பத்துவில் குடியேற்ற திட்டம்..!!

· · 338 Views

ரோஹிங்கியா அகதிகளை வில்பத்துவில் குடியேற்றும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் திட்டம் ஒரு போதும் நடைமுறை சாத்தியமாகாது என நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திதிப்பில் கருத்து வெளியிட்ட அவர், சிவாஜிலிங்கம் சமஷ்டி முறை ஏற்படுத்தப்பட்டு வட மாகாண சபை தனித்து இயங்குகின்றது என்ற எண்ணத்தில் செயற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய … Continue Reading →

Read More