NO horn : இன்று முதல் அதீத சத்தம் போடும் வாகனங்கள் முற்றுகை..!! இஷ்டப்படி Horn பூட்டத் தடை

· · 294 Views

அதிக சப்தம் வெளிப்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்த கூட்டு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை இன்று முதல் முன்னெடுக்கவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. சூழல் மாசடைவதனைத் தடுத்தல், மக்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்களைக்  குறைத்தல் போன்றன இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும். கொழும்பு செபெஸ்டியன் மாவத்தையிலும் குணசிங்கபுர பஸ் தரிப்பு நிலையத்திலும் இன்று காலை இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் “வாகனங்களின் ஹோர்ன்” சப்தம் வெளிப்படுத்துவதற்கான வரையறைகள் தனித்தனியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. … Continue Reading →

Read More

Hornet bike சைலன்சருக்கு ஆபத்து..? நாளை முதல் பெரும் சத்தம் போடும் சைலன்சர்கள் அகற்றம் !!

· · 590 Views

அதிக ஒலியை எழுப்பக் கூடிய வாகன குழல்களால் ஏற்படுத்தப்படும் சுற்றாடல் மாசு மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நாளை தொடக்கம் அவ்வாறான வாகன ஊது குழல்களை அகற்றவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, காவல்துறை, மோட்டார் வாகன திணைக்களம், கைத்தொழில் தொழினுட்ப நிறுவனம் ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி தெரிவித்தார்.

Read More

டிசம்பர் 10 ம் திகதி முதல் கொழும்பில் பார்க்கிங் மீட்டர்..!! கடுமையான சட்ட நடவடிக்கைகள் இருக்கும்

· · 519 Views

கொழும்பு நகரில் பார்க் மீட்டர் பொருத்தும் திட்டத்தை செயற்படுத்துவதற்கு கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முசாமில் தெரிவித்துள்ளார். போக்குவரத்து முகாமை மற்றும் தரிப்பதற்கான கட்டணங்களை அறவிடுதல் தொடர்பாக ‘பார்க்கிங்’ மீட்டர் இயந்திரங்களை பொருத்தும் திட்டம் வரும் 10ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியளாலர் சந்திப்பில் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முசாமில் இதனை தெரிவித்தார்.

Read More

kawasaki versys 650 : வரப் போகிறது அசத்தல் பைக்..!! Just 12,50,000/=

· · 391 Views

கவாஸாகி நிறுவனம், 5 லட்ச ரூபாய்க்கு மேல் விலையுள்ள பைக்குகளின் மார்க்கெட்டில், அதிகரித்து வரும் போட்டி காரணமாக, வெள்ளை, கறுப்பு, பச்சை நிறங்களில், வெர்சிஸ் 650 என்ற அட்வென்ச்சர் பைக்கை, டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பைக்கின் தோற்றம், வெர்சிஸ் 1000 போல இருந்தாலும், உயர்த்தப்பட்ட ஹேண்டில்பார்கள், அட்ஜஸ்டபிள் விண்ட் ஸ்கிரின் மற்றும் லீவர்கள், சொகுசான இருக்கைகள், இந்திய சாலைகளுக்கு ஏற்ற கிரவுண்ட் கிளியரன்ஸ் என அன்றாடம் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் எனத் தகவல்கள் வருகின்றன. … Continue Reading →

Read More

பட்ஜெட்டுக்கு முன்னர் வாகனத்திற்காக L.C. திறந்தவர்கள் பழைய விலையில் இறக்குமதி செய்யலாம் – அரசாங்கம்

· · 232 Views

2016ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட முன்னர் வாகன இறக்குமதிக்காக கடன்சான்றுப் பத்திரத்தை (LC) பெற்றுக்ெகாண்டவர்கள் வாகனங்களை பழைய விலையில் இறக்குமதி செய்ய முடியும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. எந்தவொரு மாற்றத்தையும் எதிர்பார்க்காது வாகன இறக்குமதிக்காக கடன்சான்றுப் பத்திரத்தை சமர்ப்பித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இத்தீர்மானத்தை எடுத்திருப்பதாகவும், இது தொடர்பாக கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், சொந்தப் பாவனைக்காக வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக கடன்சான்றுப் பத்திரத்தை … Continue Reading →

Read More