Breaking news : The “Gentlemen” politics : “ராஜினாமா செய்ய முடியாது..!! நவவி எம்.பி. ரிஷாத்துக்கு அறிவிப்பு – அதிர்ச்சியில் அமைச்சர்

· · 6287 Views

கொழும்பில் இருந்து : எஸ்.எம்.அரூஸ்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி. யாக இருக்கின்ற எம்.எச்.எம்.நவவி, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்ய மறுத்து விட்டதாக நமபகரமாக தெரிய வருகிறது. ஒரு வருடத்திற்கு மாதிதிரம் மட்டுபடுத்தபட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நவவிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் றிஷாத் பதூர்தீன் வழங்கினார்.

%e0%ae%a8%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d

ஒரு வருடத்தின் பின்னர் அம்பாறை மாவட்டத்தின் எம்.எம்.ஜமீளுக்கு அப்பதவியை வழங்குவதாகவும் அமைச்சர் றிஷாத் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் நாடாளுமன்றக் கதிரையில்; அமர்ந்துள்ள புத்தளம் நவவி, தனது பதவியை ராஜினாமாச் செய்வதற்கு உடன்பட மறுத்துள்ளார்.

புத்தளத்தின் பள்ளிவாசல் தலைவர்களின் மத்தியில் தனக்கு ஒரு வருடத்திற்கு மாத்திரம் எம்.பி, பதவி தந்தால் போதுமென்று அமைச்சர் றிஷாத் பதீயுத்தீனிடம் நவவி வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே முதலில் ஜனாப். நவவி பாராளுமன்றிற்கு நியமனமானார்.

தேசியப்பட்டியல் எம்.பி.பதவியை ராஜினாமாச் செய்யுமாறு அமைச்சர் றிஷாத் பதியுதீனால் கோரப்பட்ட போதிலும் அதைப் பற்றி பெரிதாக அலட்டிகொள்ளாத நவவி, தனது ஆதரவளர்களைக் கொண்ட குழுவொன்றை அமைச்சர் ரிஷாதிடம் அனுப்பி தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு ஆதரவளிக்குமாறும், எக்காரணம் கொண்டும் புத்தளத்தின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ராஜினாமாச் செய்ய தாயாரில்லை என்றும் அமைச்சர் றிஷாதுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

புத்தளம் நவவியின் இந்த எதிர்ப்பாரா தீர்மானம் , அமைச்சர் ரிஷாத்துக்கு கிலேசத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் நவவிக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியா நிலையில் அவர் உள்ளார்.

புத்தளத்து அரசியலின் மேர்வின் சிலவாவாக பார்க்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் பாயிஸ் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துக் கொண்டதாலும் எதிர்க்காலத்தில் தொகுதிவாரி தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாலும் நவவியின் ஆதரவு தேவைப்படும் என்பதனைக் கவனத்தில் கொண்டு நவவி எம்பி யுடன் மோதல் போக்கொன்றை தவிர்துக்கொண்டுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

இந்த  செய்தி பற்றி விபரம் தெரிந்துக் கொள்ள புத்தளம் டுடே அமைச்சர் றிஷாத்துடன் தொடர்ப்புக் கொண்ட போதும் , அவரது தனிப்பட்ட தொலைபேசி இயங்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published.