Breaking news : புத்தளம் நகரின் கைவிடப்பட்ட கட்டடத்தில் தீ விபத்து !! பிராந்திய போலீஸ் மா அதிபர், முப்படைகளும் இணைந்து தீயை அணைத்தனர்

· · 1550 Views

குப்பைக்கு வைக்கப்பட்ட  தீயினால் புத்தளம் நகர மத்தியில் அமைந்துள்ள அரசுக்கு  சொந்தமான கைவிடப்பட்ட கட்டடம் ஒன்று சற்று முன்னர் தீப்பிடித்து எரிந்தது.

 

Image may contain: one or more people, people standing, night and outdoor

 

 

மிகப்பழைமையான  இந்தக் கட்டடத்தில் ஒரு சில யாசகர்கள் இரவு நேரங்களில்  தங்கி இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

குப்பைக்கு வைக்கப்பட்ட தீயே  கட்டத்துக்கும் பரவி இருக்கலாம் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

 

 

 

இந்த சம்பவத்தை அடுத்து புத்தளம் பிராந்திய சிரேஷ்ட போலீஸ் மா அதிபர் தலைமையில் புத்தளம் போலீசார், விஷேட அதிரடிப்படையினர், ராணுவம் மற்றும் கடற்ப்படையினர் இணைந்து பொது மக்களின் உதவியோடு தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

 

 

 

 

இந்த சம்பவத்தை அடுத்து புத்தளம் குருநாகல் வீதி  பேமென்ட்  வர்த்தகப்பகுதி அல்லோகலப்ப்ட்டதுடன் பெருந்திரளான மக்களும் குழுமி இருந்தனர்

 

 

புத்தளம் போக்குவரர்த்து போலீசாரும் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து வீதிப் போக்குவரத்தை  ஒழுங்கு படுத்தியதை அவதானிக்க முடிந்ததது.

 

 

 

இதே வேளை சம்பவ இடத்திற்கு உடனடியாக விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி , நிலைமைகள் பற்றி  சிரேஷ்ட போலீஸ் மா அதிபரிடம் வினவிக் கொண்டிருந்தார்.

Image may contain: night and sky

 

தீயை அணைப்பதற்காக  இலங்கை ராணுவம், புத்தளம் நகர சபை, மற்றும் கடற்படையினரின் தீயணைப்பு வாகனங்கள் மிக விரைவான செயல்பாடுகளில் ஈடு பட்டு கொழுந்து விட்டு எறிந்த தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

 

 

முப்படையினருக்கும் ,  போலீசாருக்கும் , புத்தளம் நகர சபையின் அதிகாரிகளுக்கும் மற்றும் நகர சபையின் பௌசர்  வண்டி ஓட்டுனர் பசீருக்கும், பொது மக்களுக்கும் ஒரு சல்யூட் .

 

( படங்கள் பின்னர் வெளி வரும் )

 

 

One comment

  1. இரண்டு வரிகளில் முடிக்க வேண்டியதை பெரிதாக்கியுள்ளீர்கள்
    திரும்ப திரும்ப ஒரு விடயத்தையே எழுத்தின் அமைப்பை மாற்றி நேரத்தை வீணடித்துவிட்டீர்கள்.

Leave a Reply

Your email address will not be published.