Breaking news: புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியில் இருந்து இம்முறை 100 மாணவர்கள் பல்கலைக்கு..!! எதற்கும் தளராத சிராஜுதீன் சாதித்தார்

· · 4427 Views

வெளியாகியுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பிரகாரம் புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியில் கடந்த வருடங்களை போன்று இம்முறையும்  அதிகமான மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர்.

sirajudeen

மேற்படி கல்லூரியிலிருந்து பொறியியல் துறைக்கு 09 மாணவர்களும், மருத்துவ துறைக்கு 07 மாணவர்களும் தெரிவாகியுள்ளானர். எம்.என்.எப். நஸ்ரா உயிரியல் பிரிவில் 03 ஏ சித்திகளையும், எஸ்.எல்.எம்.எஸ். நுஸ்லான் மௌலானா பௌதீக விஞ்ஞான பிரிவில் 02 ஏ, பீ சித்திகளையும் பெற்றுள்ளனர்.

190 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியதில், வெளியாகியுள்ள பெறுபேறுகளின் பிரகாரம் 100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பல்கலை கழக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கல்லூரி முதல்வர் ஐ.எல். சிராஜுதீன் தெரிவித்தார்.

science-coloeg-students

கால்நடைத் தொழுவம் போலும்  தென்னை  ஓலையிலான ஒரு குடில்,  தட்டைத் தகரக் கூரையைக் கொண்ட ஒரு தற்காலிக அமைப்பு,   இன்னுமொரு தேசிய பாடசாலையின் கைவிடப்பட்ட விடுதிச் சாலை,  உணவுக் கூடம்,  ஒரு அதிபர் விடுதி. இவைகளைக் கொண்ட  ஒரு   கொத்தணிதான் புத்தளத்தின் புகழ் பூத்த  ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி.

அங்கிருந்துதான்  ஒரு மாணவன்  அனைவரினதும் புருவங்களை உயர வைத்து அகில இலங்கை மட்டத்தில் உயிரியல் பாடத்தில் இரண்டாம் நிலையில் 2015 ஆண்டு உயதர் தரப் பரிட்சையில் சித்தியடைந்தான்.

புத்தளத்தின் என்றுமே சர்ச்சைக்குரிய அரசியல் பிரமுகரான முன்னாள்  கால்நடை வள அபிவிருத்தி  பிரதி அமைச்சரும், முன்னாள் புத்தளம்  நகர பிதாவுமான கே.ஏ. பாயிஸின் புதுமைக் கருத்தினால் தோற்றுவிக்கப்பட்டதே புத்தளம் நகரத்தின் ஜனாதிபதி விஞ்ஞான பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூசி சனூன்

5 comments

  1. Alhamdulillah..you did it SCIENCE COLLEGE… WELL DONE…👍👍👍👍👍 But what are the others students of…science stream going to do…if they could not enter the university..do we have any other plans or career guidance to show them…how can we show them a path..and we also have got..an open university.luckily…got by our former chairman….but there are not any biological or physical science..stream courses available here..students have to travel to Colombo..Anuradhapura regional centres to learn such courses…when are we going to have our own university here…worried about the situation…of..PUTTALAM..

Leave a Reply

Your email address will not be published.