Breaking news : தனது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்தவருக்கு 56 ஆண்டுகள் சிறை..!! புத்தளம் நீதவான் அதிரடி

· · 1071 Views

தன்னுடைய சொந்த மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தையொருவருக்கு 56 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புத்தளம் உயர் நீதிமன்ற நீதிபதி காந்த  மத்தும  பட்டபெந்திகே   இந்த   தண்டனையை   விதித்துள்ளார். தனது 14 வயதான   மகளை   வன்புணர்வுக்கு    உட்படுத்தியதாக    ஒப்புக் கொண்ட   தந்தை ஒருவருக்கு 56 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

புத்தளத்தைச் சேர்ந்த முஸ்பிக் மொஹமட் யாகூப் மொஹமட் முஸ்பி என்ற 41 வயதான நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

இந்த  தண்டனைக்கு  மேலதிகமாக தலா நான்கு லட்சம் ரூபா அபராதத்தையும், ஐந்து லட்சம் ரூபா நட்ட ஈட்டையும் வழங்க வேண்டுமென குறித்த நபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  புத்தளம் பொலிஸார் இந்த வழக்கினை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.