
Breaking : நான் மனசாட்சிக்கு விரோதமாக கே.ஏ. பாயிசுக்கு வாக்களித்தது புத்தளம் மக்களின் எதிர்ப்பார்ப்புகளுக்காகத்தான்..!! ஐக்கியத் தேசியக் கட்சி உறுப்பினர் மனம் திறந்தார்
· · 2466 Viewsநேற்று இடம் பெற்ற தலைவர் தெரிவின் போது, தான் சமூகத்தின் எதிர்ப்பார்ப்புகளுக்கு மதிப்புக் கொடுத்ததாக புத்தளம் நகர சபையின் ஐக்கியத் தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் புத்தளம் டுடேக்கு. தெரிவித்தார்
“நான் கட்சியின் நீண்ட நாள் சந்திப்புக்கள், அறிவுறுத்தல்கள், கட்டளைகள் என்பவற்றை மீறியே கே.ஏ. பாயிசை ஆதரித்தேன் . இது உண்மையில் மனசாட்சிக்கு விரோதமான ஒரு செயல்தான். என்றாலும் அந்த நேரத்தில் எனக்கு வேறு ஒரு வழியும் இல்லாது பொய் விட்டது.
” நான் இதற்காக சங்கடப்படவில்லை. நான் ஐக்கியத் தேசியக் கட்சி உறுப்பினர் என்றாலும் கூட ஒரு சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய மிக முக்கியமான முதலாவது பணியை செய்தேன். பாயிஸ் தோற்றுப் போயிருந்தால் எனது கட்சி ஆட்சியமைத்திருக்கும்.என்றாலும் அது நீண்ட கால வரலாற்றுத் தவறாக இருந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.இப்போது அவருக்கு அவர் இடை நடுவில் விட்டுச் சென்றுள்ள பணிகளை தொடர முடியும். புத்தளத்தின் பெரும்பான்மை முஸ்லிம் , தமிழ் வாக்காளர்கள் இதன் காரணமாகவே அவருக்கு வாக்களித்துள்ளார்கள்.
நேற்றைய வெற்றி என்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தனித்த வெற்றியல்ல. அது பாயிஸ் என்ற தனி மனிதனுக்காகவும், புத்தளம் மக்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பார்ப்புக்காகவும் மனசாட்சிக்கு அப்பால் சென்று ஐக்கியத் தேசியக் கட்சிக்காரர்ரான என்னாலும் ஈட்டப்பட்ட வெற்றியாகும்.
என்றாலும், இதற்குப் பிறகான சபை நடவடிக்கைகளில் நான் நிச்சயம் எனது கட்சியின் வழிகாட்டுதலில் ஈடுபடுவேன். ஆதரிக்க வேண்டிய விடயங்களை ஆதரித்தும் எதிர்க்க வேண்டியவைகளை எதிர்த்தும் எனது மக்கள் பணியை முன்னெடுக்க உள்ளேன் என அவர் கூறினார்.
புத்தளம் டுடேயானது இந்த செய்தியில் எனது பெயரை வெளியிடாமல் இருக்கும் பத்திரிகை தர்மத்தை கடைப் பிடிக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவிக்கத் தவறவில்லை.
- மிபவ்