Breaking : தனது செயலாளர் பதவியை ராஜினாம்ச் செய்தார் கபீர் ஹாசீம் !! One down

· · 420 Views

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை அமைச்சர் கபீர் ஹாசிம் ராஜினாமா செய்துள்ளார். கட்சியில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்களை கருத்திற்கொண்டு, புதியவர் ஒருவரை நியமிப்பதற்கு இடமளித்து அவர் ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

தமது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (வியாழக்கிழமை) காலை கையளித்துள்ளார்.

 

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் உள்ளிட்ட சகல பொறுப்புக்களும் மாற்றப்பட வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

 

 

அதற்கிடையில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட நிலையில், அதற்குபு் பின்னர் கட்சியில் மறுசீரமைப்பு ஏற்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த பிரேரணையை தோற்கடித்து கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு வழிகோலும் வகையில் கபீர் ஹாசிம் கட்சிப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

One comment

  1. நான் ஐ.தே.க 1976 ஆண்டு.கட்சியில் உருப்பினார். 1977ம் ஆண்டு கட்சியை வெற்றி பெற செய்தோம் .ஆனால் ஸ்ரீ.கொண்டாவில் இருந்தது கடிதங்கள் வருவது இல்லை..puttalam../கணமுலை ஐ.தே.க.செயலாளர்..சிலர் பஸ்bus க்கு போட்மாத்துவதுபோல் மருகின்ர்கள்.எங்கள் குடும்பங்கள் இறக்கும் வரைக்கும். ஐ.தே.க.தான்.எனவே பழைய பெயரை புதிதாக பதிவு செய்து உருப்பிர்பட்டியளில் செர்த்து கடிதம் அனுப்பவும். நன்றி. நீங்கள் செயலாளர் பதவி விட்டு நிங்குவதுப்பற்றி கவழையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.