Breaking : குருநாகல், புத்தளம் ஏரியா பொலீஸ் அதிகாரிகள் மத்திய மாகாணத்திற்கு மாற்றம்..!! கலவரத்தை தடுக்காதவர்கள் பொலீஸ் தலைமையகத்திற்கு

· · 1074 Views

மத்திய மாகாணத்தில் தற்பொழுது கடமையாற்றி வரும் உயர் பொலிஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

 

 

அண்மையில் கண்டி தெல்தெனிய மற்றும் திகன சம்பவங்களின் போது பொலிஸார் உரிய முறையில் தமது கடமைகளை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

 

 

இவ்வாறு வன்முறைகளைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத உயர் பொலிஸ் அதிகாரிகள் பலர், தண்டனை அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

 

 

வடக்கிலும், வடமேல் மாகாணத்திலும் கடமையாற்றி வரும் உயர் பொலிஸ் அதிகாரிகள் மத்திய மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.மேலும், மத்திய மாகாணத்தில் உயர் பதவி வகித்து வரும் பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் தலைமையகத்திற்கு மீள அழைக்கப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.