Big Bad Wolf : 15 இலட்சம் புத்தகங்களுடன் கொழும்பில் உலகின் பெரும் கண்காட்சி ஆரம்பம் !! 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை விலைக் கழிவு

· · 544 Views

உலகின் மிகப் பெரிய புத்தக கண்காட்சியாக கருதப்படும் Big Bad Wolf புத்தக கண்காட்சி முதற்தடவையாக இலங்கையில் நடைபெறுகின்றது.

 

 

 

 

கொழும்பு கண்காட்சிகள் மற்றும் மாநாட்டு மண்டபத்தில் கல்வி அமைச்சர் அகிலவிராஸ் காரியவசம் தலைமையில் நேற்று ஆரம்பமான இந்த கண்காட்சி எதிர்வரும் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

 

 

இந்த புத்த விற்பனை 24 மணி நேரமும் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

புகழ்பெற்ற 20   ஆயிரம் புத்தகங்கள் உட்பட 15 இலட்சம் புத்தகங்கள் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரையிலான விலைக்கழிவு இதற்காக வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.