Alert news : “வெசாக் கொண்டாட்டங்களின் போது முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துங்கள் !! முஸ்லிம் தலைவர்களிடம் வேண்டுகோள்

· · 493 Views

Basheer Segu Dawood


அவசரமாக ஜனாதிபதியையும், பிரதமரையும், சட்டமும் ஒழுங்கு அமைச்சரையும் சந்தித்து இம்முறை வெசக் மற்றும் பொசன் கொண்டாட்ட காலத்தின் பாதுகாப்பை வழமையாக பண்டிகை காலங்களில் வழங்கும் பாதுகாப்பை விடவும் பல மடங்காக அதிகரிக்குமாறும், இப்போதிருந்தே புலனாய்வுத் தகவல்களை திரட்டி பாதுகாப்புத் தரப்பை விழிப்படையுமாறும் கோருங்கள்.

 

 

 

 

ஏனெனில் இப்பண்டிகை காலத்தில் பௌத்த மக்கள் அதிகமாக வீதிகளில் கூட்டம் கூட்டமாகக் கூடுவார்கள். இத்தருணத்தில் அவர்களின் மீது முஸ்லிம்கள் போல் வேடமிட்ட பேரினவாதக் கும்பல்கள் தாக்குதல்களை மேற்கொள்ளலாம்.

 

 

இப்படிச் செய்துவிட்டு முஸ்லிம்கள் மீது மாபெரும் தாக்குதல்களைக் கட்டவிழ்க்க வாய்ப்புள்ளது. வதந்தித் தொழிற்சாலை வேகமாக வேலை செய்து நாடு தழுவிய அடிப்படையில் முஸ்லிம்களுக்கு எதிராக அப்பாவி பௌத்த சிங்களவர்களைத் தூண்டிவிடுவதற்கு திட்டங்கள் இருக்கக் கூடும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

 

 

அரசியல் நெருக்கடி என்ன வடிவெடுக்கும் என்பதை கணிப்பதும் கடினமாக உள்ளது.

 

 

தூண்டுவதற்கு சில விரல்களே போதுமானவையாகும்.ஏற்கனவே பற்றிக் கொண்ட தணல் இன்னும் தகதகத்துக் கொண்டிருக்கும் காலமிது. இந்த நெருப்பு மேடை மீது தேவையானவர்கள் எவரும் எரிபொருளை ஊற்றவும் கூடும்.

 

 

எனவே முன்னேற்பாடுகளைச் செய்வது எமது அரசியல் தலைவர்களது அவசியக் கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published.