ஆள் அரவமற்ற “மானாவரி” க்கு கார்பெட் ரோடு போட்டு அழகு பார்த்தார் பாலித ரங்கே பண்டா !!

· · 500 Views

புத்தளம், சிறாம்பியடி, மாணாவேரி பிரதேசத்தில் மிக நீண்ட காலம் கவனிப்பாரற்று கிடந்த பாதை, குறுகிய காலத்துக்குள்  காபட்  வீதியாக மாற்றப்பட்டுள்ளது.

 

 

 

இதனை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் (02) இடம்பெற்றது.

 

 

நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் முயற்சியின் பலனாக  அமைக்கப்பட்டுள்ள இந்த பாதையை, இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.

 

 

பாதையை காபட் வீதியாக மாற்றியமைத்தது மாத்திரமின்றி, அந்தப் பாதை மார்க்கத்துக்கான பஸ் சேவையொன்றையும் இராஜாங்க அமைச்சர் ஆரம்பித்துவைத்தார்.

 

 

புத்தளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அநுர குணவர்தன உள்ளிட்ட பிரதேச பொதுமக்கள் பலரும் இந்நிழ்வில் கலந்துகொண்டன

Leave a Reply

Your email address will not be published.