விருதோடையின் இளவரசன் : 8 A, சித்திகளைப் பெற்று விருதோடை முஸ்லிம் வித்தியாலய முஜீபுர் ரஹ்மான் வரலாறு படைத்தார் !!

· · 544 Views
கடந்த நள்ளிரவு வெளியான கல்விப் பொறுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின் படி புத்தளம் தெற்கு கோட்டம், விருதோடைப் பாடசாலை மாணவன் முஹம்மது முஜீபுர் ரஹ்மான் அதி திறமை சித்தி பெற்று பாடசாலைக்கும் கிராமத்துக்கு பெறுமை தேடித்தந்துள்ளதார். அவர்கள் 8 பாடங்களில் ஏ சித்தியையும், ஒரு பாடத்தில் எஸ் சித்தியையையும் பெற்றுள்ளர். 69 வருடங்கள் வரலாற்றைக் கொண்ட மதுரங்குளி – விருதோடை முஸ்லிம் வி்த்தியாலய பாடசாலை வரலாற்றில் மாணவன் ஒருவன் பெற்றுக் கொள்ள சிறந்த பெறுபேறு இதுவாகும். 
 
முஹம்மது முஜீபுர் ரஹ்மான் அவர்கள் ரெட்பானா சேர்ந்த அஹ்மது ஜலால்தீன் முஹம்மது ரூமி மற்றும் நூர் சித்தி சுஹுதா அவர்கள் செல்வப் புதல்வனாவார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இவரது சிறந்த எதிர்காலத்திற்காக உங்களது பிரார்த்தனைகளில் இவரையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
(தகவல் – ஜீஸான் முஹம்மது)

Leave a Reply

Your email address will not be published.