766 தேசியக் கல்லூரி ஆசிரியர்கள் இடமாற்றம்..!! கடிதம் அனுப்பியது கல்வி அமைச்சு – புத்தளம் சாஹிரா, கல்பிட்டி அல் அக்ஸா என்பனவற்றில் இடமாற்றம் இல்லை

· · 373 Views

இலங்கை முழுவதும் உள்ள தேசிய பாடசாலைளில் சேவை புரியும் 3766 ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி குறித்த ஆசிரியர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் இன்று (29) அனுப்பி வைக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

 

ஒரு பாடசாலையில் 10 வருட சேவைக் காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கே இவ்வாறு இடமாற்றம் குறித்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

இடமாற்றம் செய்வதற்கு அண்மையில் பாடசாலையொன்று காணப்படாமை, புரிந்துணர்வின் அடிப்படையில் உடன் மாற்றம் செய்துகொள்வதற்கும் உரிய ஆசிரியர்கள் காணப்படாமை ஆகிய காரணங்களின் போது, 10 வருடங்கள் நிறைவடைந்திருந்த போதிலும் இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.