75 வீத கட்டமைப்பைக் கொண்ட புத்தளத்தை ஒரு காத்தான்குடியாகவோ, பொத்துவில்லாகவோ மாற்ற பாடுபடுங்கள்..!! தனது வேட்பாளர்களுக்கு அமைச்சர் ரிஷாத் அறிவுரை

· · 1069 Views

ஏற்கனவே  எழுபந்தைந்து  சதவிகித கட்டமைப்பைக் கொண்ட புத்தளம் நகரை , இத்தேர்தலில்  வெற்றி பெறுவதன் மூலம்  ஒரு  காத்தான்குடி  போன்று..பொத்துவில்  போன்று  ஒரு  அழகிய  நகராக  மாற்றியமைக்க  பாடுபடுமாறு  அமைச்சரும்  அகில  இலங்கை  மக்கள்  காங்கிரஸ்  தலைவருமான  ரிஷாத்  பதியுதீன்  தனது  பிரதான  வேட்பாளர்களுக்கு  ஆலோசனை  வழங்கினர்.

 

 

நேற்று  இரவு  புத்தளம்  நுஹ்மான்  மண்டபத்தில்  அடம்  பெற்ற  வைபவமொன்றின்  போதே  இந்த  அறிவுரையை  வழங்கினார்.

 

 

 

முசலி  போன்று  காடுகளைக்  கொண்டிராத  ஏற்கனவே  75  சதவிகித  உள்ளக  கட்டமைப்பைக்  கொண்ட  புத்தளம்  நகரம்  இன்னும்  அழகிய  நகராகவும்  வட  மேல்  மாகாணத்தின்  ஒரு  சிறந்த  முன்மாதிரி  நகராகவும்  மிளிர  வேண்டும். இத்தேர்தலில்  கடுமையாக  உழைத்து  வெற்றி  பெற  பாடுபடும்  அதே  நேரம்  அதற்கான  கைம்மாறாக  உங்கள்  நகரையும்  மாற்றி  அமைக்க  பாடுபட  முன்வர  வேண்டும்  என்றும்  தெரிவித்தார்.

 

 

” வடக்கு  கிழக்குக்கு  வெளியில்  ஒரு  நகர சபைத்   தலைவர்  பதவியை  ACMC  க்கு  வழங்க  வேண்டும்  என்றும்  நாம்  பிரதமர்  ரணிலிடம்  கோரிக்கை  வைத்துள்ளோம். நாம்  விடுத்துள்ள  ஒரே  கோரிக்கை  இது  மாத்திரம்  தான். எனவே  சப்ரி  உற்பட  வேட்பாளர்கள்  தமக்கிடையில்  உள்ள  வேறுபாடுகளைக்  களைந்து  கட்சியின்  கோட்பாடுகளை  மதித்து  நடக்க  வேண்டும்  என்று  தெரிவித்த  அமைச்சர்  ரிஷாத்,

 

 

 

தனது  அமைப்பாளரும்  முதன்மை  வேட்பாளருமான  சபரியை  நோக்கி, அரசியல்  அனுபவம்  இல்லாத  சிறியவர்களின் ஆலோசனைகளைப்  புறந்தள்ளி   பந்து  சின்னம்  என  வரும்  செய்திகளுக்கு  முற்றுப்  புள்ளி  வைத்துவிட்டு  தமது  அணியை  வெற்றி  பெற வைக்க  பாடுபடுமாறு கேட்டுக்  கொண்டார்.தான்  மிகவும்  பிரயாசைப்பட்டு  ஐக்கியத்  தேசியக்  கட்சியிடம்  இருந்து  வட்டாரங்களைப்  பெற்றதாகவும்  அவர்  கூறினார்.

 

 

 

 

 

இந்தச்  சந்திப்பில்  கட்சியின்  உப  தலைவர்  எம்.எச்.எம். நவவி எம்.பி. முன்னாள்  எம்.பி. டாக்டர். இல்யாஸ், இலங்கை  ஜமாஅத்  இஸ்லாமியின்  முக்கியஸ்தரான  ஹிதாயத்துல்லாஹ்  அஜ்மல்,  நகர சபை  வேட்பாளர்களான  அமைப்பாளர்  அலி சப்ரி  ரஹீம்,  வை.எம். நிஸ்தாத், இளம்  வேட்பாளரான  முர்ஷீத் , மற்றும் ஐக்கியத் தேசியக்  கட்சி  வேட்பாளர்  பரூஸ்   அமைச்சரின்  புத்தளம்  அரசியல்  விவகார  ஆலோசகர்களான  முபாஸ், எம்.எச். முஹம்மது , எம்.ஏன்.எம். இப்ளால் ஆகியோரும்  கலந்துக்  கொண்டனர்.

 

One comment

  1. காத்தாங்குடி போன்ற duplicate பேரிச்சம் பழ நகரமா? வேண்டாம் ஸார். புதுசா கொட்டாங்காய் மரங்கள் மூலம் அழகு படுத்தப்பட்ட புத்தளம் நகர் தான் வேண்டும். திட்டம் கையில் உள்ளது. விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.