60 அடி நீளம், 30 அகலமான Sperm Whale திமிங்கிலம் கல்பிட்டியில் ஒதுங்கியது !! அம்பர் இருக்கும் என கல்பிட்டி வாசிகள் களத்தில்

· · 4675 Views
கற்பிட்டி, குடாவ கடற்கரையில் மிகப்பெரிய திமிங்கிலத்தின் உடல் ஒன்று நேற்று இரவு கரையொதுங்கியுள்ளது.
60 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட Spaem well என்ற பெயரில் அடையாளப்படுத்தும் இந்த திமிங்கிலத்தின் உடலில் காயம் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திமிங்கிலத்தின் உடல் ஆழ்கடலில் இருந்த ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் மிதந்து வந்துள்ளதாக மீனவ வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் 300க்கும் அதிகமோர் இணைந்து திமிங்கிலத்தின் உடலை வெளியே எடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த திமிங்கிலத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரிய அளவிலான இந்த திமிங்கிலத்தின் உடலினுள் பெறுமதியான ஏதோ ஒரு பொருள் உள்ளதாக மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை திமிங்கிலத்தின் எச்சங்கள் பல கோடி ரூபாய் பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் இதே கடற்பரப்பில் பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கலத்தின் அம்பர் எனப்படும் வாந்தி மீட்கப்பட்டிருந்தது.
கோடிக்கணக்கான பெறுமதியான அம்பரை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments

Leave a Reply

Your email address will not be published.