4 வயது பிரித்தானிய இளவரசர் ஜோர்ஜுக்கு I.S.I.S. கொலை அச்சுறுத்தல் !! பிரித்தானிய பொலீஸ் கடும் பாதுகாப்பு

· · 638 Views

உலக நாடுகளின் அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பல்வேறு தாக்குதல்களை உலகம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளிலும் ஐ.எஸ்.எஸ் இயக்கம் அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது.

 

 

இந்நிலையில், ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கொலைப்பட்டியலில் இங்கிலாந்து குட்டி இளவரசர் ஜார்ஜ் பெயரும் இடம் பெற்றுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

 

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ்-கேத் தம்பதியின் 4 வயது மகனான ஜார்ஜ் பெயரை, ஐ.எஸ் அமைப்பு தங்கள் இயக்கத்தின் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

ஐ.எஸ் இயக்கத்தின் அடுத்த இலக்கு குட்டி இளவரசர் ஜார்ஜ் தான் என்று அங்குள்ள புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, ஜார்ஜ் படிக்கும் பள்ளிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.