39.18 % கோட்டாயவுக்கும், 28.64% சஜித் பிரேமதாஸவுக்கும் அடுத்த ஜனாதிபதியாக வர வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்..!! 8.64 வீதத்தால் கீழிறங்கிய பிரதமர் ரணில் – கொழும்பு பல்கலை கணிப்பு

· · 439 Views

2020ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படப்போவது யார்? என்று தற்போதும் நாட்டில் பிரபல்யமாக உள்ள ஐந்து பேரின் பெயர்களை முன்னிலைப்படுத்திய கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகப்பிரிவு நடத்திய கருத்துக்கணிப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவார் என்று அதிகமானவர்கள் கூறியுள்ளனர்.

 

 

 

 

 

18 தொடக்கம் 35 வயதுவரையான 505 பேரிடம் நடத்திய இந்த விசேட கருத்துக்கணிப்பில் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க உள்ளிட்ட ஐவரின் பெயர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

 

இதில் 39.18வீதமானவர்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், 28.64வீதமானவர்கள் சஜித் பிரேமதாஸவுக்கும், 9.18வீதமானவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், 8.64வீதமானவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வுக்கும் வாக்களித்துள்ளனர்.

 

 

 

நாட்டில் செப்டெம்பர் முதல் நவம்பர் மாதம்வரையானக் காலப்பகுதியை இடம்பெற்ற அரசியல் நிலைமையைகளை அடிப்படையாக கொண்டே இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.