zahira-a

புத்தளம் பிராந்திய உதைப்பந்து சாம்பியன் ஆகியது புத்தளம் சாஹிரா தேசியப்பாடசாலை A அணி !!

· · 286 Views

( அப்துல் நமாஸ் )
– படங்கள் ஆசாத் ஆசிரியர் –  


ஸாஹிரா A அணி

zahira-a

இலங்கை பாடசாலை உதைப்பந்தாட்ட  சங்கத்தினால் நடாத்தபட்ட 13 வயதுக்கு கீழ்பட்டோருக்கான  கானிவெல் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை ஏ அணி  புத்தளம் பிராந்திய செம்பியன் அணியாக தெரிவாகியுள்ளது.

இன்று புத்தளம் ஸாஹிரா பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஐந்து பாடசாலை அணிகள் விளையாடின. ஒரு பாடசாலையிலிருந்து  இரு அணிகளை போட்டிக்காக அனுமதிக்கப்பட்டது.

ஸாஹிரா அணிக்கும் மணல்குன்று அணிக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸாஹிரா ஏ அணி 01 க்கு 0 என்ற கோல்  அடிப்படையில் மணல்குன்று பாடசாலை அணியை வென்று  புத்தளம் பிராந்திய  செம்பியன் அணியாக தெரிவாகியதுடன் அகில இலங்கை  கானிவெல் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.

இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட  சங்க பொருளாளர் எஸ்.ஆர்.எம். ஆசாதின் மேற்பார்வையில் இந்த போட்டிகள் இடம் பெற்றன.

மணல்குன்று பாடசாலை  அணி  

 தில்லையடி பாடசாலை அணி 

 உலுக்காப்பள்ளம் பாடசாலை அணி

 ஸாஹிரா B அணி 

Leave a Reply

Your email address will not be published.