3 வருடங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரு அமைச்சர் 50 கோடி ரூபாவுக்கு வீடு வாங்க முயற்சி !!

· · 1392 Views

தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், 500 மில்லியன் ரூபா பெறுமதியான அதிசொகுசு வீடொன்றை கொள்வனவு செய்யத் தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

 

 

 

இந்த வீடு புகழ்பெற்ற (ப்ளூ சீப்) நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டைக் கொள்வனவு செய்வதற்காக அமைச்சர் முயற்சித்துள்ளதாகவும், எனினும், இந்த வீட்டை அமைச்சருக்கு விற்பதை குறித்த நிறுவனம் நிராகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

 

 

 

 

 

குறித்த அமைச்சர் கடந்த மூன்று வருடங்களில் மிகவும் செல்வந்தர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 2015ஆம் ஆண்டிற்கு முன்னர் அவர் போக்குவரத்திற்கு மோட்டார் சைக்கிள் ஒன்றையே பயன்படுத்தியுள்ளார். அத்துடன், கடந்த பொதுத் தேர்தலில் தனது மாவட்டத்தில் படுதோல்வியடைந்த ஒருவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

 

 

 

விரைவில் இவர் குறித்த தகவல்களை வெளியிடவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published.