28ம் திகதி 3.00 மணிக்கு சபை கூடுகிறது : “மக்கள் என்னை நிராகரித்தாலும் கூட அல்லாஹ்வின் உதவியால் நானே நகர முதல்வர் !! அலி சப்ரி உறுதியாக கூறுகிறார்

· · 2622 Views

அல்லாஹ்வின் உதவியால் எதிர்வரும் 28 ம திகதி பகல் மூன்று மணிக்கு புத்தளம் நகர சபையின் தலைவராக நானே வீற்றிருப்பேன்  என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் புத்தளம் நகரசபையின்நியமனஅங்கத்தவருமான அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.

 

 

நடந்து முடிந்த தேர்தலில் நான் தோல்வியடைந்ததை  ஏற்றுக் கொள்கிறேன். அது மக்களின் தீர்ப்பு. இந்தத் தோல்வியோடு எனது அரசியல் முடிந்து விட்டது என்று சிலர் கனவு கண்டுக் கொண்டிருந்தார்கள். என்றாலும் கூட  நான் அல்லாஹ்வின் உதவியோடும் அவனின் நாட்டத்துடன் தற்போது நகர சபையின் உறுப்பினராகி விட்டேன்.

 

 

இதனைப் போலவே நான் எதிர்வரும் 28ம்முதலாவது நகர சபைக் கூட்டத்தின் போது தலைவராகவும் தெரிவாவேன். இது நிச்சயம் என அலி சபரி ரஹீம் தெரிவித்தார்.

 

 

 

நான் தலைவரான பின்னர் முன்னைய சபைத் தலைவர்களைப் போன்று எந்த ஒரு அடாவடித்தனங்களையும் அனுமதிக்கப் போவதுமில்லை , செய்யவும் மாட்டேன். எனது குறிக்கோள் புத்தளத்தை ஒரு நவீன நகரமாக அபிவிருத்தி செய்வதே. இதற்காக புத்தளத்தின் அனைத்து தரப்பினரும் எனக்கு மேலான ஆலோசனைகளைக் கூறி என்னை வழி நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

 

 

 

“நீங்களே அடுத்த தலைவர் என எதனை வைத்து கூறுகிறீர்கள்,  எப்படி சாத்தியப்படும்  எனக் கேட்ட போது,

 

 

“இன்ஷா அல்லாஹ்  சாத்தியப்படும்…அதனைப் பொறுத்திருந்துப் பாருங்கள். நான் நகர சபைக்கே வர முடியாத நிலையிலும் தற்போது அது சாத்தியமாகி இருக்கிறது. பொறுத்திருந்துப் பாருங்கள் அல்லாஹ்வின் உதவியால் நானே அடுத்த தலைவர் ”  என ஜனாப். சப்ரி தெரிவித்தார்.

 

 • மிபவ்

2 comments

 1. ஓட்டப் போட்டியில்
  ஓடி முதல் வந்தவர்களின்
  நிலைமை என்ன ?
  உங்களை மக்கள்
  நிராகரித்தும் உறுப்புரிமையினை
  தக்கவைத்ததற்கு நன்றி
  தலைமை பதவியினை
  ஏற்பற்கு மக்கள் ஆணையின்றி
  ஏற்பது நன்றன்றே….
  மக்கள் ஏற்க்கவு மாட்டார்கள்
  நியாயமற்ற அரசியல் போக்காககும்
  ஆணையினை பெற்றவர்கள்
  தலைமைத்துவத்திற்கு தகுதியானவர்கள்
  நன்றி….

 2. Alhamdulillah….
  வாழ்த்துக்கள்….. காத்திருந்த காலம் கனிகிறது…..
  இன்ஷா அல்லா….
  பூத்துக்குலுங்கும் புத்தெளில் பெறப்போகும் புத்தளம்

Leave a Reply

Your email address will not be published.