2018 ம் ஆண்டின் சிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூர் எயார் லைன்ஸ் தெரிவு..!!எமிரேட்ஸ், கட்டார் எயார்வேஸ் என்பன பின்னுக்கு தள்ளப்பட்டன

· · 219 Views
டிரிப் அட்வைஸர் (Trip Advisor) எனும் சர்வதேச பயணங்கள் திட்டமிடல் மற்றும் பயணச் சீட்டு முன்பதிவுகளுக்கான இணையதளம் கடந்த 12 மாதங்களில் விமானப் பயணிகள் வழங்கிய மதிப்பீடுகள், விமர்சனங்கள், தரவரிசைகளின் அளவைகள் மற்றும் தரங்களை அடிப்படையாக கொண்டு 2018 ஆம் ஆண்டிற்கான 10 சிறந்த விமான நிறுவனங்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது.
 
இந்த முதல் 10 சிறந்த விமான நிறுவனங்களில் 6 விமான நிறுவனங்கள் (Singapore Airlines, Japan Airlines, EVA Air and Korean Air) ஆசிய கண்டத்தை சேர்ந்தவை என்பதுடன் அவற்றில் 2 அரபுநாடுகளை (Emirates and Qatar Airways) சேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
எமிரேட்ஸ் கடந்த வருடம் முதலிடம் பெற்றிருந்த நிலையில் தற்போது மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது. கத்தார் ஏர்வேஸ் 8 ஆம் இடம் வகிக்கின்றது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.
 
TripAdvisor’s Travellers’ Choice awards பெற்ற உலகின் மிகச்சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியல்:
 
The 10 best airlines in the world for 2018 (according to TripAdvisor)
1.Singapore Airlines
2.Air New Zealand
3.Emirates
4.Japan Airlines
5.EVA Air (Taiwan)
6.Southwest Airlines (US)
7.Jet2.com (UK)
8. Qatar Airways
9. Azul (Brazil)
10. Korean Air
 
Source: Gulf News

Leave a Reply

Your email address will not be published.