2018 கல்வியியல் கல்லூரி நேர்முகப் பரீட்சையில் சித்தியடைந்த 4 ஆயிரத்து 745 ஆசிரிய மாணவர்கள் கல்லூரிக்கு இணைத்துக் கொள்ளப்படுவர் !! அரசாங்கம்

· · 250 Views

தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு இம்முறை 4 ஆயிரத்து 745 ஆசிரிய மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர். அவர்களுக்கான அனுமதி வரும் மே மாதம் இடம்பெறும்.

 

 

இவ்வாறு கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி ஆணையாளர் கே.என்.எச்.பண்டார தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

 

2017/2018 கல்வி ஆண்டில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஆசிரிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு அண்மையில் நேர்முகப் பரீட்சை இடம்பெற்றது.

 

2015ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு விண்ணப்பங் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டது.

 

அதில் 4 ஆயிரத்து 745 மாணவர்கள் ஆசிரியர் பயிற்சிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

 

ஆரம்பக் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடங்களுக்கு அதிகளவான மாணவர்கள் இம்முறை இணைக்கப்படுகின்றனர்.

 

அவர்களுக்கான அனுமதிக் கடிதங்கள் வரும் வாரங்களில் அனுப்பிவைக்கப்படும். புதிய மாணவர்களுக்கான கற்கை நெறிகள் வரும் மே மாதம் ஆரம்பிக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.