2017 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.சாதாரணதர பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் கவலையடைய தேவையில்லை என்கிறார் கல்வி அமைச்சர் !! அவர்களும் A/L படிக்கலாம்

· · 561 Views

கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.சாதாரணதர பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் கவலையடைய வேண்டாம் என கல்வி அமைச்சர் அகிலாவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

 

 

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

 

அனைத்து மாணவர்களும் தரம் 1 இல் இருந்து 13 வரை கல்வி கற்க முடியும் என கூறிய அவர் கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வருடத்தில் இருந்து புதிய தொழில்முறை கல்வி திட்டத்தை கொண்டுவரவுள்ளதாக கூறினார்.

 

 

அதன்படி, சிறந்த பெறுபேறுகளை பெறாத மாணவர்களில், 14 ஆயிரம் பேருக்கு, தொழில்முறை கல்வி திட்டத்தின் கீழ் உயர் தரம் செல்லமுடியும்.

 

 

இவை அனைத்தும் அடுத்த வருடம் முதல் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்புக்கள் வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.

 

 

அதுமட்டுமன்றி வெளியான கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய அடுத்த 2 வருடங்களில் கல்வியில் புரட்சியை ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.